குடிமங்கலத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.
உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.
Published on

மடத்துக்குளம்:

அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தின் சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை கொண்டாடும் விதமாக குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக சிவசக்தி காலனியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாசறை துணைச்செயலாளர் காரத்தொழுவு சுரேஷ்,செல்வராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் விஸ்வநாதன், ஐ.டி.விங் மாவட்ட தலைவர் சுப்பரமணியம், ஐ.டி.விங் ஒன்றிய செயலாளர் ஜாஹீர் உசேன் ,பெரியகோட்டை ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் இளம்பிறை எம்.சாதிக், நாகராஜ், கே.எஸ்.கே.செந்தில், ரத்தினசாமி, மணிகண்டன், மயிலாத்தாள் , பாரதி,பாபு, புஷ்பா, வரதராஜ், துரைசாமி, வைரவேல், மற்றும் கிளை கழக பொறுப்பாளர்கள் தங்கராஜ், நடராஜ் , மகாலட்சுமி , சென்டிரிங் சுப்பிரமணி , ராமசாமி , வேல்முருகன், காளிமுத்து , சிவசாமி, ஐ.டி. விங் நிர்வாகி எஸ்.ஷாஜகான் , கே.வினோத்குமார், எஸ்.ஈஸ்வரன்மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com