search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

    திருவாரூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
    • அதிமுக கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

    திருவாரூர்:

    தமிழக அரசுஅண்மையில் உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு காரணமாக மக்கள் மிகுந்த அல்லல் பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும் கூறி திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில், திருவாரூர் அருகே உள்ள புலிவலத்தில் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏ கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    அப்போது திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் மீறி விட்டதாகவும், ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்றும், மாறாக அதிமுக கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

    மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு பால் விலை உயர்வு போன்ற பல்வேறு சுமைகளை மக்கள் மீது வைத்துள்ள திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்

    திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரான காமராஜ் சிறப்புரையாற்றினார் இதில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் செந்தில் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

    இதுபோல் நன்னிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் முன்னாள் அமைச்சர் இரா காமராஜர் எம்எல்ஏ கலந்து கொண்டார் இதில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அரங்க.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.

    மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.கலியபெருமாள் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாஸ்கர், கொரடாச்சேரி பேரூர் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஜெகநாதன், விஸ்வநாதன், தாழை.செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், விலைஉயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×