search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வில்  இணைய பலரும் முன் வந்துள்ளனர் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேச்சு
    X

    ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேசிய காட்சி.

    அ.தி.மு.க.வில் இணைய பலரும் முன் வந்துள்ளனர் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேச்சு

    • தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    உடுமலை :

    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டஅ.தி.மு.க. செயலாளர் மகேந்திரன் தலைமையில் உடுமலை சட்டமன்ற தொகுதி கண்ணமநாயக்கனூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடாவுமான எஸ். பி., வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:- அ.தி.மு.க. உருவாகி 50 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றும் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது .குறிப்பாக எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்களால்ஏழை எளிய மக்கள் அதிகம் பேர் பயன்பெற்றுள்ளனர். 17 லட்சம் உறுப்பினர்கள் மூலம் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் மூலம் ஒன்றரை கோடி அதிமுக., தொண்டர்களுடன் கட்சி வீர நடை போட்டது. பின்னர் அம்மாவின் ஆசி பெற்ற தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    திமுக. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல நல்ல திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார். தற்சமயம் திமுக. அரசு இரண்டு ஆண்டு சாதனை என பொதுக்கூட்டங்கள் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் இடையே கடும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக. ஆட்சி காலத்தில் எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றார். மொத்தத்தில் எதுவும் தெரியாத முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனாவை முழுவதும் கட்டுப்படுத்தியது. அதிமுக. ஆட்சிக் காலத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் ,ஆனைமலை நல்லாறு திட்டம் போன்ற முக்கியமான திட்டங்களை நிறைவேற்றியது. குறிப்பாக ஏழை எளிய மக்கள் மருத்துவரின் கனவு நிறைவேறாமல் இருந்த நிலையில் இட ஒதுக்கீடு அறிவித்த நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் தற்போது மருத்துவராகியுள்ளனர். சட்டமன்ற தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் பல்வேறு தில்லுமுல்லு செய்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது .

    சட்ட மன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக. ஆட்சி அமைக்கப்படுவது உறுதி. பல்வேறு கட்ட சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு எடப்பாடியார் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுக.வில் இணைய பலரும் முன் வந்து உள்ளனர். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேலாக உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளதால் உறுப்பினர் சேர்க்கைையை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சார்பில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ,பேரூர் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×