search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman jewelry snatch"

    மதுரை அருகே வாடகைக்கு வீடு தர மறுத்த முதியவரின் மனைவியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விளாங்குடி டெம்சி காலனியைச் சேர்ந்தவர் ராமையா (வயது 70). இவரது வீட்டின் கீழ்த்தளத்தில் தினேஷ் என்பவர் மனைவியுடன் குடியிருந்தார்.

    இவர் சரிவர வாடகை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து வீட்டை காலி செய்யுமாறு கூறவே, தினேஷ் காலி செய்தார். அதன் பிறகு அவர் அந்தப்பகுதியில் வீடு தேடி அலைந்தார். கிடைக்கவில்லை.

    எனவே தினேஷ் மீண்டும் ராமையாவை சந்தித்து தனக்கு வீட்டை வாடகைக்கு தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    இந்த நிலையில் ராமையா, மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தினேசும், அவரது கூட்டாளியும் கணவன்-மனைவியை வழிமறித்து வீடு தருமாறு கேட்டனர். அதற்கு ராமையா மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த தினேசும், கூட்டாளியும் ராமையா மனைவி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை அருகே நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள கீழகள்ளந்திரியைச் சேர்ந்தவர் நந்தீஸ்வரன். இவரது மனைவி பவித்ரா (வயது 25). நேற்று கணவன்- மனைவி இருவரும் அழகர் கோவில் சாலையில் உள்ள திருவிழான்பட்டியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள், பவித்ரா அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர் அருகே உள்ள சின்னசூரக்குண்டைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி அய்யம்மாள் (50). இவர் பெரிய சூரக்குண்டு கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நடந்த அன்னதானத்தில் பங்கேற்று உணவு சாப்பிட்டார்.

    அப்போது அருகில் இருந்த மர்ம நபர், அய்யம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார்.

    இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண்களிடம் நகை பறித்த மதுரையைச் சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை பெத்தானியாபுரம், சாமிக்கண்ணு தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 40). இவர் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு முத்து, மனைவி முருகேஸ்வரியுடன் வெளியூர் செல்வதற்காக ஆலம்பட்டி பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது 3 வாலிபர்கள், இருவரையும் சுற்றி வளைத்தனர். முருகேஸ்வரி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதில் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கதறிய பெண்ணை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள எஸ்.புளியம்பட்டி டாஸ்மாக் கடையில் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த சதீஷ்ராஜா (23), ஐராவதநல்லூர் ஸ்டீபன் ராஜ் (18), சக்கிமங்கலம் அருண்பாண்டியன் (25) ஆகிய 3 பேரும் மது குடித்துக் கொண்டிருந்தனர்.

    சந்தேகத்தின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார், அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முருகேஸ்வரியிடம் நகை திருடியது தெரியவந்தது. மேலும் நடந்த விசாரணையில் 3 பேர் மீதும் மதுரை அண்ணாநகர், புதூர், கீரைத்துறை, தெப்பக்குளம், விளக்குத்தூண் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன என்பது தெரிந்தது.

    இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

    தேவதனப்பட்டியில் பெண்களிடம் நகை, பணம் பறிக்கும் கும்பல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பீதி அடைந்துள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகில் உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த நபர்கள் வந்தனர்.

    இதனை கண்ணாடியில் பார்த்து சுதாரித்த பாலமுருகன் தனது பைக்கை மெதுவாக ஓட்டி வந்தார். தனியார் கல்லூரி அருகே வந்தபோது திடீரென அவரது மனைவியின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றனர். உடனே பாலமுருகன் அவர்களை தட்டி கீழே விழ செய்தார். இருந்தபோதும் வழிப்பறி கும்பல் மோட்டார் சைக்கிளில் நாகம்பட்டி பிரிவு வழியாக தப்பித்து ஓடிவிட்டனர்.

    தேவதானப்பட்டி அருகில் உள்ள புல்லக்காபட்டியை சேர்ந்தவர் சாந்தி (வயது30). இவர் சம்பவத்தன்று பெரிய குளத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக அரிசி கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து ஏறினார்.

    அதே பஸ் ஸ்டாப்பில் 2 பெண்கள் ஏறி உள்ளனர். அதில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் இருந்துள்ளார். அவர்கள் லட்சுமிபுரத்திற்கு டிக்கெட் எடுத்தனர். சாந்தி முன்னதாக இறங்க முயன்றபோது கூட்ட நெரிசலில் அந்த பெண்கள் அவர் பையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டனர்.

    பெரியகுளத்தில் இறங்கி பார்த்தபோது தனது பணம் மற்றும் செல்போன் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்து மீண்டும் ஆட்டோவில் ஏறி அந்த பஸ்சில் பார்த்தார். ஆனால் அந்த 2 பெண்களும் இல்லை.

    தேவதானப்பட்டி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்ற கருவூல அதிகாரியின் மனைவியிடம் நகை பறிக்கப்பட்டது. இதேபோல சினிமா தியேட்டர் அருகிலும், பாலிடெக்னிக் அருகிலும் அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. ஆனால் கொள்ளையர்கள் யாரும் பிடிபட வில்லை.

    ஆண்களை போலவே பெண்களும் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே போலீசார் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தேனி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள கோவிந்தநகரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் இளைய ஆழ்வார். இவரது மனைவி பத்மாவதி. இவர் அதே பகுதியில் பால்பூத் வைத்துள்ளார். சம்பவத்தன்று அதிகாலை பால்பூத்தை திறப்பதற்காக பத்மாவதி நடந்து சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் பத்மாவதி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செயினை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு மூலப்பாளையத்தில் நடந்துசென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் என்.ஜி.ஓ. காலனி வீதியில் நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 2 பவுன் செயினை திடீரென பறித்து கொண்டு மின்னலாய் மறைந்தான்.

    அந்த பெண் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த ஆசாமி மாயமாகிவிட்டான். அவனுக்கு 20 வயதிலிருந்து 25 வயதுதான் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    சம்பவம் நடந்த இடம் அருகே ரோட்டோரம் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது. அந்த கடையின் வெளியே உள்ள சி.சி.டி.வி. கேமராவில் வழிப்பறி ஆசாமியின் உருவம் பதிவாகி இருக்கும் அதை பார்த்து குற்றவாளியை பிடித்து விடலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஊமச்சிக்குளம் அருகே பெண் காசாளரிடம் நகை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    ஊமச்சிக்குளம் அருகே உள்ள ஆலாத்தூர் என்.எம்.எஸ். நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி பாக்கியதாய் (வயது 45). கூலபாண்டி சந்திப்பில் உள்ள தனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) காசாளராக உள்ளார்.

    நேற்றிரவு இவர் மொபட்டில் கடச்சனேந்தலுக்கு சென்று கொண்டிருந்தார்.

    ஆலாத்தூர் அருகே கியாஸ் கம்பெனி எதிரில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பாக்கியதாயின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக ஊமச்சிக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு வழக்குப்பதிவு செய்து நகை பறித்த கும்பலை தேடி வருகிறார்.

    மதுரை பகுதியில் நகைப்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலீசார் விரைந்து செயல்பட்டு வழிப்பறி கும்பலின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை அருகே கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் சின்னாத்தேவர். இவரது மனைவி ராணி (வயது 55). இவர் மதுரை மாவட்டம், நாட்டார் மங்கலத்தில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

    அவர் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ராணி கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே உள்ள நடுமுதலைக்குளத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மனைவி கழுவாயி (70). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கழுவாயி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 5 பெண்களிடம் 50 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Jewelrysnatch

    சென்னை:

    சென்னை நகர், புறநகர் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் மற்றொருபுறம் நகை பறிப்பில் ஈடுபடும் மர்ம கும்பல் எந்தவித அச்சமும் இன்றி கைவரிசை காட்டி தப்பிச் சென்றுவிடுகின்றனர்.

    சென்னையில் நேற்று காலை ஒரே நாளில் 3 மணி நேரத்தில் அடுத்தடுத்து 5 பெண்களிடம் 50 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அசோக் நகர் 7-வது அவென்யூவை சேர்ந்தவர் வசுந்தரா. நேற்று காலை 7 மணி அளவில் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள வசுந்தரா அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு  கேமிராவில் பதிவாகி உள்ளது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் தியாகராயநகர், பாண்டி பஜாரில் ஸ்ரீமதி என்பவரிடம் 11 பவுன் நகையை பைக்கில் வந்த மர்ம கும்பல் பறித்தனர்.

    இதேபோல் கே.கே.நகர், வன்னியர் தெருவில் பாத்திமா என்பவரிடம் 10 பவுன் நகை, வளசரவாக்கத்தில் சாந்தகுமாரியிடம் 9 பவுன் நகை அண்ணாநகர், 10-வது மெயின் ரோட்டில் ஜெசி மனோகரன் என்பவரிடம் 5 பவுன் நகையையும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துள்ளனர்.

    இந்த 5 நகை பறிப்பு சம்பவங்களும் காலை 7 மணி முதல் 9 மணிக்குள் அடுத்தடுத்து நடந்துள்ளது. எனவே நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    நகை பறிப்பு சம்பவத்தை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Jewelrysnatch

    கோவை நகரில் பெண்களை குறி வைத்து நகைபறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை போத்தனூர், ராமநாதபுரம் பகுதிகளில் பெண்களை குறி வைத்து நகைப்பறிப்பில் கும்பல் ஈடுபட்டது. மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க உதவி கமி‌ஷனர் சோமசுந்தரம் மேற்பார்வையில் தனிப் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    விசாரணையில் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது. போத்தனூரை சேர்ந்த விக்னேஷ் (வயது 20), மணிகண்டன் (19) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் போத்தனூர், ராமநாதபுரம் பகுதியில் 5 பெண்களிடம் நகைப் பறித்ததை ஒப்புக் கொண்டனர்.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்து 15 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    திருமங்கலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை, ஸ்கூட்டரில் வந்த மர்ம மனிதர்கள் பறித்துச் சென்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் நாகசாமி நகரைச் சேர்ந்தவர் செல்வக் குமார். இவரது மனைவி சித்ரா (வயது 40). இவர் தனது மகள் மற்றும் சகோதரியுடன் திருநகர் வந்து விட்டு ஊருக்கு திரும்பினார்.

    திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு 3 பேரும் நடந்து சென்றனர். பெருமாள் கோவில் அருகே சென்றபோது ஸ்கூட்டரில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சித்ரா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர்.

    அதிர்ச்சியடைந்த சித்ரா உள்பட 3 பேரும், திருடன்... திருடன்.. என கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வருவதற்குள், நகை பறித்த திருடர்கள் மின்னலாக மறைந்து விட்டனர்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில், சித்ரா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் பகுதியில் ஸ்கூட்டரில் வந்து கடந்த 2 மாதத்தில் மட்டும் 4 முறை மர்ம மனிதர்கள் நகையை பறித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

    மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், பொது மக்களுக்கு சந்தேகம் வராத வகையில் தற்போது பெண்கள் பெருமளவில் ஓட்டும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

    ஊரப்பாக்கத்தில் அழகு நிலையம் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    சென்னையை அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் அனிதா (32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    நேற்றிரவு 7 மணியளவில் அலங்காரம் செய்வதற்காக ஊரப்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் அங்கிருந்து வெளியே வந்தார்.

    அவர் நடந்து சென்றபோது திடீரென 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தனர்.

    அவரது கையில் இருந்த விலை உயர்த்த செல் போனையும் பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். அவர் கூச்சல் போட்டதையடுத்து அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர்.

    அதற்குள் வழிப்பறி திருடர்கள் இருவரும் 2 மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த வாலிபர்களுடன் தப்பி செல்ல முயன்றனர். பொதுமக்களில் சிலர் அவர்களை விரட்டிச் சென்றனர்.

    சிறிது தூரத்தில் வழிப்பறி திருடர்களை பொதுமக்கள் வழிமறித்து பிடித்தனர். அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் பெண்ணிடம் நகையை பறித்த அந்த கும்பல் பல்லாவரம் அனகாபுத்தூரைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    ராஜ்குமார் (28), விமல்ராஜ் (23), கோகுலகிருஷ்ணன் (33), அபிராமன் (31) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வழிப்பறி செய்யப்பட்ட தாலி செயினும், செல்போனும் பொதுமக்களின் உதவியால் அந்த பெண்ணிற்கு கிடைத்தன. சரியான நேரத்தில் துணிச்சலான செயலில் ஈடுபட்ட அப்பகுதி மக்களை போலீசார் பாராட்டினர்.

    ×