search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman jewelry snatch"

    மதுரையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகையை 3 பேர் பறித்து சென்றனர்.

    மதுரை:

    மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ராஜூ (வயது65). இவர் சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் தினமும் அதிகாலையில் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ராஜூ மாட்டுத் தாவணிக்கு புறப்பட்டார்.

    அப்போது கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் இருவரும் டீக்குடித்தனர். அங்கு வந்த 3 வாலிபர்கள் அவர்களிடம் முகவரி கேட்டு விட்டு சென்றனர்.

    டீக்குடித்த பின் கணவன்- மனைவி இருவரும் மாட்டுத் தாவணிக்கு புறப்பட்டனர். சிப்கோ அருகே சென்றபோது முகவரி கேட்ட 3 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து ராஜூவின் மனைவி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    மதுரை அருகே பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கருப்பாயூரணி பொன்னி நகரைச் சேர்ந்த கருப்பையா மனைவி சாந்தி (வயது 48). இவர் நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மதுரை- சிவகங்கை ரோட்டில் கருப்பாயூரணி மின்வாரிய அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாந்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    இது தெடர்பாக காந்தி கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப் பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    புளியங்குடி அருகே தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள பட்டகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கனகவள்ளி (வயது 24). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து கனகவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதையடுத்து கண்விழித்த அவர் செயினை இறுக்கமாக பிடித்து கொண்டார். இதில் செயின் 2 பகுதியாக துண்டானது. இதில் 2 பவுன் நகையுடன் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து கனகவள்ளி புளியங்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    கடந்த மாதம் புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்குளம் பகுதியில் இதே போன்று இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

    திருச்சி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி திண்ணியம் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன். இவரது மனைவி சாந்தி (வயது 40) விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சியில் பொருட்களை வாங்கி விட்டு நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    மாந்துறை அருகே சென்ற போது அங்குள்ள டெப்போ முன்பு திடீரென பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் பின்னால் இருந்த வாலிபர் திடீரென சாந்தியின் கழுத்தில் கிடந்த செயினை பிடித்து இழுத்து பறிக்க முயன்றான்.

    அப்போது சாந்தி அவர்களுடன் போராடியதால் நிலை குலைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து ரோட்டில் விழுந்தார். இதை பார்த்ததும் செயின் பறிப்பு திருடர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.

    பைக்கில் இருந்து கீழே விழுந்த சாந்திக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. இருப்பினும் போராடி செயினை திருடர்களிடம் பறிகொடுக்காமல் காப்பாற்றிக் கொண்டார்.

    இந்நிலையில் திருச்சி ஏர்போர்ட் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் கீதா (52) நேற்று முன்தினம் செல்போன் பேசிக் கொண்டு வீட்டின் அருகே நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி விட்டான். இது குறித்து கீதா ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார்.

    ஏர்போர்ட், லால்குடியில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் திருச்சியில் நேற்று முன்தினம் இரவில் ஒரே நாளில் 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போயின.

    ஸ்ரீரங்கம், காந்தி மார்க் கெட், கண்டோன்மெண்ட், பாலக்கரை ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் பைக் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளனர். இதுவரை 25 மோட்டார் சைக்கிள்கள் மாநகரில் மட்டும் திருடப்பட்டுள்ளது.

    திருச்சியில் செயின் பறிப்பு திருடர்கள், மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை காட்ட தொடங்கியிருப்பது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கைதாகி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளி வந்துள்ள திருட்டு ஆசாமிகள் திருச்சியில் கைவரிசை காட்ட தொடங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சையில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலஅலங்கத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது43). இவரது மனைவி அழகுபாண்டியம்மாள்(37). இவர் சம்பவத்தன்று மொபட்டில் மருத்துவக் கல்லூரி சாலையில் சென்றார். மங்களபுரம் அருகே சென்றபோது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த 2½ பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதில் கீழே விழுந்து காயமடைந்த அழகுபாண்டியம்மாள் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூரில் பனியன் நிறுவன பெண் சூப்பர்வைசரிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பி.என்.ரோடு கோயம்பாளையத்தை சேர்ந்தவர் உமாராணி (47). இவர் அவினாசி சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் இவர் தனது வீட்டிற்கு சாப்பிட வந்தார். மாலை 4 மணியளவில் மொபட்டில் பனியன் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென உமாராணி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.

    நகையை பறி கொடுத்த உமா ராணி சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் நகை பறித்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப் பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா உள்ளது. அதில் வாலிபர் நகை பறிக்கும் காட்சி பதிவாகி இருக்கிறது.

    அதனை வைத்து நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருப்பூரில் நகை பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 9 இடங்களில் நகை பறிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் பெண்கள் பீதியில் உள்ளனர். நகை பறிப்பை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலெக்டர் அலுவலக பெண் ஊழியரிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவை வெள்ளலூரை சேர்ந்த ஜெகதீசன் என்பவரது மனைவி நிர்மலா (வயது 52). இவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் வெள்ளலூரில் வாரச்சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மலா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதற்குள் நகைபறித்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி நகைபறிப்பு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கடலூரில் இன்று பட்டப்பகலில் ஒரே நேரத்தில் தொடர்ந்து 4 பெண்களிடம் மர்ம மனிதர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் ஜெகதாம்பாள் நகரை சேர்ந்தவர் ஜெகதாம்பாள் (வயது 75). இவர் இன்று காலை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த மர்ம மனிதன் ஜெகதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தான்.

    அப்போது அந்த நகையை ஜெகதாம்பாள் பிடித்தார். இதனால் பாதி நகையை மட்டும் அறுத்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு நபருடன் ஏறிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதேபோல் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த அகிலபிரியா (33), கடலூர் கப்பியம்பேட்டை சேர்ந்த சங்கீதா (25), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெரு சேர்ந்த ஜோதி (19) ஆகிய 3 பேரும் தனித்தனியாக அந்தந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து செல்லும் போது மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிள் வந்து நகையை பறித்தனர்.

    ஆனால் இந்த நகை பறிப்பில் வண்டிபாளையத்தை சேர்ந்த அகில பிரியா நகையை மட்டும் பறித்து சென்றனர். இதில் சங்கீதா மற்றும் ஜோதி ஆகியோர் நகையை பிடித்து கொண்டதால் அவர்களிடம் இருந்து நகையை பறிக்க முடியவில்லை.

    இந்த நகை பறிப்பு சம்பவத்தில் மூதாட்டி ஜெகதாம்பாள் மற்றும் அகில பிரியா ஆகியோரிடம் இருந்து சுமார் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கடலூரில் இன்று பட்டப்பகலில் ஒரே நேரத்தில் தொடர்ந்து 4 பெண்களிடம் மர்ம மனிதர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பீளமேட்டில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    கோவை:

    கோவை பீளமேடு கருப்பராயம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கலைச்செல்வி(வயது 28). இவர் சித்ரா சந்திப்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மொபட்டில் சென்றார்.

    தொட்டிப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கலைச்செல்வி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.கே.நகரில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Jewelrysnatch

    கே.கே.நகர்:

    திருச்சி சுப்பிரமணியபுரம் பாரதி தெருவை சேர்ந்தவர் ‌ஷகிலா பானு. இவர் தனது தோழியுடன் அருகில் உள்ள கடைக்கு நேற்று மாலை நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ‌ஷகிலா பானு கழுத்தில் கிடந்த 3¼ பவுன் தங்க செயினை பறித்து சென்றார்.

    இது குறித்து கே.கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் மின்வாரிய பெண் ஊழியரிடம் 5 பவுன் நகையை பறித்து தப்பிய வழிப்பறி கும்பல் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விவேக் பிரியதர்சன். இவரது மனைவி ராஜலெட்சுமி (வயது 27) இவர், மின் வாரிய ஊழியர்.

    நேற்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பூலாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 4 பேர் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.

    இதுகுறித்து கருப்பாயூரணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு வழிப்பறி கும்பலை தீவிரமாக தேடினர்.

    இதையடுத்து மதுரை இளமனூரை சேர்ந்த பிரவீண்குமார் (16), சக்கி மங்கலம் சாரதி (17), ஆதீஸ்வரன், கார்த்திக் கண்ணன் (17) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. #jewelrycase #court

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கன்னங்குறிச்சி ஜட்ஜ் ரோடு, நடராஜன் நகரை சேர்ந்தவர் வெங்கட். இவரது மனைவி அனுஷா (வயது 24). இவர் 27-5-2013 அன்று கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அனுஷா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடினார்.

    இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி அனுஷாவிடம் நகையை திருடிய சேலம் பொன்னம்மாபேட்டை புதுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் சி.ஜே.எம். கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    நீதிபதி திருஞாணம் வழக்கை விசாரித்து மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். #jewelrycase #court

    ×