search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman jewelry snatch"

    மதுரையில் 2 பெண்களிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம், எம்.கே.புரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரது மனைவி அனுசியா (வயது 21).

    இவர் நேற்று இரவு 7 மணிக்கு அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அனுசியா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பட்டி ஆர்.எம். எஸ்.காலனி அழகுமலையான் நகரைச் சேர்ந்தவர் நெல்சன் (49). இவர், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், நெல்சனின் மனைவி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடி அருகே ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ராகினி (வயது 65). கணவன்-மனைவி இருவரும் கோவையில் நடைபெறும் யோகா பயிற்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் வெஸ்ட்கோட்ஸ் ரெயிலில் சென்றுள்ளனர்.

    காட்பாடி ரெயில்நிலையத்தில் நின்று பயணிகள் இறங்கியதும் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ராகினி பயணம் செய்த அதே பெட்டியில் பயணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி, ராகினி கழுத்தில் கிடந்த 16 பவுன் செயினை பறித்துக்கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பிச்சென்றுவிட்டார். ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்குவந்ததும் இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ராகினி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமியை தேடிவருகிறார்.

    திருப்பூர் அருகே பனியன் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகர் இ.பி. காலனியை சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது மனைவி நித்தா (27). அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் அக்கவுண்டண்ட் ஆக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு நடந்து சென்றார். பழனிசாமி நகரில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நித்தா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர்.உடனே சுதாரித்து கொண்ட நித்தா செயினை இறுக்கி பிடித்தார். இதில் செயின் அறுந்து 3 பவுன் நித்தாவிடமும், மற்ற 3 பவுன் வாலிபர்களிடமும் சிக்கியது. நித்தா சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.அதற்குள் 2 வாலிபர்களும் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு நகை பறித்த 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.

    காட்பாடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர்.

    வேலூர்:

    காட்பாடி சில்க்மில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மனைவி சாந்தி (வயது 45). காட்பாடி பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளனர்.

    நேற்று இரவு 11.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.தாயுமானவர் தெருவில் சென்றபோது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்ட தம்பதி கூச்சலிட்டனர்.

    அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக காட்பாடி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காட்பாடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து பெண்களை கட்டிப்போட்டு 35 பவுன் நகையை வடமாநில கும்பல் கொள்ளையடித்து சென்றனர். தொடர் சம்பவங்களால் காட்பாடியில் திருட்டு பீதி ஏற்பட்டுள்ளது.

    பெரியபாளையம் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள பனையஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் ஆரணி பஜார் வீதிக்கு வந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை பறித்து தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் விசாரணை செய்து வந்தனர்.

    இதுதொடர்பாக திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த பலராமன், மணிகண்டன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 2 பேரையும் போலீசார் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    தென்காசி அருகே தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியை அடுத்த அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சங்கரம்மாள் (வயது33). நேற்று அதிகாலை இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கோட்டைச் சுவற்றை ஏறி குதித்து உள்ளே நுழைந்த வாலிபர், சங்கரம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை இழுத்து அறுத்தார்.

    அப்போது சங்கரம்மாள் விழித்து கொண்டதால் செயினை பிடித்து கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டார். ஆனாலும் கொள்ளையன் செயினின் ஒரு பகுதியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டான். இதில் 23 கிராம் எடையுள்ள பகுதி கொள்ளையனின் கையில் சிக்கி விட்டது. மீதமுள்ள 9 கிராம் எடையுள்ள செயின் சங்கரம்மாள் கையில் இருந்தது.

    உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொள்ளையனை விரட்டி சென்று தேடினார்கள். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சங்கரம்மாள் ஆய்க்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    மதுரையில் 2 பெண்களிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை தெப்பக்குளம் புதுராம்நாட் ரோட்டைச் சேர்ந்தவர் சேதுராமன். இவரது மனைவி பானுமதி. இவர் நேற்று மொபட்டில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பானுமதியை பின்தொடர்ந்தனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பானுமதியை மறித்து கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    தத்தனேரி மெயின் ரோட்டில் உள்ள காமாட்சி நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஜெயப் பிரபா (வயது 33). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஜெயப்பிரபாவை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    2 சம்பவங்கள் குறித்தும் தெப்பக்குளம், செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அருகே காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பாலமேடு:

    மதுரை பாலமேடு அருகிலுள்ள கீழச்சின்னாம் பட்டியை சேர்ந்த பால்ராஜ் மனைவி பிச்சையம்மாள் (வயது 65). இவர் பாலமேடு சந்தைக்குச் சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். கீழச்சின்னம்பட்டி ரோட்டில் வந்தபோது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பிச்சையம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டார்.

    இது தொடர்பாக பிச்சையம்மாள் பாலமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையனை வலைவீசி தேடி வருகிறார்.

    வாழப்பாடி அருகே பெண் டாக்டரிடம் தங்கச்சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சேசன் சாவடியை சேர்ந்தவர் குழந்தைகள் நல மருத்துவர் முருகன் மனைவி லீலாதேவி(வயது 35). இவர், ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

    அவர் பணி முடிந்ததும், நேற்று மாலை ஆத்தூரில் இருந்து சேசஞ்சாவடிக்கு பேருந்தில் வந்த மருத்துவர் லீலாதேவி, சேசன்சாவடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இணைப் புச்சாலை வழியாக, அவரது வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மருத்துவர் லீலா தேவியை வழிமறித்து, கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மருத்துவர் லீலாவதி புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தங்கச்சங்கலியை பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனியில் இன்று நடந்து சென்ற பெண்ணிடம் 6 புவுன் நகை பறித்த கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள புஸ்பத்தூரை சேர்ந்த பிச்சை முத்து மனைவி ஞானம்மாள் (வயது50). இவர் இன்று காலை கோவிலுக்கு செல்வதற்காக நடந்து வந்துகொண்டிருந்தார்.

    அப்போது இவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

    அவர் சத்தம்போட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தும் பைக் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

    பழனியில் பைக் கொள்ளையர்களின் அட்டகாசம் கடந்த சில நாட்களாக இல்லாமல் காணப்பட்டது. தற்போது மீண்டும் தங்கள் கைவரி சையை காட்ட தொடங்கி இருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து ஞானம்மாள் சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    காங்கயத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் அருகே திருப்பூரைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் கடந்த மாதம் 23-ந்தேதி அவரது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பூங்கொடி கழுத்தில் அணிந்திருந்த4 பவுன் தங்க நகையை பறித்து தப்பினர். இந்நிலையில் நேற்று (23-ந்தேதி) அதிகாலை நடைபயிற்சி வந்த விஜயகுமார் என்பவரிடம் இரு வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் ரூ.1500-ஐ பறித்து தப்பினர்.

    இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். நேற்று அங்குள்ள நால்ரோட்டில் பஸ் நிறுத்ததில் 2 பேர் நின்றனர். போலீசை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உஷாரான காங்கயம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்ற பல்லன் (வயது 27), சேலம் வாழப்பாடியை சேர்ந்த மற்றொரு கார்த்திக் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    பூங்கொடியிடம் நகை பறித்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜயகுமாரிடம் பறித்த பணத்தையும் கைப்பற்றினர்.

    விசாரணையில் பல்லன் (எ) கார்த்திக் மீது ஏற்கனவே 18 திருட்டு வழக்குகள் 3 வழிப்பறி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் மீது 3 முறை குன்டாஸ் போடப்பட்டுள்ளது. அதே போல் மற்றொரு கார்த்திக் மீதும் பல வழக்குகள் உள்ளன. இருவரையும் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி ராஜமகேஷ் உத்தரவுப்படி 2 கொள்ளையர்களையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    விமான நிலையம் அருகே பெண் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ராயப்பேட்டை பீட்டர் சாலையில் குடியிருப்பவர் சுரேஷ். ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி தேவி புவனேஸ்வரி. டி.ஜி.பி. அலுவலக அதிகாரி.

    நேற்று சுரேஷ்-தேவி புவனேஸ்வரி இருவரும் பொழிச்சலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு இரவு வீடு திரும்பினார்கள்.

    இரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் மீனம்பாக்கம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. சுரேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். தேவி புவனேஸ்வரி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேர் வந்தனர். திடீர் என்று தேவி புவனேஸ்வரியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.


    ×