என் மலர்
செய்திகள்

இளம்பெண்ணிடம் செயின் பறித்த வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை
இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. #jewelrycase #court
கொண்டலாம்பட்டி:
சேலம் கன்னங்குறிச்சி ஜட்ஜ் ரோடு, நடராஜன் நகரை சேர்ந்தவர் வெங்கட். இவரது மனைவி அனுஷா (வயது 24). இவர் 27-5-2013 அன்று கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அனுஷா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி அனுஷாவிடம் நகையை திருடிய சேலம் பொன்னம்மாபேட்டை புதுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் சி.ஜே.எம். கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதி திருஞாணம் வழக்கை விசாரித்து மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். #jewelrycase #court
Next Story






