search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Umachikulam"

    ஊமச்சிக்குளம் அருகே பெண் காசாளரிடம் நகை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    ஊமச்சிக்குளம் அருகே உள்ள ஆலாத்தூர் என்.எம்.எஸ். நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி பாக்கியதாய் (வயது 45). கூலபாண்டி சந்திப்பில் உள்ள தனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) காசாளராக உள்ளார்.

    நேற்றிரவு இவர் மொபட்டில் கடச்சனேந்தலுக்கு சென்று கொண்டிருந்தார்.

    ஆலாத்தூர் அருகே கியாஸ் கம்பெனி எதிரில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பாக்கியதாயின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக ஊமச்சிக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு வழக்குப்பதிவு செய்து நகை பறித்த கும்பலை தேடி வருகிறார்.

    மதுரை பகுதியில் நகைப்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலீசார் விரைந்து செயல்பட்டு வழிப்பறி கும்பலின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×