search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    திருமங்கலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

    திருமங்கலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை, ஸ்கூட்டரில் வந்த மர்ம மனிதர்கள் பறித்துச் சென்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் நாகசாமி நகரைச் சேர்ந்தவர் செல்வக் குமார். இவரது மனைவி சித்ரா (வயது 40). இவர் தனது மகள் மற்றும் சகோதரியுடன் திருநகர் வந்து விட்டு ஊருக்கு திரும்பினார்.

    திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு 3 பேரும் நடந்து சென்றனர். பெருமாள் கோவில் அருகே சென்றபோது ஸ்கூட்டரில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சித்ரா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர்.

    அதிர்ச்சியடைந்த சித்ரா உள்பட 3 பேரும், திருடன்... திருடன்.. என கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வருவதற்குள், நகை பறித்த திருடர்கள் மின்னலாக மறைந்து விட்டனர்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில், சித்ரா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் பகுதியில் ஸ்கூட்டரில் வந்து கடந்த 2 மாதத்தில் மட்டும் 4 முறை மர்ம மனிதர்கள் நகையை பறித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

    மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், பொது மக்களுக்கு சந்தேகம் வராத வகையில் தற்போது பெண்கள் பெருமளவில் ஓட்டும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

    Next Story
    ×