search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரப்பாக்கம்"

    ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    செஞ்சி அருகே உள்ள கோவில் புறையூரை சேர்ந்தவர் முருகேசன்.  இவரது மகன் சுரேஷ் (வயது19). பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். இதையடுத்து சுரேஷ், சென்னையில் உள்ள கல்லூரியில் சேர முடிவு செய்து இருந்தார்.

    இதற்காக அவர் கல்லூரியில் விண்ணப்பம் வாங்குவதற்காக  அதே பகுதியை சேர்ந்த நண்பரான பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த அஜீத், சின்னராஜீ ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் சென்னைநோக்கி நேற்று நள்ளிரவு புறப்பட்டனர். இன்று உறவினர் வீட்டில் தங்கி விட்டு நாளை கல்லூரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில்  கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை  இழந்த மோட்டார் சைக்கிள் சாலைஒர தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். அஜீத், சின்னராஜீக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    ஊரப்பாக்கத்தில் அழகு நிலையம் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    சென்னையை அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் அனிதா (32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    நேற்றிரவு 7 மணியளவில் அலங்காரம் செய்வதற்காக ஊரப்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் அங்கிருந்து வெளியே வந்தார்.

    அவர் நடந்து சென்றபோது திடீரென 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தனர்.

    அவரது கையில் இருந்த விலை உயர்த்த செல் போனையும் பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். அவர் கூச்சல் போட்டதையடுத்து அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர்.

    அதற்குள் வழிப்பறி திருடர்கள் இருவரும் 2 மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த வாலிபர்களுடன் தப்பி செல்ல முயன்றனர். பொதுமக்களில் சிலர் அவர்களை விரட்டிச் சென்றனர்.

    சிறிது தூரத்தில் வழிப்பறி திருடர்களை பொதுமக்கள் வழிமறித்து பிடித்தனர். அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் பெண்ணிடம் நகையை பறித்த அந்த கும்பல் பல்லாவரம் அனகாபுத்தூரைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    ராஜ்குமார் (28), விமல்ராஜ் (23), கோகுலகிருஷ்ணன் (33), அபிராமன் (31) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வழிப்பறி செய்யப்பட்ட தாலி செயினும், செல்போனும் பொதுமக்களின் உதவியால் அந்த பெண்ணிற்கு கிடைத்தன. சரியான நேரத்தில் துணிச்சலான செயலில் ஈடுபட்ட அப்பகுதி மக்களை போலீசார் பாராட்டினர்.

    ×