search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welfare"

    • வளைகாப்பு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சியர் ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார்.

    இதில் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். மேலும், வருவாய்த்துறை சார்பில், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.36 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகைகளையும், 65 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 97 ஆயிரத்து 215 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் என மொத்தம் 101 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 33ஆயிரத்து 215 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் கலெக்டர் பேசுகையில், ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளில் இருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதில் கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.

    வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மை யும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டம் இந்த வளைகாப்பு திட்டம் ஆகும்.

    சாதி, மத வேறுபாடின்றி கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

    விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சியர் ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புவனம் அருகே பொட்டபாளையத்தில் 187 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • இந்த முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பொட்டபாளையம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி அரசின் பல்வேறு துறை சார்பில் 187 பயனாளிகளுக்கு ரூ. 42.07 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் இடங்களில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்து அதில் மருத்துவ முகாம்கள், கால்நடை முகாம்கள், வேளாண் பொருட்கள் சார்ந்த கண்காட்சிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மக்கள் தொடர்பு முகாமை நடத்திட அரசு அறிவுறுத்தியுள்ளது.

    தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து முகாமில் எடுத்துரைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.

    இந்த முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், கர்ப்பிணி பெண்களை அவரது தாய், தந்தையர், மாமியார் கணவர் 10 மாத காலம் பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

    அதன் பின்னர் 150 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர் மற்றும் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விருந்து வழங்கப்பட்டது.

    கர்ப்பிணி பெண்கள், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • காரையூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் காரையூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடத்தினர். இந்த முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார், கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன் முகாமை தொடங்கி வைத்தார்.

    ஊராட்சி மன்ற துணை தலைவர் அருணகிரி, கிராம செயலர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் ஐரிஸ் ஆஷ்மின், ஒன்றிய கவுன்சிலர் சுமதி செல்வகுமார், வார்டு உறுப்பினர்கள் ஆறுமுகம், ஆனந்த வள்ளி, விஜயா, தலையாரி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் ஊராட்சி மன்ற வளாக பகுதி, அங்கன்வாடி மைய பகுதி, ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகப்பகுதி, துணை சுகாதார நிலையம், அம்மன் கோவில் மற்றும் கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளை கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

    கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நாகராஜன் நன்றி கூறினார்.

    • ரூ.43 லட்சம் மதிப்பில் 2,328 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிககளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
    • விபத்து மரணம் நிவாரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 551 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்து 78 ஆயிரத்து 250 மதிப்பீட்டிலும் என மொத்தம் 2,328 பயனாளி களுக்கு ரூ. 43 லட்சத்து 18 ஆயிரத்து 7 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி கலைய ரங்கில் தொழிலாளர் நலத்துறை, திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டு மானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள் மூலம் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்.குமார் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.விழாவில் பதிவு பெற்ற கட்டுமான தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலைகவசம், முககவசம், பாதுகாப்பு காலணி, வெல்டிங் முககவசம், ஜாக்கெட், மின் பாதுகாப்பு காலணி, கையுறை (காட்டன்), ரப்பர் காலணி, மின் பாதுகாப்பு கையுறை, கண்கண்ணாடி, ரப்பர் கையுறை மற்றும் பை அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் 743 பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சத்து 7 ஆயிரத்து 954 மதிப்பீட்டிலும் , பதிவு பெற்ற அமைப்புசாரா ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சீருடை, காலணி, முதலுதவி பெட்டி மற்றும் பை அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் 1034 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்து 31 ஆயிரத்து 803 மதிப்பீட்டிலும் மற்றும் பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரிய தொழிலாளர்களுக்கு கல்வி, ஓய்வூதியம், திருமணம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் நிவாரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 551 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்து 78 ஆயிரத்து 250 மதிப்பீட்டிலும் என மொத்தம் 2,328 பயனாளி களுக்கு ரூ. 43 லட்சத்து 18 ஆயிரத்து 7 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி), .பிரவீன் குமார், தொழிலாளர் இனை ஆணையர் . சுப்பிரமணியன், தொழிலாளர் உதவி ஆணை யர் (ச.பா.தி.), மலர்விழி உள்ளிட்ட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் ரூ. 28.20 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
    • நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டிதலைமையில் நடந்தது.

    இதில் பயிர்க்காப்பீடு, ஜிப்சம் உரம் வழங்க கோருதல், பிரதமரின் கிஷான் திட்டத்தில் நிதி பெற்றுத்தரக் கோருதல், பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்திடவும், தமிழக அரசின் சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை பெற்றிட தேவையான சான்றிதழ்களை வழங்க துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து பணியாற்றி வேண்டும். நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கவும், கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைக்கவும், புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கவும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மானியத்துடன் தலா ரூ.21 ஆயிரத்து 432 வீதம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 160 மதிப்பீட்டில் மின்சாரத்தால் இயங்கும் புல் வெட்டும் கருவிகள் மற்றும் கூட்டுறவுத்துறையின் சார்பில் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 51 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 12ஆயிரத்து 852 மதிப்பிலான பயிர்க்கடனுதவிகள் மற்றும் செம்மறி ஆடுகள், கறவை மாடு என மொத்தம் 56 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 20 ஆயிரத்து 12 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்மணிவண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) தனபாலன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு, கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நாகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நோ்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கேம்ப்லாபாத் ஊராட்சியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
    • மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் ரூ. 54,81,473 மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கேம்ப்லாபாத் ஊராட்சியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பல்வேறு துறையினர் சிறப்பு ஸ்டால்கள் மூலம் தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் ரூ. 54,81,473 மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கி பேசியதாவது:-

    மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் சோதனை செய்துள்ளார்கள். நடமாடும் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அது மட்டுமல்லாமல் மக்களை தேடி மருத்துவம் மூலம் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அதிகமாக வாழை, பாரம்பரிய நெல் வைத்துள்ளார்கள். ஆடு, மாடு போன்றவைகளுக்கு தடுப்புப்பூசி கொடுத்து ள்ளார்கள்.

    கன்று பராமரிப்பு பெட்டகம் வாங்கி பயன்பெறலாம். மேலும் கோழிப்பண்ணை மற்றும் கோழி வளர்ப்பவர்கள் மானிய விலையில் குஞ்சு பொறிப்பான் எந்திரம் வாங்கி பயனடையலாம்.

    பொதுமக்கள் வாகனங் களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டு களில் தொங்கிக்கொண்டு செல்லக்கூடாது.

    வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக சாலை பொதுமொழிகள் என்ற கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இக்கையேடினை ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முகைதீன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், கேம்லாபாத் பஞ்சாயத்து தலைவர் சபிதா சர்மிளா, துணை தலைவர் ஹாஜா உதுமான், திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் முரளிதரன், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, கால்நடை இணை இயக்குநர் ராஜன், துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் நாஞ்சியார், டாக்டர் சந்திரா, தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் பார்த்தீபன், மருத்துவ அலுவலர் முல்லை பாண்டியன், வட்டார சுகாதார ஆய்வாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அல்லிராணி, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் பாலசுந்தரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் சரஸ்வதி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுருதி, வட்டார மேலாளர் சமூகநலம் வேல்கனி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயா, ராமு, மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



    • நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • விழாவில், அரசின் அனைத்து துறைகளின் சார்பிலும் பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 77 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்

    நெல்லை:

    நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    தேசிய கொடி ஏற்றினார்

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார்.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் மூவர்ண பலூன்களை கலெக்டர் விஷ்ணு பறக்கவிட்டார். பின்னர் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    நற்சான்றிதழ்கள்

    விழாவில், அரசின் அனைத்து துறைகளின் சார்பிலும் பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 77 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை அவர் வழங்கினார். வீரதீர செயல்கள் புரிந்த 253 பேருக்கும், சமூக தொண்டாற்றியவர்களுக்கும் நற்சான்றுகள் வழங்கப்பட்டன.

    கலை நிகழ்ச்சிகள்

    தொடர்ந்து சந்திப்பு மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. கரகம், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன. இதில் சுமார் 1,315 பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, சப்-கலெக்டர் ரிஷப், ஆர்.டி.ஓ. சந்திரசேகர், துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா, சரவணகுமார், திட்ட அலுவலர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி

    நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காலை 6.45 மணிக்கு மேயர் சரவணன் தலைமையில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்களுக்கு நற்சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர் தச்சை கணேச ராஜா தலைமையிலும், சந்திப்பு கூட்டுறவு பேரங்காடியில் அதன் சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை தலைமையிலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

    • 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி கலெக்டர் தேசியக்கொடிைய ஏற்றி, ரூ.1 கோடியே 55 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • றப்பாக பணியாற்றிய 90 காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 55 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய 90 காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்கள் 457 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 75-வது சுதந்திர தின விழாவில் ரூ.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வழங்கினார்.
    • அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    75-வது சுதந்திர தின விழாவை கொண்டாட ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு இன்று காலை கோலாகலமாக நடந்தது. ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து மூவர்ண பலூன் பறக்க விட்டு, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சமாதான புறாக்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    காவல்துறையை சேர்ந்த 45 பேருக்கும், வருவாய்த்துறை, சமூக ஆர்வலர்கள் மாவட்ட அளவிலான துறை தலைவர்களுக்கான நற்சான்றிதழ் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உள்பட 11 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 158 அலுவலர்களுக்கும், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் ஆகியோர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு வாரியம், கலை பண்பாட்டுத் துறைகளின் சார்பில் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரங்கள், சலவைப்பெட்டிகள், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை என மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 81 ஆயிரத்து 451 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    மாணவ- மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடியில் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை மைதானத்தில் நடைபெற்றது.
    • பல்வேறு துறைகள் சார்பாக 138 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 39 ஆயிரத்து 992 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை மைதானத்தில் நடைபெற்றது.

    நலத்திட்ட உதவிகள்

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் போலீசாரின் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் பல்வேறு துறைகள் சார்பாக 138 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 39 ஆயிரத்து 992 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து வீர,தீர செயல்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், சப்-கலெக்டர் சரவணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடம்பூர் பேரூராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் ரூ.44 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 83 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர்.

    கயத்தாறு:

    கடம்பூர் பேரூராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் ரூ.44 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 83 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர். மேலும் 12 பேருக்கு பட்டா மாறுதல், சமுக பாதுகாப்பு திட்டத்தில் கீழ் 31 பேருக்கு உதவித்தொகை உள்பட131 பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், கோவில்பட்டி கோட்டாட்சி யர் மகாலட்சுமி, கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, சுப்பிரமணியன், கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை, தி.மு.க. மாவட்ட பொருளாளர் மோகன், நகர செயலாளர்கள் பாலமுரு கன், சுரேஷ்கண்ணன், மாவட்ட பிரதிநிதி அசோகன், கோவில்பட்டி அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், தாசில்தார் சுப்புலட்சுமி, மண்டல துணை தாசில்தார்கள் சுபா, வெள்ளத்துரை, ஐயப்பன், திரவியம், பிச்சையா, கிராம நிர்வாக அலுவலர் இசக்கிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பொன்னுசாமி, காங்கிரஸ் நகர தலைவர் ஜெகதீசன், கயத்தார் வட்டார வளர்ச்சி ஆணையாளர்கள் அரவிந்தன், பானு. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×