என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடம்பூரில் 131 பேருக்கு நலத்திட்ட உதவிகள் -கனிமொழி எம்.பி. வழங்கினார்
  X

  பயனாளி ஒருவருக்கு கனிமொழி எம்.பி., இலவச வீட்டுமனை பட்டா வழங்கியபோது எடுத்த படம். அருகில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் உள்ளனர்.

  கடம்பூரில் 131 பேருக்கு நலத்திட்ட உதவிகள் -கனிமொழி எம்.பி. வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடம்பூர் பேரூராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
  • இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் ரூ.44 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 83 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர்.

  கயத்தாறு:

  கடம்பூர் பேரூராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

  இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் ரூ.44 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 83 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர். மேலும் 12 பேருக்கு பட்டா மாறுதல், சமுக பாதுகாப்பு திட்டத்தில் கீழ் 31 பேருக்கு உதவித்தொகை உள்பட131 பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினர்.

  நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், கோவில்பட்டி கோட்டாட்சி யர் மகாலட்சுமி, கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, சுப்பிரமணியன், கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை, தி.மு.க. மாவட்ட பொருளாளர் மோகன், நகர செயலாளர்கள் பாலமுரு கன், சுரேஷ்கண்ணன், மாவட்ட பிரதிநிதி அசோகன், கோவில்பட்டி அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், தாசில்தார் சுப்புலட்சுமி, மண்டல துணை தாசில்தார்கள் சுபா, வெள்ளத்துரை, ஐயப்பன், திரவியம், பிச்சையா, கிராம நிர்வாக அலுவலர் இசக்கிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பொன்னுசாமி, காங்கிரஸ் நகர தலைவர் ஜெகதீசன், கயத்தார் வட்டார வளர்ச்சி ஆணையாளர்கள் அரவிந்தன், பானு. ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×