search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udayanidhi Stalin"

    • இந்தியா கூட்டணியை பார்த்து பா.ஜ.க. பயப்படுகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
    • மணிப்பூர் சம்பவம், கர்நாடகா தேர்தல் முடிவு, இந்தியா கூட்டணி போன்றவற்றால் பா.ஜ.க. அரசு பயத்தில் உள்ளது.

    சென்னை:

    தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

    அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    மத்திய பா.ஜ.க. அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது ஒரே தேர்தலுக்காக குழு அமைத்துள்ளார்கள். இதனை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும். மணிப்பூர் சம்பவம், கர்நாடகா தேர்தல் முடிவு, 'இந்தியா' கூட்டணி போன்றவற்றால் மத்திய பா.ஜ.க. அரசு பயத்தில் இருக்கிறது.

    மத்திய பா.ஜ.க. அரசை ஒழிக்கவேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்துக்காக மனம் மற்றும் கொள்கை வித்தியாசங்களை மறந்து 'இந்தியா' கூட்டணி அமைந்துள்ளது. இதனால்தான் பா.ஜ.க. அரசு பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டியிருக்கிறது. இது பயத்தின் வெளிப்பாடு ஆகும்.

    மார்ச் 1-ம் தேதி தலைவர் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) பிறந்தநாளில் 7 தலைவர்கள் சென்னைக்கு வந்தார்கள். அப்போதே மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான பிரசாரங்கள் தொடங்கியது. பா.ஜ.க. ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்றால் நாமெல்லாம் ஒன்றுசேர வேண்டும். எல்லா இயக்கங்களும் விட்டுக்கொடுத்து ஒத்து வரவேண்டும். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சியை அகற்றமுடியும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சொல்லிவிட்டார்.

    இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இந்தியாவுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் இருக்கும். பாராளுமன்ற தேர்தல் பிரசார வியூகங்கள், யார், யார் எந்த இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு சொல்வார். அதன்படி நாங்கள் நடப்போம் என தெரிவித்தார்.

    • உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடக்கிறது.
    • இளைஞரணி மாநாட்டில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்து கொள்ள–வேண்டும்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திரு–மங்கலத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சேலத்தில் தி.மு.க.வின் இரண்டாவது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மதுரை தெற்குமாவட்டத்திலிருந்து அதிகளவில் கட்சியினர் பங்கேற்க வேண்டும். தெற்கு மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ள–வேண்டும்.

    இதில் கலந்து கொள்ளும் இளைஞரணி–யினர் 20 வயது முதல் 30 வயதிற் குட்பட்டு இருக்கவேண்டும். பூத்திற்கு 25 பேர் வீதம் தேர்வு–செய்ய வேண்டும். அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.

    விரைவில் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள் ளும் நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து மாவட்ட செயலாளரிடம் வழங்க–வேண்டும். வடக்கு, தெற்கு, மாநகா் என மூன்று மாவட் டங்களிலிருந்து அதிகளவில் இளைஞரணி கலந்து கொண்டு முன்னணி மாவட் டமாக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் மாநாட் டில் இடம்பிடிக்க வேண்டும்.

    வரும் செப்டம்பர் 20-ந்தேதி திருமங்கலத்தில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாநில இளைஞரணி செயலாளரும், விளை–யாட்டுத் துறை அமைச்ச–ருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி–களை வழங்கி பேசுகிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஏராள–மானோர் கலந்து கொள்ள–வேண்டும் என்றார்.

    தெற்கு மாவட்டச் செய–லாளர் சேடபட்டி மணி–மாறன் பேசுகையில், மது–ரையில் இதுவரையில் நடைபெற்ற அனைத்து கூட்டங்களையும் சிறப்பான மாநாடாகவே நாம் நடத்தி–யுள்ளோம். தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டா–லின் கலந்து கொள்ளும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியையும் சிறப்பான மாநாடு போல நடத்த–வேண்டும். கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு திரு–மங்கலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பொற்கிழி வழங்கு–கிறார்.

    சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்து கொள்ள–வேண்டும். நாம் வலிமை–யான தலைமையில் கீழ் இயங்கி வருகிறோம். இன் னும் 30 ஆண்டுகள் ஆனா–லும் தி.மு.க. ஆட்சி தமிழ–கத்தில் தொடரும். வரும் நாடாளு–மன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கதான வெற்றி பெற உழைக்கவேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் மாநில விவசாய அணி இணை செயலாளர் முத்துராமலிங் கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் லதா அதிய மான், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்த லைவர் ஆதவன், மண்டல தலைவர் சுவிதாவிமல், தக வல் தொழில்நுட்ப மதுரை மண்டல பொறுப்பா ளர் பாசபிரபு,

    ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, ராமமூர்த்தி, ஆலம்பட்டி சண்முகம், தங்கபாண்டி, மதன்குமார், நகரப் பொருளாளர் சின்னச்சாமி மீனவர் அணி ஆலங்குளம் செல்வம் பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது அவரது நண்பர் அதானி ஒருவர்தான்.
    • சிஏஜி அறிக்கை மூலம் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால மோசடிகள் வெளிவர தொடங்கியுள்ளது.

    புதுக்கோட்டையில் இன்று திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் குற்றம்சாட்டுவது போல, திமுக ஆட்சிக்கு வந்தால் வாழ்வது கருணாநிதி குடும்பம்தான். ஏனென்றால், இங்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் கருணாநிதியின் குடும்பம்தான்.

    பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது அவரது நண்பர் அதானி ஒருவர்தான். சிஏஜி அறிக்கை மூலம் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால மோசடிகள் வெளிவர தொடங்கியுள்ளது.

    கடந்த 20ம் தேதி ஒரு கட்சியின் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ஏன் நடந்தது என்றே தெரியவில்லை. மாநாடு எப்படியெல்லாம் நடத்தக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். அதிமுக மாநாட்டிற்கு சென்ற ஒருவர் தன் மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாநாட்டு பொறுப்பாளரான ஜெயக்குமாரிடம் விசாரிக்க வேண்டும்.

    இனி வரக்கூடிய காலங்களில், யாருக்கும் சால்வை போன்றவைகளை அணிவிக்காமல் புத்தகங்களை வழங்குங்கள். விளம்பர பதாகைகள் வைக்காதீர்கள். பட்டாசு வெடிக்காதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள்.
    • 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை சிற்றுண்டி விரிவாக்கம் திட்டத்தை சென்னையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாலை சிற்றுண்டியை குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலை உணவு திட்டத்தில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது. காலை உணவு நன்றாக இருக்கிறதா? என்று குழந்தைகளிடம் கேட்டேன். அவர்கள் நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

    மாணவர்களும் பெற்றோர்களும் இத்திட்டத்தை வரவேற்று நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்த திட்டமும் சிறந்ததாகும். மாணவர்களோடு நானும் ஒரு பயனாளியாக அமர்ந்து சாப்பிட்டேன்.

    இத்திட்டம் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமின்றி உணவு பாது காப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்வார்கள்.

    இதற்கான பிரத்யேக ஆப் மூலம் கண்காணிக்கப்படுகிறது. உணவு தயாரிக்கும் இடம் முதல் மாணவர்களுக்கு கொண்டு சென்று வழங்கும் வரை கண்காணிக்கப்படுகிறது. எங்காவது குறை இருந்தாலும் சரி செய்யப்படும்.

    உலக செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இது மிகப்பெரிய சாதனையாகும். சென்னை வரும்போது அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படும். 19 வயதில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். மேலும் பல சாதனைகளை செய்வார்.

    சந்திரயான்-3 வெற்றி எல்லோருக்கும் கிடைத்த வெற்றி. 3 தமிழர்கள் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாந்தோப்பு பள்ளியிலும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெரம்பூர் மடுமாநகரில் உள்ள பள்ளியிலும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மண்டலத் தலைவர்கள் மதன் மோகன், சரிதா மகேஷ்குமார், கிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஐகோர்ட்டு வக்கீல் ராமச்சந்திரன்உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.
    • கவர்னருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் வகையில் பேசி உள்ளார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமச்சந்திரன், எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவர்னருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் வகையில் பேசி உள்ளார்.

    எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
    • இந்தப் போட்டிக்கான கோப்பை, சின்னத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

    தொடக்க நாளில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொரியா, ஜப்பானை எதிர்கொள்கிறது.

    இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.

    • முதலமைச்சர் விளையாட்டு போட்டிக்கான கோப்பையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
    • விளையாட்டுப் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை முதல் வரும் 25-ம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் நடைபெறுகிறது. இதில் கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, பளுதூக்குதல், செஸ், கால்பந்து, தடகளம் ஆகிய போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    கிரிக்கெட் போட்டி அசோக் நகர், மெரினா கடற்கரை, குருநானக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, போரூர் எஸ்.ஆர்.எம். கல்லூரி ஆகிய இடங்களிலும், பேட்மிண்டன், சிலம்பம், டேபிள் டென்னிஸ், மாற்றுத்திறனாளி விளையாட்டுகள் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும், நீச்சல் போட்டி வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்திலும், டென்னிஸ் நுங்கம்பாக்கத்திலும், ஹாக்கி போட்டி ராமச்சந்திரா பல்கலைக்கழகத்திலும், பீச் வாலிபால் மெரினா கடற்கரையிலும் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக சென்னையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ, மாணவியர் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் உணவு மற்றும் பேருந்து வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    அதன்பின் பேசிய அவர், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டுமே முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகிறது. நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே நமது இலக்கு என தெரிவித்தார்.

    • மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி திரைப்படம்.
    • சினிமாவை விட அரசியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியமான பொறுப்புகள் காத்திருக்கிறது.

    சென்னை:

    உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது சபரீசன் கூறியதாவது:-

    மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி திரைப்படம். இதுதான் கடைசி படம் என்றதும் அவருக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. அதன்பிறகு தற்போது இருக்கும் வேலைகளில் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.

    சினிமாவை விட அரசியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியமான பொறுப்புகள் காத்திருக்கிறது. அதை அவர் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அரசியலில் உதயநிதி ஸ்டாலின் மேலே வருவார். மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற எனது முழு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
    • 'மாமன்னன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

    சென்னை:

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராசா கண்ணு' மற்றும் 'ஜிகு ஜிகு ரெயில்' பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தது. 'மாமன்னன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.

    இந்நிலையில், அடுத்து படம் நடித்தால் உங்களுடன் தான் நடிப்பேன் என மாரி செல்வராஜிடம் வாக்குறுதி கொடுத்துள்ளேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன்முறையாக நடிக்கிறேன். சொல்லப்போனால் இது என்னுடைய கடைசி படம். வடிவேலு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய குழுவுடன் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி.

    மாரி செல்வராஜ் படங்களில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்தப் படத்திலும் இருக்கிறது. படத்தை ஜூன் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம்.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அமைச்சர் பொறுப்பு கொடுத்த பின்பும் நான் போய் படங்களில் நடித்து வந்தால் அது சரியாக இருக்காது. நிறைய வேலைகள் இருக்கிறது. பணிகள் இருக்கிறது. எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. பல்வேறு பணிச் சுமைகளுக்கு இடையே தான் படத்தின் டப்பிங், இசை வெளியீட்டு விழாவுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.

    எனக்கு தெரிந்து இதுதான் கடைசி படமாக இருக்கும். நல்ல படமாக அமைந்தது திருப்தி. நானும் மாரி செல்வராஜும் நிறைய பேசினோம். மாரி செல்வராஜின் அரசியல் இந்தப் படத்தில் அதிகமாக உள்ளது. அவருக்கும் எனக்குமான புரிதல் அதிகரித்துள்ளது. அவரே கூட என்னிடம் அடுத்து நீங்கள் படம் நடித்தால் என் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும் என்றார். அடுத்த 3 வருடத்திற்கு படம் கிடையாது. அதற்கு பின்பு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். நானும் மாரியிடம் அடுத்து படம் நடித்தால் உங்களுடன் தான் நடிப்பேன் என வாக்குறுதி கொடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், தொழில்நுட்ப உதவியாளராக 24 நபர்களுக்கும், இளநிலை உதவியாளராக (கணக்கு) 2 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாளராக 14 நபர்களுக்கும், தட்டச்சராக 1 நபருக்கும், களப்பணி உதவியாளராக 56 நபர்களுக்கும், உதவி வரைவாளராக 1 நபருக்கும், காவலாளியாக 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார்.
    • கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிண்டிகேட் உறுப்பினர் பதவி வகித்து வந்தார்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார்.

    கடந்த 2021ம் ஆண்டு முதல் பதவி வகித்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றதை அடுத்து உதயநிதி அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.

    எனக்கு பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் இயற்றி தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

    என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் என்றும் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன்.

    எனக்கு பதவி வழங்க வேண்டும் என தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்க வேண்டாம்.

    எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என கட்சி தலைமை நன்கு அறியும்.

    கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் தயாராகி வருகிறேன்.

    மக்கள் பணியாற்றி கட்சிக்கும் அரசுக்கும் மகத்தான புகழ் சேர்த்திடுவோம் என தெரிவித்துள்ளார்.
    ×