அரசியலில் உதயநிதி ஸ்டாலின் இன்னும் மேலே வருவார்- சபரீசன்

மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி திரைப்படம்.சினிமாவை விட அரசியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியமான பொறுப்புகள் காத்திருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் - சபரீசன்
உதயநிதி ஸ்டாலின் - சபரீசன்
Published on

சென்னை:

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது சபரீசன் கூறியதாவது:-

மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி திரைப்படம். இதுதான் கடைசி படம் என்றதும் அவருக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. அதன்பிறகு தற்போது இருக்கும் வேலைகளில் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.

சினிமாவை விட அரசியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியமான பொறுப்புகள் காத்திருக்கிறது. அதை அவர் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அரசியலில் உதயநிதி ஸ்டாலின் மேலே வருவார். மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற எனது முழு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com