என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabareesan"

    • மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது.
    • அஜித்குமாரை நடிகர் சிம்பு, நடிகை ஸ்ரீ லீலா, இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார்.

    இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது. இதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது.

    இந்நிலையில் அங்கு அஜித்குமாரை நடிகர் சிம்பு, நடிகை ஸ்ரீ லீலா, இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியது.

    அந்த வகையில் தமிழக முதல்வரின் மருமகனான சபரீசன் அஜித் குமாரை நேரில் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன்.
    • சபரீசனின் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.

    இந்நிலையில் வேதமூர்த்தி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், எனது மருமகன் திரு. சபரீசன் அவர்களின் தந்தையார் திரு. வேதமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

    திரு. வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் திரு. சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி திரைப்படம்.
    • சினிமாவை விட அரசியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியமான பொறுப்புகள் காத்திருக்கிறது.

    சென்னை:

    உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது சபரீசன் கூறியதாவது:-

    மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி திரைப்படம். இதுதான் கடைசி படம் என்றதும் அவருக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. அதன்பிறகு தற்போது இருக்கும் வேலைகளில் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.

    சினிமாவை விட அரசியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியமான பொறுப்புகள் காத்திருக்கிறது. அதை அவர் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அரசியலில் உதயநிதி ஸ்டாலின் மேலே வருவார். மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற எனது முழு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×