search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "udangudi"

    • உடன்குடி பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • பனைமரங்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஊடுபயிராக முருங்கை, தென்னை போன்றவற்றை நடவு செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியான குலசேகரன்பட்டினம், கொட்டங்காடு, பிறைகுடியிருப்பு, மெய்யூர், வாகவிளை, லட்சுமிபுரம் ஊராட்சி, பரமன்குறிச்சி, சீருடையார்புரம், மாநாடு, வெள்ளாளன்விளை, சிதம்பரபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பருவமழை பெய்து வருகிறது.

    இதனால் அங்கு விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முற்றிய முருங்கை மரத்தை வெட்டி விடுவதும், பனைமரங்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஊடுபயிராக முருங்கை, தென்னை போன்றவற்றை நடவு செய்வது உள்ளிட்ட விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது பருவ மழை காலம் தொடங்கி விட்டது. இதைத் தொடர்ந்து பனி, குளிர் காலம் வரும் வெயிலின் தாக்கம் இனி குறைவாகவே இருக்கும். எனவே புதிதாக விவசாயம் செய்வதற்கு சரியான காலநிலை உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு விவசாய பணிகளை ஆரம்பித்து உள்ளோம் என்றார்.

    • பெருமாள்புரம் வடக்கு புதியகுடியிருப்பு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு சுமார் 5 வருடமாக குடிநீர் வசதி இல்லை.
    • உடன்குடி பேரூராட்சி செயல்அலுவலர் பிரபா ஆகியோரின் பெறும் முயற்சியில் குடிநீர் வசதி செய்யப்பட்டு குடிநீர் செயல்பாட்டுக்கு வந்தது.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு வெங்கடாசலபுரம் மேல தெருவில் உள்ள பெருமாள்புரம் வடக்கு புதியகுடியிருப்பு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது, இந்த வீடுகளுக்கு சுமார் 5 வருடமாக குடிநீர் வசதியும் இல்லை. இப்பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் உடன்குடி பேரூராட்சி செயல்அலுவலர் பிரபா, பேரூராட்சி தலைவி ஹூமைரா ரமீஸ் பாத்திமா, 5-வது வார்டு கவுன்சிலர் பிரதீப் கண்ணன் ஆகியோரின் பெறும் முயற்சியில் குடிநீர் வசதி செய்யப்பட்டுகுடிநீர் வழங்குவது செயல்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி இப்பகுதி மக்கள் தீபாவளி பரிசாக குடிநீர் வந்ததாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்தவர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்சியில் ஊர்தலைவர் ரமேஷ்பாபு, ஊர் நிர்வாகிகள் அலெக்சாண்டர், முருகேசன் மற்றும் முகேஷ், ஸ்ரீராம், கந்தன், கவுன்சிலர் அஸ்ஸாப் அலி உட்பட ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உடன்குடி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் வார கூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திருச்செந்தூர் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலை 6 மணிக்கு வீடுகளில் குடும்பத்துடன் அமர்ந்து சஷ்டி கவசம் படிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றியம் செம்மறிகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் வார கூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவி சூரியகலா தலைமை தாங்கினார். செயலாளர்கள் பத்திரகாளி, தங்கபுஷ்பம், துணைத்தலைவி மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் செல்வி வரவேற்று பேசினார். செயலாளர் சும்புகனி , துணைத்தலைவி சொர்ணமணி அமுதா பட்டுக்கனி, இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் கலந்து கொண்டு மகாபாரதம், ராமாயணம் பற்றி பேசினார். திருச்செந்தூர் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலை 6 மணிக்கு வீடுகளில் குடும்பத்துடன் அமர்ந்து சஷ்டி கவசம் படிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • எத்தனை வகை வகையான குடி தண்ணீர் வந்தாலும் இந்த கிணற்று தண்ணீருக்கு தனி சுவை உண்டு என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
    • இதைப் போல எங்கள் ஊர் மீனுக்கும் தனி சுவையும் மனமும் உண்டு.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மனப்பாடு கிராமம் இங்குள்ள 90 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்கின்றனர், இவர்க ளுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர்திட்டம், திருச்செந்தூர் எல்லப்பன் நாயக்கன் குளத்து தண்ணீர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் மூலம் பொது குடிநீர்குழாய், வீட்டு இணைப்பு ஆகியன பஞ்சாயத்து சார்பில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இருந்தாலும் மணப்பாடு கிராம மக்கள் குடிப்பதற்கு,சமையல் செய்வதற்கும் கிணற்று நீரையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். மணப்பாடு கடற்கரையில் கல்லும் மணலும் சேர்ந்து இயற்கையாக சுமார் 60 அடி உயரத்தில் உருவான மணல் குன்றின் மீது திருச்சிலுவைநாதர் ஆலயம்,ஆலயத்திற்கு பின்புறம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள கடல் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு அருகில் கடல் ஊடுருவலை தடுக்க உயர் கண்காணிப்பு கோபுர காமிமரா உள்ளது., பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த புனித சவேரியார், கடற்கரை அருகில் குடிதண்ணீருக்காக நாழிக் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தியதாகவும், அதனால் கடற்கரையை சுற்றியுள்ள கிணறுகளில் சுவையான குடிநீர் இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இவர்கள் கூறும் போது எத்தனை வகை வகையான குடி தண்ணீர் வந்தாலும் இந்த கிணற்று தண்ணீருக்கு தனி சுவை உண்டு. இதனால் எங்கள் ஊரில் பெரும்பாலான மக்கள் குடிப்பதற்கும், சமையலுக்கும் இந்த தண்ணிரை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இதைப் போல எங்கள் ஊர் மீனுக்கும் தனி சுவையும் மனமும் உண்டு. எங்கள் ஊர் மீன் விற்பனை செய்யும் போது மணப்பாடு மீன் என்று சொல்லி விற்பனை செய்வார்கள் என்று கூறினர்.

    • குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர்.
    • கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்ததால் முருங்கைக்காய் எல்லாம் புள்ளியடித்து கருப்பு நிறமாக மாறி விட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதி என்பது 17 கிராம ஊராட்சியும் ,ஒரு பேரூராட்சியும் அடங்கிய பகுதியாகும்.

    மெஞ்ஞானபுரம், பரமன்கு றிச்சி, லட்சுமிபுரம், வாகவிளை, குலசேகரன்பட்டினம். மணப்பாடு, செட்டியா பத்து, தண்டுபத்து, சீர்காட்சி, போன்ற பெரும் ஊரை அடக்கிய பகுதியாகும். இங்கு தற்போது பனை, தென்னை, முருங்கை ஆகிய 3 விவசாயம் மட்டுமே மும்முரமாக நடந்து வருகிறது.

    குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர். திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் மும்முரமாக நடந்தது.முருங்கையும் கொத்து கொத்தாக காய்க்கிறது.

    ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது படிப்படியாக விலை குறைந்தது. கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்ததால் முருங்கைக்காய் எல்லாம் புள்ளியடித்து கருப்பு நிறமாக மாறி விட்டது.

    இதனால் கருப்பு நிறமுருங்கையை வாங்குவதற்கு கமிஷன் கடைகாரர்கள் தயாராக இல்லை. இதனால் 1 கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்கின்றனர். இருந்தாலும் விவசாயிகள் தவறாமல் முருங்கைக்காய் பறித்து கொண்டு வந்து கமிஷன் கடையில் குவிக்கின்றனர்.

    தற்போது மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை கொண்டு குவிப்பதால், வியாபாரிகள் இதை வாங்கி, மதுரை, திருச்சி விருதுநகர். சென்னை, கோவை போன்ற பெரும் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் .உற்பத்தி செலவுக்கூட கட்டுபடியாகவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    • அறம் வளர்த்த நாயகி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வருதல் நடைபெற்றது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மண் எடுத்தல், காப்பு கட்டுதல் நடைபெற்றது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வருதல், சமய சொற்பொழிவு, திருமுறைப் பண்ணிசை, திருச்சுன்னம் இடித்தல், அம்பாள் புறப்பாடு போன்ற பல நிகழ்சிகள் நடைபெற்றது.

    கடந்த 7-ந்தேதி திருக்கல்யாண காப்பு கட்டுதல், 8 -ந்தேதி காலையில் அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், மாலையில் சுவாமி காட்சி கொடுக்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், இரவில் அம்பாள் பல்லக்கில் கதிர் குளிப்புக்கு எழுந்தருளல், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதிகாலை 5 மணிக்கு அறம் வளர்த்த நாயகிக்கு திருமாங்கல்யதாரணம் திருமங்கல நாண் பூட்டுதல் வைபவம், அன்னதானம் தொடர்ந்து திருக்கல்யாணக் கோலத்தில் அம்பாள் மற்றும்சுவாமி பட்டினப் பிரவேசத்திற்கு எழுந்தருளல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை குலசேக ரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிர மணி யன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • கனமழையால் உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பஜார் வீதிகள் மற்றும் பல இடங்களில் மழை நீர் தேங்கி கிடந்தது.
    • அமைச்சர் உத்தரவின்பேரில் உடன்குடிபேரூராட்சி சார்பில் கனரக எந்திரங்கள் மூலம் மழை நீர் அகற்றும் பணி பேரூராட்சி முழுவதும் நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பஜார் வீதிகள் மற்றும்பல இடங்களில் மழை நீர் தேங்கி கிடந்தது.இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் வாகனஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள்நோய்பரவும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் இவ்வழியாக தண்டுபத்து சென்ற தமிழக மீன்வளம் மீனவர் நலன்மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் உடன்குடிபேரூராட்சி சார்பில் கனரக எந்திரங்கள் மூலம் மழை நீர் அகற்றும் பணி பேரூராட்சி முழுவதும் நடைபெற்றது.இப்பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப், பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் அஸ்ஸாப் கல்லாசி, பஷீர், முகம்மது ஆபித், மும்தாஜ், ஜான்பாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • உடன்குடி வெற்றிலை விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி தினசரி மார்க்கெட்டில் உள்ள வெற்றிலை சங்க அலுவலகத்தில் நடந்தது.
    • கூட்டத்தில் வருட சந்தா கூட்டுவது, வெற்றிலை கமிஷன் ஆகியவற்றை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வெற்றிலை விவசாயசங்க நிர்வாகிகள்கூட்டம் உடன்குடி தினசரி மார்க்கெட்டில் உள்ள வெற்றிலை சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் மகாராஜா தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ஜெயபாண்டி, ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சற்குணராஜ் வரவேற்று பேசினார். சங்க செயலாளர் மங்களராஜ் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்தார். வருட சந்தா கூட்டுவது, வெற்றிலை கமிஷன் ஆகியவற்றை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

    வெற்றிலை பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் மானியம் வழங்க வேண்டும் என்றும், தாம்பூலக்கவரில் வெற்றிலை பயன்படுத்த வேண்டும் என்றும், சங்க உறுப்பினர்கள் தங்களது காலி இடத்தில் வெற்றிலையை அதிகமாக பயிரிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகி ஜெயதாஸ் நன்றி கூறினார்.

    • உடன்குடி பேரூராட்சியில் பொது நிதித்திட்டத்தின் மூலம் ரூ.26.10 லட்சத்தில் 2 தெருக்களில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • உடன்குடி பேரூராட்சி துணைத்தலைர் சந்தையடியூர்மால்ராஜேஷ் பணிகளை தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சியில் பொது நிதித்திட்டத்தின் மூலம் ரூ.26.10 லட்சத்தில் 2 தெருக்களில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட சோமநாதபுரம் வடக்குத் தெரு, வில்லிகுடியிருப்பு விநாயகர் காலணி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா தலைமை தாங்கினார். உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவரும், நகர தி.மு.க. செயலருமான சந்தையடியூர்மால்ராஜேஷ் பணிகளை தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சி உறுப்பினர்கள் உமா, மும்தாஜ்பேகம், பிரதீப் கண்னண், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம், முன்னாள் நகர தி.மு.க. செயலர் கனகலிங்கம், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்டப் பிரதிநிதி ஹீபர் மோசஸ், தி.மு.க. நிர்வாகிகள் கணேசன், மனோ, கணேஷ், நாராயணன், தங்கம், திரவியம், உதயசூரியன், ஷேக் முகம்மது உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வட்டன் விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி மாத பெருங்கொடை விழா கடந்த 29-ந் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.
    • 108 பால்குடம் பவனி கோவில் முன்பு இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது.

    உடன்குடி:

    உடன்குடி அருகேயுள்ள வட்டன் விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி மாத பெருங்கொடை விழா கடந்த 29-ந் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழா நாட்களில் பக்தி இன்னிசை, புஷ்பாஞ்சலி, சிறப்பு அன்னதானம், பக்தி இன்னிசை, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி, 108 பால்குடம் பவனி கோவில் முன்பு இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. தொடர்ந்து அம்மன், மற்றும் பல்வேறுசுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, சுமங்கலி பூஜை, இரவு 12 மணிக்கு கிளி வாகனத்தில் ஸ்ரீ சந்தனமாரியம்மன், பவானி அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, கரகாட்டம், மா விளக்கு பூஜை, முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

    நேற்று கொடைவிழா நிறைவுபூஜை, இரவு 8 மணிக்கு நெல்லை கண்ணன் குளுவினரின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி என 5 நாள் கொடை விழா நடந்தது. ஏற்பாடுகளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்து ள்ளனர்.

    • உடன்குடியில் அனல்மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • கடலில் அமைக்கப்பட்டிருக்கும் பாலம், கட்டிடங்கள் கட்டும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடியில் ரூ.9,250கோடி மதிப்பீட்டில் 1301மெகாவாட் திறன் கொண்ட அனல்மின்நிலை யம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நிலக்கரி இறங்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பணிகள் இரவு, பகலாக நடந்து முடிவடையும் நிலையில் உள்ளது.

    சட்டமன்ற குழு ஆய்வு

    இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் சேலம் வடக்கு அருள், அண்ணாநகர் மோகன், நாமக்கல் ராமலிங்கம், பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கடலில் அமைக்கப்பட்டிருக்கும் பாலம், கட்டிடங்கள் கட்டும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர். தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள், பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்களுடன் கலந்துரையாடி பணிகள் குறித்து கேட்டிறிந்தனர்.

    இதில் உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் அஸ்ஸாப்கல்லாசி, மாவட்ட பிரதிநிதி ஹீபர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
    • நாளை மறுநாள் (2-ந்தேதி) கொடை விழா நிறைவு பூஜையும், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி பெருங்கொடை விழாவை யொட்டி கடந்த 29-ந் தேதி காலை 8 மணிக்கு யாகசாலை பூஜை, செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, வருஷா பிஷேகம் நடந்தது.

    காலை 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.

    நேற்று இரவு 7 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வந்து பக்த ர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    இன்று (செவ்வாய்கிழமை) காலை 9மணிக்கு 108 பால்குடம் பவனி, வில்லிசை பகல் 1 மணிக்கு அலங்கார தீபாரா தனை, அம்மன் வீதியுலா, இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை, இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, சந்தன மாரி யம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.

    நாளை பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவில் கரகாட்டம், மாவிளக்கு பூஜை, முத்தாரம்மன் பூஞ்சப்பர பவனியும் நடைபெறும். நாளை மறுநாள் (2-ந்தேதி) கொடை விழா நிறைவு பூஜையும், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    ×