வட்டன்விளை கோவில் கொடை விழா - இன்று இரவு அம்மன் கிளி வாகனத்தில் பவனி

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நாளை மறுநாள் (2-ந்தேதி) கொடை விழா நிறைவு பூஜையும், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
கொடை விழாவையொட்டி அம்மன் அலங்காரத்தில் இருந்த காட்சி.
கொடை விழாவையொட்டி அம்மன் அலங்காரத்தில் இருந்த காட்சி.
Published on

உடன்குடி:

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி பெருங்கொடை விழாவை யொட்டி கடந்த 29-ந் தேதி காலை 8 மணிக்கு யாகசாலை பூஜை, செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, வருஷா பிஷேகம் நடந்தது.

காலை 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.

நேற்று இரவு 7 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வந்து பக்த ர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இன்று (செவ்வாய்கிழமை) காலை 9மணிக்கு 108 பால்குடம் பவனி, வில்லிசை பகல் 1 மணிக்கு அலங்கார தீபாரா தனை, அம்மன் வீதியுலா, இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை, இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, சந்தன மாரி யம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.

நாளை பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவில் கரகாட்டம், மாவிளக்கு பூஜை, முத்தாரம்மன் பூஞ்சப்பர பவனியும் நடைபெறும். நாளை மறுநாள் (2-ந்தேதி) கொடை விழா நிறைவு பூஜையும், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com