search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி வட்டார பகுதியில் ஊடுபயிராக தென்னை, முருங்கை நடவு பணி தீவிரம்
    X

    உடன்குடி வட்டார பகுதியில் ஊடுபயிராக தென்னை, முருங்கை நடவு பணி தீவிரம்

    • உடன்குடி பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • பனைமரங்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஊடுபயிராக முருங்கை, தென்னை போன்றவற்றை நடவு செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியான குலசேகரன்பட்டினம், கொட்டங்காடு, பிறைகுடியிருப்பு, மெய்யூர், வாகவிளை, லட்சுமிபுரம் ஊராட்சி, பரமன்குறிச்சி, சீருடையார்புரம், மாநாடு, வெள்ளாளன்விளை, சிதம்பரபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பருவமழை பெய்து வருகிறது.

    இதனால் அங்கு விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முற்றிய முருங்கை மரத்தை வெட்டி விடுவதும், பனைமரங்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஊடுபயிராக முருங்கை, தென்னை போன்றவற்றை நடவு செய்வது உள்ளிட்ட விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது பருவ மழை காலம் தொடங்கி விட்டது. இதைத் தொடர்ந்து பனி, குளிர் காலம் வரும் வெயிலின் தாக்கம் இனி குறைவாகவே இருக்கும். எனவே புதிதாக விவசாயம் செய்வதற்கு சரியான காலநிலை உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு விவசாய பணிகளை ஆரம்பித்து உள்ளோம் என்றார்.

    Next Story
    ×