search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் முருங்கைக்காய் விலை சரிவு  - கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலை
    X

    உடன்குடியில் முருங்கைக்காய் விலை சரிவு - கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலை

    • குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர்.
    • கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்ததால் முருங்கைக்காய் எல்லாம் புள்ளியடித்து கருப்பு நிறமாக மாறி விட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதி என்பது 17 கிராம ஊராட்சியும் ,ஒரு பேரூராட்சியும் அடங்கிய பகுதியாகும்.

    மெஞ்ஞானபுரம், பரமன்கு றிச்சி, லட்சுமிபுரம், வாகவிளை, குலசேகரன்பட்டினம். மணப்பாடு, செட்டியா பத்து, தண்டுபத்து, சீர்காட்சி, போன்ற பெரும் ஊரை அடக்கிய பகுதியாகும். இங்கு தற்போது பனை, தென்னை, முருங்கை ஆகிய 3 விவசாயம் மட்டுமே மும்முரமாக நடந்து வருகிறது.

    குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர். திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் மும்முரமாக நடந்தது.முருங்கையும் கொத்து கொத்தாக காய்க்கிறது.

    ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது படிப்படியாக விலை குறைந்தது. கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்ததால் முருங்கைக்காய் எல்லாம் புள்ளியடித்து கருப்பு நிறமாக மாறி விட்டது.

    இதனால் கருப்பு நிறமுருங்கையை வாங்குவதற்கு கமிஷன் கடைகாரர்கள் தயாராக இல்லை. இதனால் 1 கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்கின்றனர். இருந்தாலும் விவசாயிகள் தவறாமல் முருங்கைக்காய் பறித்து கொண்டு வந்து கமிஷன் கடையில் குவிக்கின்றனர்.

    தற்போது மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை கொண்டு குவிப்பதால், வியாபாரிகள் இதை வாங்கி, மதுரை, திருச்சி விருதுநகர். சென்னை, கோவை போன்ற பெரும் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் .உற்பத்தி செலவுக்கூட கட்டுபடியாகவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    Next Story
    ×