search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "betel farmers"

    • உடன்குடி வெற்றிலை விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி தினசரி மார்க்கெட்டில் உள்ள வெற்றிலை சங்க அலுவலகத்தில் நடந்தது.
    • கூட்டத்தில் வருட சந்தா கூட்டுவது, வெற்றிலை கமிஷன் ஆகியவற்றை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வெற்றிலை விவசாயசங்க நிர்வாகிகள்கூட்டம் உடன்குடி தினசரி மார்க்கெட்டில் உள்ள வெற்றிலை சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் மகாராஜா தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ஜெயபாண்டி, ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சற்குணராஜ் வரவேற்று பேசினார். சங்க செயலாளர் மங்களராஜ் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்தார். வருட சந்தா கூட்டுவது, வெற்றிலை கமிஷன் ஆகியவற்றை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

    வெற்றிலை பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் மானியம் வழங்க வேண்டும் என்றும், தாம்பூலக்கவரில் வெற்றிலை பயன்படுத்த வேண்டும் என்றும், சங்க உறுப்பினர்கள் தங்களது காலி இடத்தில் வெற்றிலையை அதிகமாக பயிரிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகி ஜெயதாஸ் நன்றி கூறினார்.

    • கூட்டத்திற்கு சங்க தலைவர் வையாபுரி தலைமை வகித்தார்.
    • பொய்யேரி, குப்புச்சி பாளையம் மற்றும் வேலூர் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேராததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


    பரமத்திவேலூர்:


    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டையில் உள்ள வெற்றிலை விவசாயிகள் சங்க அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


    கூட்டத்திற்கு சங்க தலைவர் வையாபுரி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் நடராஜன் முன்னிலை வைத்தார். சங்க செயலாளர் நடேசன் வரவேற்றார். ராஜா வாய்க்காலில் கடைமடை பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் செல்லவில்லை. குறிப்பாக பொய்யேரி, குப்புச்சி பாளையம் மற்றும் வேலூர் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேராததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


    எனவே சம்பந்தப்பட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேருவதற்கான நடவடிக்கை களை நீர்வளத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கம் சார்பில் பரமத்தி வேலூரில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


    ×