search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu annaiyar Munnani Meeting"

    • உடன்குடி ஒன்றியம் ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் வார கூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திருச்செந்தூர் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலை 6 மணிக்கு வீடுகளில் குடும்பத்துடன் அமர்ந்து சஷ்டி கவசம் படிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றியம் செம்மறிகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட ராமசுப்பிரமணியபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் வார கூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவி சூரியகலா தலைமை தாங்கினார். செயலாளர்கள் பத்திரகாளி, தங்கபுஷ்பம், துணைத்தலைவி மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் செல்வி வரவேற்று பேசினார். செயலாளர் சும்புகனி , துணைத்தலைவி சொர்ணமணி அமுதா பட்டுக்கனி, இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கேசவன் கலந்து கொண்டு மகாபாரதம், ராமாயணம் பற்றி பேசினார். திருச்செந்தூர் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலை 6 மணிக்கு வீடுகளில் குடும்பத்துடன் அமர்ந்து சஷ்டி கவசம் படிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்து அன்னையர் முன்னணி சார்பில் அரசர்பேட்டை,பிச்சிவிளை உட்பட 9 கிராமங்களில் இந்து அன்னையர் முன்னணி கூட்டங்கள் நடைபெற்றது.
    • இதில் வருகிற விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அன்னையர் முன்னணி சார்பாக வீடு, வீடாக விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்து நீர்நிலைகளில் கொண்டு விஜர்சனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    உடன்குடி:

    திருச்செந்தூர், உடன்குடி ஒன்றிய பகுதிகளில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அரசர்பேட்டை, தைக்காவூர், அம்மன்புரம் சீர்காட்சி, பிச்சிவிளை உட்பட 9 கிராமங்களில் இந்து அன்னையர் முன்னணி கூட்டங்கள் நடைபெற்றது. இதில் வருகிற விநாயகர் சதுர்த்தியை யொட்டி இந்து அன்னையர் முன்னணி சார்பாக வீடு, வீடாக விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்து நீர்நிலைகளில் கொண்டு விஜர்சனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் பொறுப்பாளர்கள் வரலெட்சுமி, ஆனந்தி, சித்ரா, சுமதி சைலா, சூரியகலா, சிங்காரக்கனி, பத்ரகாளி அம்மாள்கனி, பேபி ஜெயசெல்வி, செல்வி ராஜசிபா, வேல்கனி, இசக்கியம்மாள், சுயம்புகனி, மணிமேகலை சிவகுமாரி, செல்வலெட்சுமி, செல்வகுமாரி, அமுதா, விமலா லட்சுமி. அனிதா, சுஜாதா, பத்திரசீத்தா, இசக்கியம்மாள், தாமரைச்செல்வி, அன்னம்மாள், பொன்னி இசக்கி, அலமேலு, சித்திரைபுஷ்பம், அனுசியா மல்லிகா, அன்னபுஷ்பம் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×