search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aram Valartha nayagi amman"

    • அறம் வளர்த்த நாயகி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வருதல் நடைபெற்றது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மண் எடுத்தல், காப்பு கட்டுதல் நடைபெற்றது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வருதல், சமய சொற்பொழிவு, திருமுறைப் பண்ணிசை, திருச்சுன்னம் இடித்தல், அம்பாள் புறப்பாடு போன்ற பல நிகழ்சிகள் நடைபெற்றது.

    கடந்த 7-ந்தேதி திருக்கல்யாண காப்பு கட்டுதல், 8 -ந்தேதி காலையில் அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், மாலையில் சுவாமி காட்சி கொடுக்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், இரவில் அம்பாள் பல்லக்கில் கதிர் குளிப்புக்கு எழுந்தருளல், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதிகாலை 5 மணிக்கு அறம் வளர்த்த நாயகிக்கு திருமாங்கல்யதாரணம் திருமங்கல நாண் பூட்டுதல் வைபவம், அன்னதானம் தொடர்ந்து திருக்கல்யாணக் கோலத்தில் அம்பாள் மற்றும்சுவாமி பட்டினப் பிரவேசத்திற்கு எழுந்தருளல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை குலசேக ரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிர மணி யன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×