search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transfer"

    • மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார்.
    • சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த விஜய்பாபு சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சேலம் ஆவின் பொது மேலாளராக பணிபுரிந்து வந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அரசா ணையில் கூறப்ப ட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
    • பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜகுரு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தர விட்டுள்ளார்.

    இதன்படி ஆர்.எஸ்.மங்கலம் நில எடுப்பு தனி தாசில்தார் பார்த்த சாரதி பரமக்குடி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய தமீம் ராசா, ராமநாதபுரம் சிவில் சப்ளை தனி தாசில்தாராக பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் சிவில் சப்ளை தனி தாசில்தார் தமிழ்செல்வி, திருவா டானை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய செந்தில்வேல் முருகன் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் டாஸ்மாக் குடோன் மேலாளர் சுரேஷ் குமார், ராமநாதபுரம் தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய முரு கேசன், ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஞானசிரோன் மணி, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய சேகர், பரமக்குடி நகர நிலவரி திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். முதுகுளத்தூர் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் சேதுராமன், ராமநாதபுரம் டாஸ்மாக் குடோன் மேலாளராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மரகதமேரி, கடலாடி தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய முருகவேல் உப்பூர் அனல் மின் திட்ட அலகு 2 நில எடுப்பு தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய உமா மகேஸ்வரி, ராமேசுவரம் தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜகுரு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலராகவும், இங்கு பணியாற்றிய சுகுமாறன், பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோயில் நிலங்கள் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 26 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
    • இதில் 200 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 26 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இங்கு பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் 3 வருடத்திற்கு ஒருமுறை அரசு உத்தரவு படி இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 200- க்கும் மேற்பட்ட போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இதையடுத்து பணிமாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு செல்லாமல் பெரும்பாலான போலீசார் அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பணிமாற்றத்தை எதிர்பார்த்த போலீசார் தவித்து வருகின்றனர்.

    • கல்வித்துறை அலுவலர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது.
    • முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமநாதபுரம் பாலாஜி, மண்டபம் முருகம்மாள் முன்னிலை வகித்தனர்.

    3 ஆண்டுகளுக்கு மேலாக முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது. பணியில் சேர்ந்த நாள் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் 110 இடங்களை கலந்தாய்வில் தேர்வு செய்தனர். இன்று (30-ந் தேதி) ஆன்லைனில் மாவட்டம் விட்டு மாவட்டம் தேர்வு செய்யும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏற்காடு சோதனைச்சாவடி வன ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • ஏற்காடு அடிவார பகுதியில் பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக புகார் எழுந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் இருந்து முறையான அனுமதி பெறாமல் தனியார் எஸ்டேட்களில் இருந்து பல வகை மரங்களை வெட்டி கடத்துவதாக புகார்கள் எழுந்தது. மலைப் பாதை வழியே மர லோடு ஏற்றி வரும் லாரிகளை சோதனையிட அடிவாரப்பகுதியில் வனத்து றையின் சோதனைச்சாவடி இருக்கிறது.

    இங்கு பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக கூறப்படுகிறது.

    இது பற்றி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில் ஏற்காடு அடிவார சோதனைசாவடியில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் புகழேந்தியை அஸ்தம்பட்டி சந்தன மர குடோனுக்கு அதிரடியாக இடமாற்றி உத்தரவிட்டுள்ளார். அேதபோல் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்தில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் அசோகனை ஏற்காடு சோதனைசாவடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

    • நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் வள்ளியூர் சரகத்திற்குட்பட்ட 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்
    • திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜமால், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டிற்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வள்ளியூர் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் வள்ளியூர் சரகத்திற்குட்பட்ட 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    இன்ஸ்பெக்டர்கள்

    அதன்படி திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜமால், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டிற்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வள்ளியூர் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வள்ளியூர் குற்றப்பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சாந்தி திசையன்விளை போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளளர்.

    இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பணகுடி சரகத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

    • இதேபோல் வருவாய் அலகில் பணியாற்றிய இளநிலை வருவாய் ஆய்வா ளர்கள், தட்டச்சர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் 25 பேருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
    • தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் பணிபுரிந்த செல்வகுமார், தஞ்சை தனி தாசில்தார் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    அதன் பற்றிய விவரம் வருமாறு:-

    திருவிடைமருதூர் தாலுகா அலுவலகமுதுநிலை வருவாய் ஆய்வாளர் பரிமளா, கும்பகோணம் தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) அலுவலகத்துக்கும், தஞ்சை தனி துணை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த சரவணன் கும்பகோணம் தனி தாசில்தார் (ஆதிதிரா விடர் நலத்துறை) அலுவல கத்துக்கும், தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் பணிபுரிந்த செல்வகுமார், தஞ்சை தனி தாசில்தார் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.

    தஞ்சை தனி தாசில்தார் அலுவலகத்தில் பணி யாற்றிய சத்யராஜ், பாபநாசம் தாலுகா அலுவலகத்துக்கும், பூதலூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த மதியழகன் தஞ்சை தாலுகா அலுவலகத்துக்கும், இங்கு பணியாற்றிய கலை யரசி தஞ்சை மாவட்ட வழங்கள் மற்றும் நுக ர்வோர் பாதுகாப்பு அலுவல கத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இங்கு பணியாற்றிய ஜெபராஜ் பூதலூர் தனித்துறை தாசில்தார் (குடிமை பொருள் வழங்கல் ) அலுவலகத்துக்கும், ஒரத்தநாடு தாலுகா அலுவலகத்தில் பணியா ற்றிய நரேந்திரன் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கும், திருவையாறு தாலுகா அலுவலகத்தில் பணியா ற்றிய சுமதி பாபநாசம் தாலுகா அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.

    இதேபோல் வருவாய் அலுவலகில் பணியாற்றிய இளநிலை வருவாய் ஆய்வா ளர்கள், தட்டச்சர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் 25 பேருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி வருவாய் அலகில் தட்டச்சர்களாக பணியாற்றிய சீதளா தேவி, சக்தி தேவி, கௌதமன், பிரகாஷ், முத்துக்குமார், மகேஸ்வரி, ஜெயந்திரன், தில்சாத், சத்தியா ஆகியோருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் இளநிலை வருவாய் ஆய்வாளர் ரகுராமன், சுஜிதா, கவிதா, சுதா, கவிதா, மனோகரன், இளவரசன், தமிழ்வாணன் ஆகியோருக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்ப ட்டுள்ளது.

    இதேபோல் கிராம நிர்வாக அலுவலர்கள் பாரதிதாசன் (திப்பன் விடுதி), ரத்தினவேல் (காலகம்), சக்திவேல் (குருவி க்கரம்பை), ஜெயசீலன் (பழமார்னேரி), ரமேஷ் (செல்லப்பன் பேட்டை), அர்ச்சனா (கண்டியூர்), சங்கீதா (வீரியங்கோட்டை), அசாருதீன் (கொரநாட்டு கருப்பூர்) ஆகியிருக்கும் முதுநிலை வருவாய் ஆய்வா ளர்களாக பதிவு உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் மொத்தம் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • இதில் 1200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மொத்தம் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தினர்.

    இதில் பல்வேறு கடை களில் கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதில் கடந்த 2 மாதத்தில் மட்டும் ரூ.5 கூடுதலாக மது விற்ற 55 பணியாளர்கள், ரூ.10 கூடுதலாக மது விற்ற 15 பணியாளர்கள் என மொத்தம் 70 பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இதில் ரூ.10 கூடுதலாக மது விற்ற 15 பேரை இடமாற்றம் செய்ய மண்டல அதகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை பரிசீலித்த மண்டல அதிகாரிகள், 15 பணியாளர்களை குறைந்த அளவு விற்பனையாகும் கடைகளுக்கு இடமாற்றம் ெசய்ய உத்தரவிட்டுள்ளார். இதனை டாஸ்மாக் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 4 வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    • உடனடியாக பொறுப்பேற்க வேண்டும்

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் சிவகுமார் கரூர் வட்டாட்சியராகவும், அங்கிருந்த பன்னீர் செல்வம் இந்து சமய அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் அலுவலக தனி வட்டாட்சியராவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் கரூர் உதவி ஆணையர் அலுவலக தனி வட்டாட்சியராக இருந்த வெங்கடேசன் குளித்தலை சமூக பாதுகாப்பு திட்டதனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த கலியமூர்த்தி குளித்தலை வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

    • காங்கேயம் டிஎஸ்பி.யாக சிவகங்கை மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பல்லடம் டி.எஸ்.பி .யாக ராமநாதபுரத்தில் பணியாற்றிய சவுமியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . அதன்படி காங்கேயம் டிஎஸ்பி.யாக இருந்த குமரேசன் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக சிவகங்கை மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பல்லடம் டி.எஸ்.பி .யாக இருந்த வெற்றிச்செல்வன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராமநாதபுரத்தில் பணியாற்றிய சவுமியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பி.யாக இருந்தராகவி புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், மாயவன் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், பிரபு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • 26 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
    • கலெக்டர் கவிதா ராமு நடவடிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் கவிதா ராமு உத்தவிட்டுள்ளார். அதன்படி, புதுக்கோட்டை காவிரி -குண்டாறு இணைப்பு திட்ட த னி வட்டாட்சியராக இருந்த விஜயலட்சுமி, புதுக்கோட்டை வட்டாட்சியராகவும், ஆலங்குடி தனி வட்டாட்சியர் ராஜேஸ்வரி கந்தர்வக்கோட்டை வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மணமேல்குடி தனி வட்டாட்சியர் ராமசாமி கறம்பக்குடிக்கும், காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அறந்தாங்கிக்கும், குளத்தூர் தனி வட்டாட்சியர் சதீஸ் விராலிமலைக்கும் வட்டாட்சியர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அறந்தாங்கி தனி வட்டாட்சியர் பிரகாஷ் பொன்னமராவதிக்கும், கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் புவியரசன் புதுக்கோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், இதே போன்று மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்த வட்டாட்சியர்கள் மற்றும் அதற்கு இணையான அலுவலர்கள் 26 பேர் பணணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது.
    • 472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

    திருப்பூர் :

    தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், இடமாறுதல் கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது.

    முதல் நாளன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி, பல்லடம் மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் அனைத்து ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இதில் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டு விரும்பும் இடங்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் 472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் வெளி மாவட்டத்தில் பணியாற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  

    ×