search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 15 பேர் இடமாற்றம்
    X

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 15 பேர் இடமாற்றம்

    • சேலம் மாவட்டத்தில் மொத்தம் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • இதில் 1200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மொத்தம் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தினர்.

    இதில் பல்வேறு கடை களில் கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதில் கடந்த 2 மாதத்தில் மட்டும் ரூ.5 கூடுதலாக மது விற்ற 55 பணியாளர்கள், ரூ.10 கூடுதலாக மது விற்ற 15 பணியாளர்கள் என மொத்தம் 70 பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இதில் ரூ.10 கூடுதலாக மது விற்ற 15 பேரை இடமாற்றம் செய்ய மண்டல அதகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை பரிசீலித்த மண்டல அதிகாரிகள், 15 பணியாளர்களை குறைந்த அளவு விற்பனையாகும் கடைகளுக்கு இடமாற்றம் ெசய்ய உத்தரவிட்டுள்ளார். இதனை டாஸ்மாக் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×