search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைநிலை ஆசிரியர்"

    • மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.
    • பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.

    ஈரோடு, 

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், 2023–-24-ம் கல்வி ஆண்டுக்கான, 2 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

    விருப்பம் உள்ளோர் வரும் 5-ந் தேதி முதல் 15-ந தேதி வரை, https://scert.tnschool.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க முடியாதவர்கள் அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

    கூடுதல் விபரத்தை, இணைய தளத்திலும் அறியலாம். தமிழ், தெலுங்கு, உருதில் ஏதாவது ஒன்றை பயிற்சி மொழியாக கொள்ள விரும்புவோர், பிளஸ்-2 வில் மொழி பாடமாக படித்திருக்கவேண்டும். ஆங்கில வழியில் பயில விரும்புவோர், பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.

    பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றப்படுகிறது. பொதுப்பிரிவு, பிறர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வயது, கட்டண சலுகை உள்ளது. உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது.
    • 472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

    திருப்பூர் :

    தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், இடமாறுதல் கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது.

    முதல் நாளன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி, பல்லடம் மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் அனைத்து ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இதில் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டு விரும்பும் இடங்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் 472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் வெளி மாவட்டத்தில் பணியாற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  

    ×