இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது.472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், இடமாறுதல் கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது.

முதல் நாளன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி, பல்லடம் மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் அனைத்து ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இதில் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டு விரும்பும் இடங்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் 472 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் வெளி மாவட்டத்தில் பணியாற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com