search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thala Ajith"

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் நடிக்க பிரபல மூத்த நடிகர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thala59 #AjithKumar
    அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    தற்போது இந்த கூட்டணியில் நடிகர் டெல்லி கணேஷ் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ‘ஜனா’, ‘பகைவன்’, ‘தொடரும்‘ ஆகிய படங்களில் டெல்லி கணேஷ் மற்றும் அஜித் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது, ‘தல 59’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.



    இந்த படம் மே1-ந் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று ரிலீசாகும் என்று செய்திகள் வருகின்றன. மே 1-ந் தேதி சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த `மிஸ்டர்.லோக்கல்' படமும் ரிலீசாக இருக்கிறது. இதன் மூலம் அஜித், சிவகார்த்திகேயன்  படங்கள் நேரடியாக மோதும் வாய்ப்பு உருவாகி உள்ளது. #Thala59 #AjithKumar #ThalaAjith #VidyaBalan #ShraddhaSrinath #DelhiGanesh

    சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘விஸ்வாசம்‘ படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீசாகவிருக்கிறது. #Viswasam #AjithKumar
    அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 40 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது.



    இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்றுள்ள நிலையில், கன்னடத்தில் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் பிற மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. இதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படம் வருகிற மார்ச் 1-ல் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Viswasam #AjithKumar #Nayanthara

    கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, என்னவிதமான படங்களை இயக்குவீர்கள்? என்ற கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார். #KarthikSubbaraj
    ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் தங்களுக்கென ஒரு இமேஜ் வளர்த்திருக்கின்றனர். அவர்களை இயக்கும் இயக்குனர்களும் அந்தந்த ஹீரோக்களுக்கு ஏற்பவே கதை தயார் செய்கின்றனர்.

    விஜய்சேதுபதி நடித்த பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறி முழுக்க ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ப ரஜினியின் ‘பேட்ட’ படம் இயக்கினார்.



    பொங்கலையொட்டி வெளியான இந்த படம் ஹிட்டானது. இந்நிலையில் கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, ‘என்னவிதமான படங்களை இயக்குவீர்கள்?’ என்றதற்கு பதில் அளித்தார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, ’கமலை வைத்து வரலாற்று சிறப்பம்சம் கொண்ட படத்தை இயக்குவேன். விஜய்யை வைத்து கேங்க்ஸ்டர் படமும், அஜித்தை வைத்து காமெடி படமும் இயக்குவேன்’ என்றார். கார்த்திக் சுப்புராஜின் இந்த பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    எச்.வினோத் இயக்கத்தில் தல 59 படத்துக்காக ஐதராபாத் சென்றுள்ள அஜித், படத்திற்காக 20 நாட்களை கால்ஷீட்டாக கொடுத்துள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith
    எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்தான் இது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

    சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகளில் அஜித் இன்னும் கலந்துகொள்ளவில்லை.



    இந்தப் படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இதுவரை படம் பிடிக்கப்பட்டு வந்தன. அஜித் இல்லாமலேயே மூன்று நடிகைகளை வைத்தே படத்தின் 25 சதவீத படப்பிடிப்பு பணிகளை வினோத் முடித்துவிட்டார். நாளை முதல் 2-வது கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

    அஜித்தும் படப்பிடிப்பில் சேர இருக்கிறார். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கும் அஜித் இதற்காக தாடி வளர்த்து வருகிறார். மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #ShraddhaSrinath #VidyBalan

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தின் மூலம் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி தமிழில் அறிமுகமாகவிருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #JhanviKapoor
    இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோது அஜித்தை வைத்து படம் தயாரிக்கவும், அந்த படத்தில் தங்கள் மகள் ஜான்வியை நடிக்க வைக்கவும் விருப்பப்பட்டுள்ளார்.

    அவர் ஆசையை நிறைவேற்றும் வகையில் முதன்முறையாக போனி கபூர் தயாரிப்பில் ரீமேக் படத்தில் அஜித் நடிக்கிறார். இந்தி பிங்க் படத்தின் கதையில் அஜித்துக்காக சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார். வித்யா பாலனுக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், இதில் இன்னொரு மாற்றமாக அஜித்துக்கு ஒரு மகள் இருப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மகள் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கிறார் என்றும் செய்தி வருகிறது. 



    தடக் என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமான ஜான்விக்கு தமிழில் இது முதல் படமாக அமைய இருக்கிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #JhanviKapoor

    சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘விஸ்வாசம்‘ படத்திற்கு கர்நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு படம் ரிலீசாகவிருக்கிறது. #Viswasam #AjithKumar
    அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது.



    இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் பிற மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு, இந்தியில் ஷ்ரத்தா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். #Thala59 #AK59 #ShraddhaSrinath
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 59 படத்தை வரும் கோடை விடுமுறைக்கே ரிலீஸ் செய்வதற்காக பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு என தென் இந்திய மொழிகளில் நடித்து வந்த டாப்சி இந்தியில் அறிமுகமாகி நடித்து வந்தாலும், அவருக்கு பிங்க் திரைப்படம் தான் பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்தியின் முன்னணி கதாநாயகியாகவும் மாற்றியது. 


    இந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். டாப்சி நடித்த வேடத்தில் ஷ்ரத்தா கதாநாயகியாக நடிக்கிறார். தான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு, டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    “குட் லக். எனக்கு முக்கியமான படமாக இது அமைந்தது போல் உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் என நம்புகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி சில நாள்கள் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற உள்ளதால் படக்குழு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. யுவன் ‌ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Thala59 #AK59 #ShraddhaSrinath

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் பணிபுரிபவர்கள் யார் யார் என்பது பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #AK59 #Thala59 #AjithKumar
    `விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தல 59 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து போனி கபூர் கூறும் போது, வித்யாபாலன் தமிழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. அவர் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கோகுல் சந்திரன் படத்தொகுப்பையும், திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளையும், கே.கதிர் கலை பணிகளையும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும் கவனிக்கிறார்கள்.

    அஜித் பற்றி போனி கபூர் கூறும்போது, “இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்பதால் அதனை உருவாக்குகிறோம். அத்துடன் அஜித்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைவது மகிழ்ச்சி. பிங்க் ரீமேக்கை மே 1-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அஜித்துடனான இரண்டாவது படம் 2020 ஏப்ரலில் திரைக்கு வரும். எச்.வினோத் போன்ற சிறந்த இயக்குநர் அமைந்ததில் மகிழ்ச்சி என்றார். #AK59 #Thala59 #AjithKumar #VidyaBalan #ShraddhaSrinath

    எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை என்று நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Ajith #Ajithkumar
    சில தினங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் குறிப்பிட்ட கட்சியில் இணைந்திருப்பதாக செய்திகள் வந்தது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அஜித் அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இதையறிந்த அஜித் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ‘நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம். சில  வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான். என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர்கள் இயக்கங்களின் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு அது.

    என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்தப் படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொது மக்கள் இடையே விதைக்கும்.

    இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்ன வென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்பு. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும் மாட்டேன். நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும், அதையேதான் நான் வலியுறுத்துகிறேன். அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்று பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.



    அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை, மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை.

    எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடைமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை உறுதி செய்த வித்யா பாலன், தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். #Thala59 #PinkRemake #VidyaBalan
    விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வித்யா பாலன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இந்தி சினிமாவில் உண்டு.

    முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் வழக்கமாகவே வைத்திருந்தார். மூன்றாம் பிறை படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் 1983-ம் ஆண்டு உருவானது. அந்தப் படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலனிடம் பேசப்பட்டது. ஆனால் அந்தப் படத்தை ரீமேக் செய்து அதன் தரத்தை குறைத்துவிடக் கூடாது என அதில் நடிக்க மறுத்தார்.



    தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் எவ்வாறு நடிக்கச் சம்மதித்தேன் என்பதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “இந்தப் படத்தில் நான் சிறிய வேடத்தில் நடிக்கிறேன். போனி கபூர் தயாரிக்கிறார். அவர்தான் சிறப்பு தோற்றம் தான் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் உங்களுக்காக நடிக்கச் சம்மதிக்கிறேன் என்றேன். எனக்குப் படங்களை ரீமேக் செய்வது பிடிக்காது. முழுக்க முழுக்க போனி கபூருக்காகவே நடிக்கிறேன்” என்று வித்யா பாலன் கூறியுள்ளார். #Thala59 #AjithKumar #PinkRemake #VidyaBalan

    சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘விஸ்வாசம்’ படம் குறித்து தயாரிப்பாளரிடம் எல்லாம் கடவுள் கையில் என்று அஜித் கூறியிருக்கிறார். #Viswasam #Ajith
    சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்‘. தமிழகத்தின் வசூலில் ‘பேட்ட’ படத்தைத் தாண்டி ‘விஸ்வாசம்‘ படமே முதலிடத்தில் உள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியதாவது:-

    எடிட்டிங்கில் படத்தைப் பார்த்தவுடனே, கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பினோம். படம் வெளியானவுடன் அஜித் சாரிடம் இதை எதிர்பார்க்கவில்லை, அஜித் சாருடைய படங்களில் இது பெஸ்ட் என்று சொல்றாங்க. எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. 



    படம் வெளியான அன்று காலையில் அஜித் சாருக்கு போன் பண்ணி, ‘அனைத்து ஊர்களிலிருந்து வரும் ரிப்போர்ட் ரொம்ப நல்லாயிருக்கு. ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு சார். உங்களுடைய நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்’ என்றேன். அதற்கு ‘அனைத்துமே கடவுள் கையில் தான் இருக்கிறது’ என்றார். அவர் ரொம்ப கடினமாக உழைக்கும் மனிதர். அவருடைய உழைப்பு படத்தில் தெரியும்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ரசிகர்களுக்காக அதை கண்டிப்பாக பண்ணுவேன் என்று ரோபோ சங்கரிடம் கூறியிருக்கிறார். #Ajith #ThalaAjith
    சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்‘. ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியானதால் கடும் போட்டி நிலவியது.

    தமிழகத்தின் வசூலில் ‘பேட்ட’ படத்தைத் தாண்டி ‘விஸ்வாசம்‘ படமே முதலிடத்தில் உள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அஜித் ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாடி வரும் வேளையில், ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித்துடன் நடித்த ரோபோ ‌ஷங்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ரசிகர்கள் செய்யும் அனைத்து வி‌ஷயங்களையுமே அஜித் சார் பார்த்து ரொம்பவே சந்தோ‌ஷப்படுகிறார். இவ்வளவு அன்பு வைச்சுருக்காங்க... இதற்கு என்ன பண்ணப் போறேன். இவ்வளவு ஆபரே‌ஷனிலும் நான் எழுந்து நடிக்கிறேன், நடக்கிறேன், ஆடுறேன், பாடுறேன் என்றால் அனைத்துமே அவர்களுடைய ஆசி தான் ரோபோ ஜி என்று ரொம்பவே நெகிழ்ச்சியுடன் சொன்னார். 



    இவ்வளவு ரசிகர்களை நான் அடுத்தடுத்த படங்கள் கொடுத்து எப்படி சமாளிக்கப் போறேன் என்றார் அஜித் சார். அதற்கு நீங்கள் வருடத்துக்கு 2 படங்கள் இறக்குங்க. கொண்டாடிக்கிட்டே இருப்பாங்க. 2, 3 வரு‌ஷமெல்லாம் கேப் விடாதீங்க என்றேன். கண்டிப்பா பண்ணனும், ரசிகர்களுக்காகவே பண்ணனும் என்றார்’. இவ்வாறு ரோபோ ‌ஷங்கர் தெரிவித்துள்ளார்.
    ×