என் மலர்

  சினிமா

  தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
  X

  தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எச்.வினோத் இயக்கத்தில் தல 59 படத்துக்காக ஐதராபாத் சென்றுள்ள அஜித், படத்திற்காக 20 நாட்களை கால்ஷீட்டாக கொடுத்துள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith
  எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்தான் இது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

  சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகளில் அஜித் இன்னும் கலந்துகொள்ளவில்லை.  இந்தப் படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இதுவரை படம் பிடிக்கப்பட்டு வந்தன. அஜித் இல்லாமலேயே மூன்று நடிகைகளை வைத்தே படத்தின் 25 சதவீத படப்பிடிப்பு பணிகளை வினோத் முடித்துவிட்டார். நாளை முதல் 2-வது கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

  அஜித்தும் படப்பிடிப்பில் சேர இருக்கிறார். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கும் அஜித் இதற்காக தாடி வளர்த்து வருகிறார். மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்து மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #ShraddhaSrinath #VidyBalan

  Next Story
  ×