search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "testing"

    • காரைக்குடியில் பதனீரை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
    • பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

    காரைக்குடி

    காரைக்குடியில் கடந்த மாதம் முதல் பல்வேறு இடங்களில் பதநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அதிகாலை பதநீர் இறக்கப்பட்டு வேன் மூலமாக காரைக்குடிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    உடலிற்கு நலம் பயக்கும் பதநீரை மக்கள் ஆர்வமாக வாங்கி பருகி வருகின்றனர்.அதே வேளையில் இந்த பதநீரில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவ தாகவும் இனிப்பு சுவைக்காக சீனி மற்றும் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமைமையில் உணவு பாதுகாப்பு அலு வலர்கள் முத்துக்குமார், சாக்கோட்டை பிளாக் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் பதநீர் விற்பனையை ஆய்வு செய்தனர். பல்வேறு இடங்களிலும் சோதனைக்காக மாதிரி களை எடுத்துச் சென்றனர்.

    மேலும் பதநீர் விற்பனையாளர்களிடம் பதநீர் இறக்கவும் விற்பனை செய்யவும் முறையான அனுமதி பெறவேண்டும் எனவும், அதிகாலை இறக்கப்படும் பதநீரை பகல் ஒரு மணிக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    காரைக்குடி 100 அடி சாலையில் விற்பனை செய்து வந்த பதநீரில் இனிப்புக்காக சர்க்கரை சேர்த்து விற்பனை செய்வதை அறிந்து சுமார் 50 லிட்டர் அளவிலான பதநீரை சாக்கடையில் கொட்டிச் சென்றனர்.

    இதுகுறித்து அலுவலர் டாக்டர் பிரபாவதி கூறுகையில், பதநீரில் ரசாயன பொருட்களை கலந்தால் அதனை அருந்துவோருக்கு கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் உணவு முறைகேடு சம்பந்தமாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

    • வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலியானார்.
    • முருகன் கனகாவின் வீட்டில் நேற்று மைக் செட் மற்றும் டியூப் லைட் கட்டி மின் இணைப்பு கொடுத்தார்.

    கடலூர்:

    வேப்பூர் அடுத்த மங்களூர் காட்டுக்கொட்டகை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் சவுண்டு சர்வீஸ் கடை வைத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த கனகாவின் வீட்டில் நேற்று மைக் செட் மற்றும் டியூப் லைட் கட்டி மின் இணைப்பு கொடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக முருகன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பான புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
    • கண் பார்வை குறைவு உள்ளிட்டவைகள் குறித்து சோதனை செய்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ரோட்டரி சங்கம் மற்றும் எல்.பி.எப். தொழிற்சங்கம் சார்பில் நகராட்சி துப்புரவு பணி, தூய்மை பணி ஊழியர்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார்.

    செயலாளர் நவநீதகண்ணன், பொருளாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.பி. எப். தொழிற்சங்க நகராட்சி பிரிவு தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

    முகாமை நகர மன்ற தலைவர் செல்வராஜ் துவைக்கி வைத்தார்.

    முகாமில் புதிய நவீன கருவிகள் கொண்டு நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

    இதில் புரை கண், கண் மறைவு, கண் பார்வை குறைவு உள்ளிட்டவைகள் சோதனை செய்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது. அந்த முகாமிலேயே மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

    இதில் ஏரானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் தேர்வு முருகேசன் சாசன தலைவர் ராமன் மற்றும் ஆர்.கே.சேகர், தனபால், குஷிமாதவன், தங்கதுரை ராஜ், இளங்கோ, உள்ளிட்ட உறுப்பினர்கள், திமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் பொறுப்பாளர்கள் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஜேடர்பாளையம் ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வானங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
    • இது போன்று வாகன சோதனை நடத்தி னால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லூர்,வேல கவுண்டன்பட்டி,

    ஜேடர்பாளையம் ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் இரு சக்கர வாக னங்களை திருடிக் கொண்டு வானங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

    அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரம் செய்வது போல் வரும் மர்ம நபர்கள் அப்பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகள், தனியாக வாகனம் நிறுத்தப்படும் இடங்கள், வீடுகளில் தனி நபர்கள் இருப்பது ,வெளியூர்களுக்கு சென்றவர்களின் வீடுகள் போன்றவற்றை கண்கா ணித்து அப்பகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர்.

    அதேபோல் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாக னத்தில் சென்று விடுகின்ற னர். இதனால் நகை மற்றும் பணத்தை பறிகொடுத்த வர்கள் பரிதவித்து இருக்கின்றனர்.

    இதன் காரணமாக போலீ சார் தனித்தனி குழுக்களாக பிரிந்து முக்கிய பகுதிகளில் நின்று அந்த வழியாக வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இது போன்று வாகன சோதனை நடத்தி னால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் சிகிச்சை.
    • சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    வேதாரண்யம்:

    நாகைமண்டல இணை இயக்குனர் விஜயகுமார், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோரின் அறிவுரையின் பேரில் வேதாரண்யம் தாலுக்கா மணக்குடி ஊராட்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது

    முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை குடற்புழு நீக்கம் பெரியம்மை தடுப்பூசி போடுதல் ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடபட்டன.

    மேலும் சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பரிசுகள் வழங்க ப்பட்டன முகாமில் கால்நடை உதவி மருத்துவர் ஸ்ரீதர் பாபு கால்நடை ஆய்வாளர் செல்விஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் நாமக்கல், திருச்சி ரோட்டில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தது அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • அவர்கள் 2 பேரையும், போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்கள் வந்த கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் நாமக்கல், திருச்சி ரோட்டில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தது அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில் காரில் இருந்தவர் திருச்சியை சேர்ந்த ராஜ்கமல் என்பதும், மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலகுமார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜ்கமல் மீது தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பாலகுமார் மீது சில வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. 2 பேரையும், போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்கள் வந்த கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • தஞ்சை பெரிய கோவில் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கண்காணிப்பு தீவிரம்.
    • போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் எளிமையான முறையில் நடந்த குடியரசு தின விழா இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில், கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில், பூண்டி மாதா தேவாலயம், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சை, கும்பகோணம் பட்டுக்கோட்டை, பாபநாசம் ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

    ரயிலில் ஏறியும் இருப்பு பாதை மற்றும் பாதுகாப்பு படை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். தண்டவாளங்களில் நவீன கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

    மேலும் விடுதிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுகிறது. மேலும் போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தவிர கடல் வழியாக சமூகவிரோதிகள் ஊடுருவாமல் தடுக்க, சேதுபாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கடற்கரை பகுதிகளிலும் கடலோர போலீஸார் படகுகளில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட தப்பகுட்டை கருப்ப கவுண்டனூர் பகுதியில் கடந்த 13 வருடங்களாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
    • நேற்று அதிகாலை தப்பக்குட்டை யில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனிடையே நாகராஜுக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட தப்பகுட்டை கருப்ப கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் வயது( 37 ). இவர் கடந்த 13 வருடங்களாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று முந்தினம் இவர் சொந்த ஊரான தப்பகுட்டை வருவதற்காக சீனாவில் இருந்து தனது மனைவி நாக மலர்விழி(30) மற்றும் மகன், மகளுடன் புறப்பட்டு வந்தார். கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    பின்னர் நேற்று அதிகாலை தப்பக்குட்டை யில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனிடையே நாகராஜுக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது. இதை தொடர்ந்து அவருக்கு எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பதை ஆய்வு செய்வதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துசாமி தலைமையில் மருத்துவக்குழுவினர் தப்பக்குட்டைக்கு விரைந்தனர். அங்கு நாகராஜ் மற்றும் அவரது வீட்டினரை தனிமையில் இருக்க அறிவுரை வழங்கினர். இதயடுத்து நாகராஜ் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவருடன் அவரது தந்தை கிருஷ்ணராஜ்(65), தாயார் சரோஜா(55) ஆகியோரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • உலோக சிலைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சோதனையின் பேரில் சிவகாமி அம்மன் உலோக சிலையை போலீசார் மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் பல ஆண்டுகளாக பழமையான உலோக சிலைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குனர் டாக்டர் ஜெயந்த் முரளி உத்தரவுப்படி காவல் துறைத் தலைவர் டாக்டர் தினகரன் வழிகாட்டுதலின் படி போலீஸ் சூப்பிரண்டு ரவி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், தலைமை காவலர் கோபால், காவலர் பிரவீன் செல்வம் குமார் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சுவாமிமலை யாதவ தெருவில் அமைந்துள்ள சரவணன் என்பவரின் வீட்டில் சோதனை செய்த போது சுமார் 165 சென்டிமீட்டர் உயரமும் 45 சென்டிமீட்டர் அகலமும் உடைய பிரமாண்டமான சிவகாமி அம்மன் உலோக சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

    5 அடிக்கும் மேல் உயரம் கொண்ட சிலைகளை பொதுவாக வீட்டில் வைத்து வழிபாடும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்பதாலும் மேற்படி சிலையானது பார்ப்பதற்கு தொன்மையான தோற்றத்துடனும் இருந்ததாலும், ஏதேனும் ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சிலையை வீட்டில் வைத்திருப்பதற்கான உரிய ஆவணம் கேட்டனர்.

    ஆனால் சரவணன் உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கவில்லை.இதையடுத்து அந்த சிலையை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    அதன் பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.‌

    அதில் மீட்கப்பட்ட சிலை கோவிலில் இருந்து திருடப்பட்டதா ? அல்லது வேறு எங்கிருந்து சிலை வந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்து கடைக்கு சீல் வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன் ஆகியோர் திட்டச்சேரி, மரைக்கான்சாவடி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மரைக்கான்சாவடி மெயின் ரோட்டில் ராஜசேகர் மனைவி கோமதி (வயது 31) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கடைக்கு 'சீல்' வைத்தார்.மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சி பால மார்த்தாண்டபுரத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், மலட்டு நீக்க சிகிச்சை, செயற்கை முறை இன விருத்தி,தடுப்பூசி பணிகள், கால்நடைகள் மேலாண்மை மற்றும் கன்றுகள் பேரணி நடைபெற்றது.

    தென்காசி:

    செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சி பால மார்த்தாண்டபுரத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், மலட்டு நீக்க சிகிச்சை, செயற்கை முறை இன விருத்தி,தடுப்பூசி பணிகள், கால்நடைகள் மேலாண்மை மற்றும் கன்றுகள் பேரணி நடைபெற்றது. சிறந்த கலப்பின கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் முன்னிலை வகித்தார்.

    கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் மற்றும் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் கால்நடை பண்ணை தியோ பிளஸ் ரோஜர், உதவி இயக்குனர் ஜான் சுபாஷ் ஆகியோர் தொழில்நுட்ப உரையாறறினர்.

    தென்காசி கால்நடைத்துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார். மேலும் இதில் மருத்துவர்கள் செல்வகுத்தாலிங்கம், வெள்ளைபாண்டி, சிவக்குமார்,வசந்த மலர், செல்லப்பா ஆகியோர் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


    • போலீசார் மயிலாடுதுறையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • சுமார் 200 லிட்டர் சாராயம் காரைக்காலில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு அன்பழகன், உள்ளிட்ட போலீசார் மயிலாடுதுறையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக காரை மறித்து சோதனை செய்தனர். அதில் சுமார் 200 லிட்டர் சாராயம் காரைக்காலில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மயிலாடுதுறை நீடூர் பகுதி பல்லவராயன் பேட்டை சேர்ந்த பசுபதி (வயது 23) என்பவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×