என் மலர்
நீங்கள் தேடியது "Food Safety"
- வெற்றிலை போடும் பழக்கம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது.
- பாக்கு வாங்குவதற்கு பலரும் தயங்குகின்றனர்.
மடத்துக்குளம் :
பளபளப்பாக இருப்பவையே தரமானவை என்ற தவறான எண்ணம் பலரது மனதில் பதிந்திருக்கிறது. அதனையே வியாபார தந்திரமாக பயன்படுத்தி செயற்கை சாயத்தை உணவுப் பொருட்கள் மீது வியாபாரிகள் பூசி விடுகின்றனர்.
உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும், இத்தகைய தவறை பலரும் தொடர்கின்றனர். இப்படி செயற்கை சாயத்துக்கு வெட்டுப்பாக்கும் தப்பவில்லை.வெற்றிலை போடும் பழக்கம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. வயது முதிர்ந்தவர்களே இன்னும் அப்பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். எனினும் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில் வெற்றிலை பாக்குக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இதற்கு பயன்படுத்தும் வெட்டுப்பாக்கு இயற்கையில் சற்று நிறம் குறைவானதாக இருக்கும். அப்படி நிறம் குறைந்த பாக்கு வாங்குவதற்கு பலரும் தயங்குகின்றனர்.
இதனால் வியாபாரிகள் பாக்கில் செயற்கை சாயத்தை ஏற்றி பளபளப்பாக மாற்றி விடுகின்றனர்.சாயம் ஏற்றிய பாக்குகளை பயன்படுத்துவோருக்கு நிச்சயம் உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க சாயம் ஏற்றப்பட்ட பாக்குகளை வாங்காமல் தவிர்த்தாலே போதும். பளபளவென இருந்தாலே, பாக்கு சாயம் ஏற்றப்பட்டது தான் என்பதை புரிந்து கொண்டு விடலாம். தண்ணீரில் சிறிது நேரம் ஊறினால் பாக்கின் சாயம் வெளுத்து விடும் என்று உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.இத்தகைய கலப்படம் தொடர்பாக 94440 -42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள்.
- ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாதீர்கள்
திருச்சி :
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்து காட்டுப்புத்தூர் ஸ்ரீ நாராயண பிரம்மேந்திரர் திருமண மண்டபத்தில் காட்டுப்புத்தூர் அனைத்து வணிகர் சங்கத்தினர் ஏற்பாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பாதுகாப்பு பிரிவு) உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.காட்டுப்புத்தூர் அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் மணி (எ) சி.குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலரும் வளம் மீட்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வியாளர் டாக்டர்.ச.சாகுல் அமீது, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர்டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தொட்டியம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி டி. செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இதில் வணிகர்கள் கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை எளிய முறையில் கண்டறிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. பேரூராட்சி சிறப்பாக செயல்பட அனைத்து வணிகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஆரோக்கியமான தரமான உணவுப் பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு வேண்டு கோளை வணிகர்சங்கத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் முன்வைத்தது. உணவு பாதுகாப்பில் அதிக கலர் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாதீர்கள் மற்றும் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்து வணிகர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
முடிவில் சங்கத் துணைத் தலைவர் ஜி. மோகன் குமார் நன்றி கூறினார்.
- உணவு திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.
- ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 'திருப்பூர் உணவுத்திருவிழா -2022' காங்கயத்தில் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.விழாவின் ஒரு பகுதியாக காங்கயம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து காலை 8 மணிக்கு, 'வாக்கத்தான்' விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. மேலும், சலங்கையாட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி ஆட்டத்துடன் விழா களைகட்ட போகிறது.உணவுத்திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.
முன்னதாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகளும் நடக்கின்றன.உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகம், ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். படைப்புகளை, eatrighttiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்தும் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 78711 33777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-
உணவு திருவிழாவின் ஒரு பகுதியாக 7-ந் தேதி காலை 10மணிக்கு, காங்கயம் என்.எஸ்.என்., திருமண மண்டபத்தில் சமையல் போட்டி நடக்கிறது.
ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென்னிந்திய சமையல், சிறுதானிய சமையல், பால்வகை சமையல், மறந்து போன உணவகள், சமையல் அலங்காரம் ஆகிய தலைப்புகளில், சமையல் செய்யலாம்.போட்டியில், 'செப்' தாமு மற்றும் 'செப்' அனிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.
சமையல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, 'திருப்பூரின் அறுசுவை அரசி' என்ற பட்டமும், பரிசுகளும் வழங்கப்படும். போட்டியாளர் விரும்பிய உணவுகளை வீட்டில் தயாரித்தும் எடுத்துவரலாம். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறுபவர், இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இறுதிப்போட்டி சமையல் கலைஞர் முன்னிலையில் மண்டபத்தில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
- சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த காய்கறி மற்றும் பழ சந்தைகளை டெல்லியில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்து அதில் சிறந்த சந்தைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறது.
- விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து உணவு பொருட்கள் விற்பனை செய்து உழவர் சந்தை வளாகத்திலேயே பதிவு சான்றிதழ் வழங்கினர்.
நெல்லை:
சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த காய்கறி மற்றும் பழ சந்தைகளை டெல்லியில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்து அதில் சிறந்த சந்தைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறது. நெல்லையில் மகாராஜா நகரில் உள்ள உழவர் சந்தை சிறந்த முறையில் உழவர்கள் கொண்டுவரும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் சந்தையாக செயல்பட்டு வருகிறது.
இதையடுத்து வேளாண் இயக்குனர் நடராஜன், துணை இயக்குனர் முருகானந்தம் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மஹாராஜா நகர் உழவர் சந்தையில் நிர்வாக அலுவலர் பாப்பாத்தி மேற்பார்வையில் உழவர் சந்தையில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமில் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ் உத்தரவின் பேரில் பாளை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து உணவு பொருட்கள் விற்பனை செய்து உழவர் சந்தை வளாகத்திலேயே பதிவு சான்றிதழ் வழங்கினர்.






