search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனை"

    • கர்நாடகாவில் இன்று அதிகாலை முதல் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் 10 மாவட்டங்களில் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொறியாளர் அனுமந்தராயப்பா, பொதுப்பணித்துறை மாண்டியா கோட்ட பொறியாளர் ஹர்ஷா, சிக்மகளூர் வணிகவரி அலுவலர் நேத்ராவதி, ஹாசன், உணவு ஆய்வாளர் ஜெகநாத் ஜி கொப்பல், வனத்துறை அலுவலர் ரேணுகாமா, சாம்ராஜ்நகர் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் ரவி, மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணை அலுவலர் யக்ஞேனந்திரா, பெல்லாரி உதவி பேராசிரியர் ரவி, விஜயநகர மாவட்ட எரிசக்தி துறை அதிகாரி பாஸ்கர், மங்களூரு மெஸ்தாம் அதிகாரி சாந்தகுமார் ஆகியோருக்கு தொடர்புடைய 40 இடங்களில் இந்த சோதனை நடந்துவருகிறது என லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.

    குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பண்ணை வீடுகள், வணிக வளாகங்களில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது.

    லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் நடத்தி வரும் சோதனையால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
    • மாநகரில் கோர்ட் அனுமதியின்றி முறைகேடாக செயல்படும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும்

    திருப்பூர்:

    திருப்பூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நூதன முறையில் பாலியல் தொழில் நடப்பதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருப்பூரில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    இதனைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லையில் குமரன் ரோடு பென்னி காம்பவுண்ட், ஓடக்காடு புஷ்பா தியேட்டர் அருகில் செயல்பட்டு மசாஜ் சென்டர் உள்ளிட்ட மூன்று சென்டர்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அதில் திருப்பூர் பின்னிகா ம்பவுண்ட் பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் நூதன முறையில் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த சென்டரை பூட்டிய போலீசார் அங்கிருந்த உரிமையாளர் மற்றும் இரண்டு பெண்களை திருப்பூர் மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறும்போது திருப்பூர் மாநகரில் கோர்ட் அனுமதியின்றி முறைகேடாக செயல்படும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தென்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தடை செய்யப்பட்ட செல்போன்கள் பறிமுதல்
    • 200 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்

    திருச்சி, 

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை அகதிகள் மற்றும் வெளி–நாட்டு அகதிக–ளுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந் தப்பட்டு ஜாமீனில் இருப் பவர்கள், தண்டனை காலம் முடிந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப சட்ட நடவடிக்கைகளுக்காக காத்திருப்பவர்கள் என ஏரா–ளமானோர் தங்க–வைக் கப்பட்டு உள்ளனர்.தற்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயஸ், முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அடைக் கப்பட்டுள்ளார்கள். இவர்க–ளில் சிலர் முகாமில் இருந்து கொண்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்து வருகிறது.சமீபத்தில் தேசிய பாது–காப்பு முகமை அதிகாரிகள், முகாமில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப் பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து அவ்வப்போது உள்ளூர் காவல்துறையினரும் முகாமில் அதிர–டியாக சோதனை நடத்தி தடை செய்யப்பட்டுள்ள செல் போன் உள்ளிட்ட–வற்றை பறிமுதல் செய்து வருகி–றார்கள்.அதன் தொடர்ச்சியாக இன்று காலை 6 மணி அளவில் திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் அன்பு, ஸ்ரீதேவி மற்றும் 6 உதவி போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட 200 போலீசார் முகாமுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இன்றைய தினமும் சிலரிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக் கின்றன.

    • அனைத்து வாகனங்களையும் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • சந்தேகப்படும்படி பணம் கொண்டு செல்கிறார்களா?

    தஞ்சாவூா்:

    திருவண்ணாமலையில் ஒரே நாளில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை நூதன உடைத்து ரூ.75 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளையர்களை பிடிக்க திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    அந்தந்த மாவட்டங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி தஞ்சையில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுபடி ரெயிலடி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசாரின் அதிரடி வாகன சோதனை நடந்து வருகிறது.

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். உடைமைகளை சோதனை இட்டு அதில் சந்தேகப்படும்படி பணம் கொண்டு செல்கிறார்களா என சோதனையிட்டனர். எங்கிருந்து வருகிறீர்கள் ? எங்கு செல்கிறீர்கள் என தீவிர விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து வாகன சோதனை நடந்து வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அற்புதாபுரம், புதுக்குடி உள்ளிட்ட 8 எல்லைகளிலும் செக்போஸ்ட் அமைத்து தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

    48-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    • தஞ்சை பெரிய கோவில் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கண்காணிப்பு தீவிரம்.
    • போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் எளிமையான முறையில் நடந்த குடியரசு தின விழா இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில், கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில், பூண்டி மாதா தேவாலயம், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சை, கும்பகோணம் பட்டுக்கோட்டை, பாபநாசம் ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

    ரயிலில் ஏறியும் இருப்பு பாதை மற்றும் பாதுகாப்பு படை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். தண்டவாளங்களில் நவீன கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

    மேலும் விடுதிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுகிறது. மேலும் போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தவிர கடல் வழியாக சமூகவிரோதிகள் ஊடுருவாமல் தடுக்க, சேதுபாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கடற்கரை பகுதிகளிலும் கடலோர போலீஸார் படகுகளில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • முருங்கப்பாக்கம் தனியார் பள்ளி அருகில் அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான காரை மடக்கி சோதனை செய்தனர்.
    • திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகரை சேர்ந்த முருகன் என்பவர் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    விழுப்புரம்.

    புதுச்சேரியில் இருந்து நேற்று திண்டிவனத்திற்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் இணையத்பாஷா தலைமையில் பே45ாலீசார், திண்டிவனம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது, ரோஷணை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முருங்கப்பாக்கம் தனியார் பள்ளி அருகில் அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் 48 மதுபாட்டில்களை கொண்ட 20 அட்டைப்பெட்டிகளில், மொத்தம் 1,960 மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து, திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகரை சேர்ந்த முருகன் என்பவர் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    மதுபாட்டில்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 40 ஆயிரமாகும். அதன் பேரில் கார் ஓட்டி வந்த முருங்கப்பாக்கம் சிவசக்தி நகரை சேர்ந்த கெஜராஜ்(வயது34) என்பவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், இவர் மீது ரோஷணை, கிளியனூர், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவில், ஏற்கனவே மதுகடத்தல் வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உணவகங்கள், காய்கறி, பழக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    • கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள உணவகங்களில் நெகிழிப் பொருட்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் கார்த்தி, ஜவகர், சற்குணம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன் பேரூராட்சி பணியாளர்கள் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது உணவகங்கள் காய்கறி மற்றும் பழக்கடைகள் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    • 350 கிலோ புகையிலை- குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • பேரையூரில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே பேரையூர் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னிக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்ப டையில் டி.ஐ.ஜி. தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பேரையூர் முக்கு சாலைப் பகுதியில் குளிர்பானக் கடை வைத்திருக்கும் சம்சுதீன்(53) பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் சப்ளை செய்வது தெரியவந்தத. இதையடுத்து பேரையூரில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் 25 மூட்டையுள்ள 350 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக சம்சுதீனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×