புகையிலை- குட்கா பறிமுதல்

350 கிலோ புகையிலை- குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பேரையூரில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்.
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே பேரையூர் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னிக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்ப டையில் டி.ஐ.ஜி. தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பேரையூர் முக்கு சாலைப் பகுதியில் குளிர்பானக் கடை வைத்திருக்கும் சம்சுதீன்(53) பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் சப்ளை செய்வது தெரியவந்தத. இதையடுத்து பேரையூரில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் 25 மூட்டையுள்ள 350 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக சம்சுதீனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com