search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "checking"

    • தடை செய்யப்பட்ட செல்போன்கள் பறிமுதல்
    • 200 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்

    திருச்சி, 

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கை அகதிகள் மற்றும் வெளி–நாட்டு அகதிக–ளுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந் தப்பட்டு ஜாமீனில் இருப் பவர்கள், தண்டனை காலம் முடிந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப சட்ட நடவடிக்கைகளுக்காக காத்திருப்பவர்கள் என ஏரா–ளமானோர் தங்க–வைக் கப்பட்டு உள்ளனர்.தற்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயஸ், முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அடைக் கப்பட்டுள்ளார்கள். இவர்க–ளில் சிலர் முகாமில் இருந்து கொண்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்து வருகிறது.சமீபத்தில் தேசிய பாது–காப்பு முகமை அதிகாரிகள், முகாமில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப் பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து அவ்வப்போது உள்ளூர் காவல்துறையினரும் முகாமில் அதிர–டியாக சோதனை நடத்தி தடை செய்யப்பட்டுள்ள செல் போன் உள்ளிட்ட–வற்றை பறிமுதல் செய்து வருகி–றார்கள்.அதன் தொடர்ச்சியாக இன்று காலை 6 மணி அளவில் திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் அன்பு, ஸ்ரீதேவி மற்றும் 6 உதவி போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட 200 போலீசார் முகாமுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இன்றைய தினமும் சிலரிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக் கின்றன.

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
    • எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

    திருப்பூர் :

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக் கழக வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில், தமிழகத்தில் இருந்து ரெயில் மூலம் பலர் செல்கின்றனர். இந்த நிலையில் கோவையில் இருந்து காசி தமிழ் சங்கத்தினர் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் கலைபண்பாட்டு, இலக்கிய விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் ரெயிலில் 3பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்தில்2 நிமிடம் நின்று செல்கிறது.

    இந்தநிலையில் மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் ரெயிலில் சோதனை நடத்தப்பட்டது. பயணிகளின் உடைமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர்.

    • வெடி பொருட்களை பொதுமக்கள் ரெயிலில் எடுத்து செல்ல வாய்ப்புள்ளதால், அதற்கு ரெயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.
    • பார்சல்களை மெட்டல் டிடெக்டர் மூலமாக போலீசார் சோதனை செய்தனர்.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    உடமைகள் சோதனை

    இதன் காரணமாக, பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்ற கூடிய வெடி பொருட்களை பொதுமக்கள் ரெயிலில் எடுத்து செல்ல வாய்ப்புள்ளதால், அதற்கு ரெயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ெரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சத்திய தாஸ் மற்றும் ஜான் ஆகியோர் தலைமையில், தலைமை காவலர் அந்தோணி முதல் நிலை பெண் காவலர் புஷ்பலீலா தனிப்பிரிவு முத்தமிழ் செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று ரெயில் நிலையத்தில் பயணிகள் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை கொண்டு செல்கின்றனரா? என கண்காணித்து, அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    பயணிகளுக்கு அறிவுரை

    ரெயில்களில் வந்த பார்சல்களையும் மெட்டல் டிடெக்டர் மூலமாக போலீசார் சோதனை செய்தனர்.

    மேலும், ரெயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததுடன், ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளை அழைத்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

    • நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • ரெயில் நிலையத்திற்கு வரும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

    நெல்லை:

    கோவையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜனதா பிரமுகர்கள் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    பாதுகாப்பு அதிகரிப்பு

    இதில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகிறது. ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் தலைமையில் போலீசார், ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுப்புகிறார்கள்.

    மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகிறது. இதுதவிர நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, டவுன், பாளை உள்ளிட்ட மாநகரின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டத்தின் எல்லை பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் வாகனங்களில் செல்கிறார்களா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில வாகனங்களும் தீவிரமான சோதனைக்கு பிறகே அனுப்பப்படுகிறது.

    ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலங்களுக்கும், முக்கிய நிர்வாகிகள் வீடுகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் ரெயில்நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • மெட்டல் டிடெக்டர் மூலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது

    நெல்லை:

    மத்திய அரசு அறிவித்த 'அக்னிபத்' திட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது.

    இதனையொட்டி தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் இன்று 2-வது நாளாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    ரெயில்வே பாதுகாப்பு கோட்ட கமிஷனர் அன்பரசு உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பிரவீன் மேற்பார்வையில் இன்று ரெயில்வே தண்டவாளங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ்குமார், அஸ்வினி ஆகியோர் தலைமையில் மெட்டல் டிடெக்டர் மூலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் மோப்பநாய் செல்வி வரவழைக்கப்பட்டு அதன்மூலமும் தண்டவாளங்களில் சோதனை நடத்தப்பட்டது. சந்திப்பு ரெயில் நிலையத்தின் வெளியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    ஆரணி மற்றும் போளூரில் பறக்கும்படை சோதனையில் ரூ.2.85 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆரணி:

    பாராளுமன்ற, சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை, நிலைகண்காணிப்பு குழுக்கள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ரிஸ்வான் (25) மாட்டு வியாபாரி.

    இவர் ஆரணி அடுத்த தேப்பனந்தலில் இன்று நடைபெறும் மாட்டு சந்தையில் மாடுகளை வாங்க தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    ஆரணி அடுத்த மலையம்பட்டு கூட்டு ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் படை அலுவலர் பாபு தலைமையிலான குழுவினர் ரிஸ்வான் காரை சோதனை செய்த போது ரூ 1.95 லட்சம் இருந்தது. ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து ஆரணி தாசில்தார் தியாகராஜனிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

    போளூர் அடுத்த வசூர் கூட்ரோட்டில் பறக்கும் படை தாசில்தார் சுரேஷ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கம் அடுத்த காரப்பட்டில் ரைஸ் மில் நடத்தி வரும் சிலம்பரசன் என்பவர் ஓட்டி வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் ரூ.90 ஆயிரம் இருந்தது இந்த பணத்தை வைத்து படவேட்டில் நெல் வாங்க செல்வதாக கூறினார். அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறக்கும் படையினர் பிடித்த ரூ.90 ஆயிரத்தை தேர்தல் பிரிவு அலுவலரிடம் ஒப்படைத்தனர். #tamilnews
    ×