search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலி-நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
    X

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்ட காட்சி.

    தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலி-நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

    • நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • ரெயில் நிலையத்திற்கு வரும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

    நெல்லை:

    கோவையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜனதா பிரமுகர்கள் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    பாதுகாப்பு அதிகரிப்பு

    இதில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகிறது. ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் தலைமையில் போலீசார், ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுப்புகிறார்கள்.

    மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகிறது. இதுதவிர நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, டவுன், பாளை உள்ளிட்ட மாநகரின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டத்தின் எல்லை பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் வாகனங்களில் செல்கிறார்களா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில வாகனங்களும் தீவிரமான சோதனைக்கு பிறகே அனுப்பப்படுகிறது.

    ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலங்களுக்கும், முக்கிய நிர்வாகிகள் வீடுகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×