தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை

வெடி பொருட்களை பொதுமக்கள் ரெயிலில் எடுத்து செல்ல வாய்ப்புள்ளதால், அதற்கு ரெயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. பார்சல்களை மெட்டல் டிடெக்டர் மூலமாக போலீசார் சோதனை செய்தனர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்த காட்சி.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்த காட்சி.
Published on

நெல்லை:

தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

உடமைகள் சோதனை

இதன் காரணமாக, பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்ற கூடிய வெடி பொருட்களை பொதுமக்கள் ரெயிலில் எடுத்து செல்ல வாய்ப்புள்ளதால், அதற்கு ரெயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ெரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சத்திய தாஸ் மற்றும் ஜான் ஆகியோர் தலைமையில், தலைமை காவலர் அந்தோணி முதல் நிலை பெண் காவலர் புஷ்பலீலா தனிப்பிரிவு முத்தமிழ் செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று ரெயில் நிலையத்தில் பயணிகள் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை கொண்டு செல்கின்றனரா? என கண்காணித்து, அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

பயணிகளுக்கு அறிவுரை

ரெயில்களில் வந்த பார்சல்களையும் மெட்டல் டிடெக்டர் மூலமாக போலீசார் சோதனை செய்தனர்.

மேலும், ரெயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததுடன், ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளை அழைத்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com