search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers protest"

    • வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது
    • 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

    பாட்னா:

    பீகாரின் பாட்னா நகரில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

    போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வாக்குறுதி அளித்து, இதுவரை 6 கட்டங்களாக ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டுளள்து. 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர். 7வது கட்ட ஆட்சேர்ப்பின் கீழ், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒட்டன்சத்திரம் வட்டாரக்கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பென்சன் திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் பழைய பென்சன் திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒட்டன்சத்திரம் வட்டாரக்கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்ட த்திற்கு வட்டார தலைவர் ஆரோக்கிய ஞானசேகர் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் காளி மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் லாசர் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை யாற்றினர்.

    வட்டார பொருளாளர் ஜெய்நேச சாந்தினி நன்றி கூறினார்.

    • நெல்லையில் டி.டி. டி.ஏ நிர்வாகத்தின் கீழ் பணி புரியும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பல வருடங்களாக பெரும்பாலான ஆசிரியர்கள் ஊதியம் இன்றி பணிபுரிந்து வருகின்றனர்.
    • கடந்த 2004 -ம் ஆண்டு முதல் தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டு பின்னர் 2006-ம் ஆண்டு எங்களுக்கு காலமுறை ஊதியம் வரப்பெற்றது.

    நெல்லை:

    அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நல சங்கம் சார்பில் நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கவன ஈர்ப்பு

    இந்த போராட்டத்திற்கு பேரவையின் மாநில துணைத் தலைவர் ஜான் துரைச்சாமி தலைமை தாங்கி னார். பொதுச் செயலாளர் பாபு சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்கள் கூறியதாவது:-

    நெல்லையில் டி.டி. டி.ஏ நிர்வாகத்தின் கீழ் பணி புரியும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பல வருடங்களாக பெரும்பாலான ஆசிரியர்கள் ஊதியம் இன்றி பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2004 -ம் ஆண்டு முதல் தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டு பின்னர் 2006-ம் ஆண்டு எங்களுக்கு காலமுறை ஊதியம் வரப்பெற்றது. அந்த தொகுப்பூதிய காலத்தினை பணிக்காலமாக சேர்த்திட வேண்டும்.

    நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒன்றியம் விட்டு ஒன்றியம் கலந்தாய்வினை ரத்து செய்ய வேண்டும்.அதில் முறைகேடு உள்ளது.மேலும் பழைய பென்சன் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் சங்க நிர்வாகிகள் நாகராஜன், யோகநாதன், செல்வராஜ், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி அனுமதி மறுத்ததால் ஆசிரியர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் மேம்பாலம் பகுதியில் போராட்டம் நடத்த செல்வதாக கூறிவிட்டு சென்றனர்

    • ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பை தளர்த்தி பணி நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று மொட்டையடித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    சென்னை:

    'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 3-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது.

    தற்காலிக ஆசிரியர் நியமனத்தை நிறுத்தி அந்த பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடனடியாக நியமனம் செய்யக்கோரி இந்த போராட்டம் நடந்தது.

    ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பை தளர்த்தி பணி நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று மொட்டையடித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மேலும் தங்களை பணியில் அமர்த்த கோரி பிச்சை எடுத்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் 'பாடை' போல் படுத்த படியும் ஆசிரியர்கள் இன்று போராட்டம் நடத்தினார்கள்.

    ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    திண்டுக்கல் :

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான அரசு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் இப்பணியில் ஏராளமான ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளிமுன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் விளக்க கூட்டம் நடைபெற்றது. பழைய பென்சன் திட்டத்தை தொடரவேண்டும், 1.1.2022 முதல் வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே நிலுவைத்தொகையுடன் வழங்கவேண்டும்.

    ஈட்டிய விடுப்பு, ஒப்படைப்பு பணப்பலன்களை உடனே வழங்கவேண்டும். ஆசிரியர், மாணவர் விகிதத்தை 1:25 ஆக மாற்றி அமைத்திடவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜாக்கிளி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஞானராஜன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர்கள் காஜாமைதீன், கிருஷ்ணதாஸ், தலைைம செய்தி தொடர்பாளர் அங்குசாமி, மாநிலதுணைத்தலைவர் அய்யாகண்ணு, கவுரவத்தலைவர் சந்திரசேகரன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதியம் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.

    பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு 17-பி விதியின் கீழ் தண்டனை பெற்ற 4 ஆயிரம் ஆசிரியர்கள் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறவில்லை.
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    தமிழக முழுவதும் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    மாணவர்கள் கல்வி பாதிக்கக்கூடும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பும்படி அரசு வேண்டுகோள் வைத்தது. ஆனாலும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல் இருந்ததால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்தது.

    பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 4 ஆயிரத்திற்கும் மேலான ஆசிரியர்களுக்கு 17-பி விதியின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் நடந்த அரசாணை எரிப்பு போராட்டத்திலும் சிலர் ஈடுபட்டனர். அவர்கள் மீது 17-பி விதியின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. ஆனால் மிகவும் தீவிரமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான “பேனல்” தயாரிக்கப்படுகிறது.

    இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலை பட்டதாரி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஜூன், ஜூலை மாதத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான பட்டியல் தயாரிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு 17-பி விதியின் கீழ்  தண்டனை பெற்ற 4 ஆயிரம் ஆசிரியர்கள் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
    3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய நிலையில் இன்று வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காமல் தமிழக அரசு வஞ்சித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலர்கள் முன்பாக ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில மைய முடிவு அறிவித்துள்ளது.

    அதன்படி நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயலாளர் சௌந்தரராஜன் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சேரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 1.1.2019 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்ட பொருளாளர் மேகநாதன் நன்றி கூறினார்.
    அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் அகவிலைப்படியை உயர்த்த கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். #TeachersProtest

    சென்னை:

    அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை 1-1-2019 முதல் உடனடியாக வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை தமிழக அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் 3 சதவீத அக விலைப்படி உயர்வு கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சேப்பாக்கம், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., ஆயிரம்விளக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தின் போது அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலை வாசிக்கு ஏற்ப 6 மாதத்துக்கு ஒரு முறை அக விலைப்படியை உயர்த்தி வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படியை வழங்கி வருகிறது.

    தற்போது மத்திய அரசு அறிவித்த பிறகும் 1.1.2019 தேதி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீத அக விலைப்படியை இன்னும் தமிழக அரசு வழங்கவில்லை. இதுபற்றி கேட்டால் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் உள்ளதால் வழங்க முடியாது என்றும் காரணம் கூறுகிறது. அகவிலைப்படியை வழங்கு வதற்கும் தேர்தல் நடத்தை விதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அரசு வழங்க மறுக்கிறது.

    எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இதில் பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளோம். எனவே தமிழக அரசு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TeachersProtest

    உடனடியாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரி அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. #TeachersProtest
    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு 1.1.2019 முதல் மூன்று சதவீத அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களும், தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அலுவலர்களும் 1.1.2019 முதல் நிலுவைத்தொகையை பெற்றுவிட்டனர். பொதுவாக அகவிலைப் படியை மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு அறிவித்த வுடன் அதைத்தொடர்ந்து 15 நாட்களுக்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை அறிவிப்பது தமிழக அரசின் நடைமுறை வழக்கமாகும்.

    ஆனால் இந்த முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கு மார்ச் இறுதியிலாவது வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கிய நடைமுறைகள் ஏற்கனவே இங்குள்ளது. அதனால் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதை இவ்வரசாங்கம் காரணமாகச் சொல்லி அகவிலைப்படி நிலுவையை தராமல் இருக்க வாய்ப்பில்லை.

    ஏற்கனவே ஊதிய மாற்ற முரண்பாடுகளினாலும், ஊதியமற்ற நிலுவைத் தொகை இழப்பினாலும், மேலும் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி அதன் காரணமாக ஏற்பட்ட சம்பள இழப்பின் காரணமாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு முறையாக இவ்வரசாங்கம் கொடுக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வினை வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கானது ஜனநாயக முறைப்படி செயலாற்றும் அரசாங்கம் செய்யக்கூடிய காரியமல்ல.

    எனவே அரசு ஊழியர்கள் -ஆசிரியர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே வழங்க வேண்டிய மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு நிலுவையை 1.1.2019 முதல் உடனடியாக வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும். ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2019 வரையிலான நான்கு மாத கால அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையை தமிழக அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

    இதை உடனடியாக அறிவிக்காத நிலையில் அரசு ஊழியர் சங்கம் நாளை (10-ந்தேதி) தமிழக அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்தும், உடனடியாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TeachersProtest
    ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 2-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பேச்சு வார்த்தைக்கு அரசு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. மேலும் பணிக்கு திரும்ப காலக்கெடு நிர்ணயித்தது.

    இதையடுத்து ஆசிரியர்கள் 30-ந்தேதி பணிக்கு திரும்பினர். அதன்பின் அரசு ஊழியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

    அரசு நிர்ணயித்த காலக்கெடுக்குள் பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1500 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்தது.

    ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

    முன்தேதியிட்டு ஜனவரி 25-ந் தேதியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த 6 பேராசிரியர்களும் அடங்குவர்.

    இதற்கான உத்தரவு கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பேராசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo
    ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை சில அன்னிய சக்திகள் தூண்டி விடுகின்றனர். இந்த போராட்டத்தினை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #arjunsampath #jactogeo #teachersprotest

    சீர்காழி:

    இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் , சீர்காழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தருமை ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட செயல் படக்கூடிய திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி சட்டநாதர் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தாமல் கால தாமதித்து வருவது என்பது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

    ஜேக்டோ-ஜியோ அமைப்பு எதிர்க் கட்சிகளால் தூண்டி விடப்பட்டு வருகிறது. ஜேக்டோ ஜியோ அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்தினை சீர்குலைக்க வேண்டும், மக்களுக்கு அரசாங்கத்தின் எந்த நல்ல திட்டங்களும் சென்றடைய கூடாது என உள்நோக்கத்துடன் ஒரு சில நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். ஜேக்டோ- ஜியோ அமைப்பை தடை செய்ய வேண்டும்.

    தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடிய வகையிலும் தேர்தல் வரக்கூடிய இந்த சூழ்நிலையில், கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளக் கூடிய அவசர கால சூழ்நிலையில் அரசு எந்திரத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் இந்த போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தினை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தூண்டி விடுகிறார்.


    ஜேக்டோ- ஜியோ போராட்டத்தினை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அரசாங்கம் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் ஜேக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு இல்லை. அரசால் நிறைவேற்றவே முடியாத கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தினை தொடர்கிறார்கள். தலைமை செயலக ஊழியர்களையும், போக்குவரத்து ஊழியர்களையும் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிர்கட்சிகள், சில அன்னிய சக்திகள் தூண்டி விடுகின்றனர். இந்த போராட்டத்தினை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்டந் தோறும் நவோதயா பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களை பாதிக்காத வகையில் கேபிள் டிவி கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #arjunsampath  #jactogeo #teachersprotest

    ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 1,055 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. #JactoGeo
    கடலூர்:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் உள்ளனர்.

    இதனால் அரசு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஆசிரியர்கள் பணிக்கு வராத காரணத்தால் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அதன்படி நேற்றைய நிலவரப்படி கடலூர் மாவட்டம் முழுவதும் 1,055 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. #JactoGeo

    ×