search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

    விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    திண்டுக்கல் :

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான அரசு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் இப்பணியில் ஏராளமான ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளிமுன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் விளக்க கூட்டம் நடைபெற்றது. பழைய பென்சன் திட்டத்தை தொடரவேண்டும், 1.1.2022 முதல் வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே நிலுவைத்தொகையுடன் வழங்கவேண்டும்.

    ஈட்டிய விடுப்பு, ஒப்படைப்பு பணப்பலன்களை உடனே வழங்கவேண்டும். ஆசிரியர், மாணவர் விகிதத்தை 1:25 ஆக மாற்றி அமைத்திடவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜாக்கிளி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஞானராஜன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர்கள் காஜாமைதீன், கிருஷ்ணதாஸ், தலைைம செய்தி தொடர்பாளர் அங்குசாமி, மாநிலதுணைத்தலைவர் அய்யாகண்ணு, கவுரவத்தலைவர் சந்திரசேகரன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதியம் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×