search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் தகுதி தேர்வு"

    • ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுக வகுப்பு வருகறி 28-ந்தேதி நடக்கிறது.
    • முதலில் வரும் 100 மா வர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    சிவகங்கை

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு களான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு களுக்காக சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் அறிமுக வகுப்பு வருகிற 28-ந்தேதி காலை 11 மணியளவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் வாராந்திர மாதிரி தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

    மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள https://bit.ly/svgtetclass என்ற கூகுல் பார்மை பூர்த்தி செய்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். முதலில் வரும் 100 மாண வர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    மேலும் https://t.me/svgemployment என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclesvg@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.

    • ஆசிரியர்களாக பணிபுரிய நடத்தப்படும் தகுதி தேர்வான டெட் தேர்வை எழுத 4 லட்சத்து 1,886 பேர் பதிவு செய்து இருந்தனர்.
    • வினாத்தாள் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட்டுள்ளனர்.

    சென்னை:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்பு எடுப்பதற்கான ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

    அந்த வகையில் ஆசிரியர்களாக பணிபுரிய நடத்தப்படும் தகுதி தேர்வான டெட் தேர்வை எழுத 4 லட்சத்து 1,886 பேர் பதிவு செய்து இருந்தனர். பிப்ரவரி 3-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை டெட் 2-ம் தாள் தேர்வு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.

    கடந்த 28-ந் தேதி தேர்வு முடிவு வெளியானது. 2 லட்சத்து 54 அயிரம் பேர் தேர்வு எழுதியதில் 15,406 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 6 சதவீதமே தேர்ச்சி இருந்தது.

    தேர்ச்சி குறைந்ததற்கு வினாத்தாளில் உள்ள பிழைகள், தவறுகள் பாட வாரியாக மதிப்பெண் நிர்ணயித்ததில் குளறுபடி உள்ளிட்டவையே காரணம் என்று தேர்வு எழுதியவர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்த தவறுகளால் தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கானவர்களால் 82 மதிப்பெண்களை பெற முடியவில்லை.

    வினாத்தாள் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட்டுள்ளனர். 3,341 விண்ணப்பதாரர்களிடம் இருந்து 16,409 ஆட்சேபனைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்று உள்ளது.

    டெட் தேர்வில் நடந்த குளறுபடியில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அதற்கு தீர்வாக கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு, 14 கல்லூரிகளில் கணினி மூலம் நடைபெற உள்ளது.
    • தேர்வுகள் காலை தேர்வுக்கு 7:30 மணிக்கு, பிற்பகல் தேர்வுக்கு 12:30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வருகை புரிய வேண்டும்.

    சேலம்:

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2, இணையவழி தேர்வு தொடர்பாக மாவட்ட தேர்வு கண்காணிப்பு குழு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது,

    சேலம் மாவட்டத்தில் நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு, 14 கல்லூரிகளில் கணினி மூலம் நடைபெற உள்ளது. காலை மற்றும் மாலை வேளை என இரு வேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

    இந்த தேர்தலை 36 ஆயிரத்து 113 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வுகள் காலை தேர்வுக்கு 7:30 மணிக்கு, பிற்பகல் தேர்வுக்கு 12:30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வருகை புரிய வேண்டும். இத்தேர்வுக்காக மாவட்ட தேர்வு கண்காணிப்பு குழு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வுகளை கண்காணிக்கும் போது கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் தலைமையில் 4 தேர்வு மையங்களுக்கு ஒரு பறக்கும் படைகுழு செயல்பட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வுகள் நடைபெறும் 14 தேர்வு மையங்களிலும் காவல்துறை போதிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவும், மாதிரி தேர்வுகள் மற்றும் தேர்வு நாட்களில் தேவையான தொழில்நுட்ப உதவிகளை தேசிய தகவல் அலுவலர் வழங்கிடவும், அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவ குழுக்கள் அமைத்து தேர்வு மையங்களில் நோய் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கண்காணித்து வழிநடத்திட சுகாதாரத் துறைக்கும், தேர்வு நாள்களில் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றடையும் வகையில் போக்குவரத்து வசதிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேற்கொள்ளவும், தடை இல்லாமல் மின்சாரம் மற்றும் தேர்வுகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தகுதி தேர்வு தாள் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுவதை அனைத்து பொறுப்பு அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் வருவாய் அதிகாரி மேனகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், கோட்டாட்சியர் விஷ்ணு வர்த்தினி, மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நாளை ெதாடங்குகிறது.
    • மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 கணினி வழியில், நாளை (3-ந்தேதி) முதல் 8-ந் தேதி வரை முதற்கட்டமாகவும் (ேபட்ச்-1),இ 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 2-வது கட்டமாகவும் (ேபட்ச்-2), 2 கட்டங்களாக காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.

    திருமாஞ்சோலை பாண்டியன் சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லூரி, காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியர் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் நாளில் காலையில் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 7.30 மணிக்கும், மதியம் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 12.30 மணிக்கும் வருகை தர வேண்டும். மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.7.2022 முதல் 27.7.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது.
    • ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி அடைந்து உள்ளனர்.

    சென்னை:

    ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற்றது. தாள் 1-க்கான இந்த தேர்வுகள் கணினி வழியில் தினமும் இரு வேளைகளில் நடத்தப்பட்டது.

    இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 தேர்வர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 2-ந்தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 21 ஆயிரத்து 543 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

    அதாவது ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி அடைந்து உள்ளனர்.

    அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.7.2022 முதல் 27.7.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது அளிக்கும் கோரிக்கையின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    தற்போது விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழை நேற்று முதல் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.

    3 மாதங்கள் வரை சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

    மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான ஆசிரியர் தேர்வை 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதி இருந்த நிலையில் அதில் 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிகளுக்கு மறுநியமன தேர்வான போட்டித்தேர்வை வருகிற டிசம்பர் மாதம் நடத்த உள்ளது.
    • 1874 பட்டதாரி ஆசிரியர்கள், 3987 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது.

    சென்னை:

    டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    கணினி அடிப்படையில் இந்த தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    கணினி அடிப்படையிலான தேர்வுக்கான பயிற்சி தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு தேதிக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மேலும் தேர்வு அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள் தொடர்பான விவரங்கள் ஆகஸ்டு 2-வது வாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வழங்கப்படும்.

    மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிகளுக்கு மறுநியமன தேர்வான போட்டித்தேர்வை வருகிற டிசம்பர் மாதம் நடத்த உள்ளது.

    1874 பட்டதாரி ஆசிரியர்கள், 3987 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது.

    இதற்கு 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசுத் தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
    • அதற்கு நீதிபதி, நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை என்றார்.

    மதுரை:

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.

    இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23-ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அரசுத் தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை என்றார்.

    எனவே தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பை தளர்த்தி பணி நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று மொட்டையடித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    சென்னை:

    'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 3-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது.

    தற்காலிக ஆசிரியர் நியமனத்தை நிறுத்தி அந்த பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடனடியாக நியமனம் செய்யக்கோரி இந்த போராட்டம் நடந்தது.

    ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பை தளர்த்தி பணி நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று மொட்டையடித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மேலும் தங்களை பணியில் அமர்த்த கோரி பிச்சை எடுத்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் 'பாடை' போல் படுத்த படியும் ஆசிரியர்கள் இன்று போராட்டம் நடத்தினார்கள்.

    ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

    ×