ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுக வகுப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுக வகுப்பு வருகறி 28-ந்தேதி நடக்கிறது. முதலில் வரும் 100 மா வர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுக வகுப்பு
Published on

சிவகங்கை

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு களான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு களுக்காக சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் அறிமுக வகுப்பு வருகிற 28-ந்தேதி காலை 11 மணியளவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் வாராந்திர மாதிரி தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.

மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள https://bit.ly/svgtetclass என்ற கூகுல் பார்மை பூர்த்தி செய்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். முதலில் வரும் 100 மாண வர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் https://t.me/svgemployment என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclesvg@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com