search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக"

    ஒரு சமூகத்தினர் மட்டும் முக்கிய பொறுப்பில் இருப்பது ஏன்? என்ற எனது கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பில் பதில் இல்லை என்று சித்தராமையா விமர்சனம் செய்துள்ளார்.
    பெங்களூரு:

    எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே முக்கிய பதவியில் இருப்பது ஏன் என்று நான் கேள்வி கேட்டேன். எனது இந்த கேள்விக்கு அந்த அமைப்பினரோ அல்லது பா.ஜனதாவினரோ பதில் கூறவில்லை.

    எனது கேள்விக்கு பதிலளிக்க முடியாத பா.ஜனதாவினர் தனிப்பட்ட முறையில் என்னை தாக்கி பேசுகிறார்கள். எனது சிறிய கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாத ஆர்.எஸ்.எஸ். ஒரு பலவீனமான அமைப்பா?. அந்த அமைப்பு குறித்து தெரிந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு வரும்படி என்னை அழைக்கிறார்கள்.

    அங்கு சென்று 40 சதவீத கமிஷன் பெறுவது எப்படி, விலை கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்குவது என்பது அறிந்து கொள்ள வேண்டுமா?. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு சென்றால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலே சாட்சி. அவருக்கு கலாசாரம் உள்ளிட்ட மாண்புகள் என்ன என்றே தெரியவில்லை. அந்த அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் முக்கிய பதவியில் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்குமாறு நான் மீண்டும் கேட்கிறேன்.

    இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
    எடியூரப்பாவின் போராட்ட குணத்தை சிறுவயது முதலே பார்த்து வருகிறேன் என்று தந்தை குறித்து விஜயேந்திரா பெருமிதம் அடைந்தார்.
    ஹாசன்:

    ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் சிவக்குமார சுவாமிஜியின் 115-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    கர்நாடக மாநிலம் பல முதல்-மந்திரிகளை கண்டுள்ளது. அதில் எடியூரப்பா ஒரு தனித்துவமானவர். கர்நாடகத்தில் பா.ஜனதாவின் ஆட்சி சிறப்பாக உள்ளது. விவசாயிகள், தலித் மக்களின் துயரத்தை துடைத்தவர் எடியூரப்பா.

    அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் போராட்ட குணத்தை சிறுவயது முதல் இருந்தே பார்த்து வருகிறேன். அவர், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மடாதிபதிகள் மற்றும் பொதுமக்களால் 4 முறை அவர் முதல்-மந்திரி பொறுப்பு வகித்தார்.

    இதுவரை எந்த முதல்-மந்திரியும் செய்யாத நலத்திட்டங்களை எடியூரப்பா செய்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றை யாரும் மறக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆகலாம் என்று கனவு காண்கிறார். அந்த கனவு நனவாகாது என்று கர்நாடக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
    துமகூரு:

    கர்நாடக மாநில பா.ஜனதா விவசாய அணி மாநாடு துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- மத்திய அரசு கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. பசல் பீமா பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய-மாநிலத்தில் பா.ஜனதா அரசுகள் உள்ளன. இது இரட்டை என்ஜின் அரசு ஆகும். இந்த அரசுகள் சிறப்பான முறையில் செயலாற்றி வருகின்றன.

    விவசாயிகளின் நலனுக்காக எடியூரப்பா போராடினார். இதனால் அவர் முதல்-மந்திரி ஆனார். அவர் முதல் முறையாக விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விவசாய கடனை தள்ளுபடி செய்தார். விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயித்தார். தற்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு நாட்டிலேயே முதல் முறையாக விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

    பால்வள கூட்டுறவு வங்கியும் நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தொடங்கப்படுகிறது. விவசாய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை பிரதமர் மோடி அதிகரித்துள்ளார். மீனவர்களின் நலனுக்காக தனி இலாகாவை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

    பசுக்களை கொன்றவர்களை சித்தராமையா அரசு பாதுகாத்தது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை கவர திப்பு ஜெயந்தி விழாவை நடத்தினர். விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த சித்தராமையா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. நாட்டின் பிரதமராக இருந்த நேரு முதல் மன்மோகன்சிங் வரை காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. நெருக்கடி நிலை வந்தபோது நாட்டை பாதுகாத்தது ஆர்.எஸ்.எஸ். ஆகும். இந்த அமைப்பை பற்றி விமர்சிக்க சித்தராமையாவுக்கு தகுதி இல்லை. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

    சித்தராமையா ஆட்சியில் அர்க்காவதி லே-அவுட் அமைத்ததில் முறைகேடு நடந்தது. மாணவர் விடுதிகளுக்கு மெத்தை, தலையணை கொள்முதல் செய்ததிலும் முறைகேடு நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அரசியல் செய்வது இல்லை. அது நாட்டின் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து சிந்திக்கிறது. வருகிற சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆகலாம் என்று கனவு காண்கிறார். அந்த கனவு நனவாகாது.

    இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.
    வட மாநிலங்களில் பா.ஜனதாவை வீழ்த்த இந்தியை அதிக அளவில் எல்லா வகைகளிலும் பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது என்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 3 நாட்கள் நடந்த சிந்தனை அமர்வு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அரசியல் விவகாரக்குழு உள்பட 3 குழுக்கள் அமைக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுபடி இந்த குழுக்களை சோனியா நியமித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த பல்வேறு வியூகங்கள் அமைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்துத்துவா, இந்தி மொழியை வைத்து பா.ஜனதா மக்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது. காங்கிரசும் தற்போது அதே பாணியில் பயணிக்க முடிவு செய்துள்ளது. மென்மையான இந்துத்துவாவை ஏற்கனவே கடைபிடிக்க தொடங்கி விட்டது.

    தற்போது இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. வட மாநிலங்களில் பா.ஜனதாவை வீழ்த்த இந்தியை அதிக அளவில் எல்லா வகைகளிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர் சந்திப்பு என அனைத்து விதமான செயல்களிலும் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கி உள்ளது. ராஜஸ்தான் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி இந்த முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட உள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் இந்தி துறை தலைவர் சுனில் சாஸ்திரி இது தொடர்பாக கூறியதாவது:-

    இந்தி பேசும் மாநிலங்களில் அந்த மொழிக்கும் முக்கியத்தும் அளிக்கப்படும். காங்கிரஸ் செய்தி தொடர்பாக நிருபர்களை சந்திக்கும்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேட்டி கொடுப்பார்கள்.

    உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள கிராம மக்களுக்கு ஆங்கிலம் புரியாது. இதனால் அங்கு இந்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தென் மாநிலங்களில் கால் பதிக்க முயற்சிகள் மேற்கொண்டாலும் பா.ஜனதாவின் முக்கிய வாக்கு வங்கி இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பல்வேறு இடங்களில் எல்.முருகனின் பிறந்த நாளையொட்டி கட்சியினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார்கள்.
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி எல்.முருகனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும்.

    இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பா.ஜனதா கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    பல்வேறு இடங்களில் அவரது பிறந்த நாளையொட்டி கட்சியினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார்கள்.

    பிரதமர் மோடி, மத்திய மந்திரி எல்.முருகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தங்களின் அர்ப்பணிப்பு இளைஞர்களை ஊக்குவிக்கிறது. நீங்கள் நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.
    வள்ளுவர் கோட்டம் அருகே 31-ந் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் போராட்டத்துக்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் 2 அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் தனக்கு கிடைத்து இருப்பதாகவும் கூறி உள்ளார். இது தொடர்பாக 2 ஊழல்கள் பற்றிய விபரங்களை ஆதாரங்களுடன் அடுத்த வாரம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

    அண்ணாமலையின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த துறை? எந்த அமைச்சர்கள்? என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.

    இதற்கிடையில் வருகிற 31-ந்தேதி சென்னையில் கோட்டை நோக்கி நடை பயணம் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளனர்.

    பட்ஜெட்டில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை தரவில்லை என்று குறிப்பிட்டனர். ஆனால் தவறான தகவலை தெரிவித்ததாக கூறி இந்த கோட்டை நோக்கிய போராட்டத்தை பா.ஜனதா நடத்துகிறது.

    வள்ளுவர் கோட்டம் அருகே 31-ந் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்துக்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு மே 30 முதல் ஜூன் 14 வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
    சிம்லா:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வரும் 30-ம் தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, இமாசல பிரதேசத்திற்குச் செல்கிறார். அவர் சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் இருந்து அனைத்து முதல் மந்திரிகளுடனும் காணொலி காட்சி வழியே உரையாட உள்ளார். இதற்காக இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் இன்று ரிட்ஜ் மைதானத்திற்கு நேரில் சென்று அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். 

    இந்நிலையில், இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    பிரதமரின் 8 ஆண்டு கால ஆட்சி மிக நல்ல முறையில் நடந்துள்ளது. மத்திய அரசின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவை முன்னிட்டு மாநிலத்திற்கு பிரதமர் வருவது என்பது பெருமைக்குரிய விஷயம். இதற்காக இமாசல பிரதேச மக்கள் உற்சாகத்துடன் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே உரையாட இருக்கிறார். பா.ஜ.க.வின் அனைத்து மாவட்ட தலைமையகத்துடனும் அவர் தொடர்பு கொண்டு பேசுவார் என தெரிவித்துள்ளார்.

    பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்தோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இன்று காலை சென்றார். அங்கு, ராஜ்கோட் மாவட்டம் அட்கோட்டில் 200 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை அவர் பார்வையிட்டார்.

    பின்னர் மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மருத்துவமனை சவுராஸ்டிராவில் மருத்துவ வசதியை சிறப்பாக்க உதவும். குஜராத் மாநிலத்தில் தற்போது 30 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

    2001-ம் ஆண்டு இங்கு 9 மருத்துவக் கல்லூரிகளே இருந்தது. 1,100 மருத்துவ படிப்பு சீட்டுகளே இருந்தன. இன்று தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் என 30 ஆக உயர்ந்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது மருத்துவ படிப்புக்கான சீட்டுகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.

    இன்று நான் குஜராத் மண்ணில் கால் வைத்துள்ளேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு என்னை டெல்லிக்கு வழியனுப்பி வைத்தீர்கள். ஆனால் உங்கள் அன்பு அதிகரித்து வருகிறது.

    8 ஆண்டு கால எனது ஆட்சியில் ஒரு தவறு கூட செய்யவில்லை. மக்களை வெட்கி தலைகுனிய வைக்கும் எந்த செயலையும் நான் செய்யவில்லை. நாட்டை முன்னேற்றும் எந்த முயற்சியையும் நான் விட்டு விடவில்லை.

    கடந்த 8 ஆண்டுகளில் மகாத்மா காந்தி, சர்தார் படேலின் கனவான இந்தியாவை உருவாக்க முயற்சித்தோம். நல்லாட்சிக்கே முன்னுரிமை கொடுக்கிறோம்.

    பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்தோம்.

    கொரோனா பாதிப்பு மற்றும் போருக்கு மத்தியில் நாங்கள் நாட்டுக்கு சேவை செய்துள்ளோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையும் படியுங்கள்.. பேத்தியை மானபங்கம் செய்ததாக மருமகள் புகார்- துப்பாக்கியால் சுட்டு முன்னாள் மந்திரி தற்கொலை
    நானோ யூரியாவைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர் விளைச்சல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அல்ட்ராமாடர்ன் நானோ உர ஆலை நிறுவப்பட்டுள்ளது.
    ராஜ்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதுஸ்ரீ கேடிபி பல்நோக்கு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

    ராஜ்கோட்டில் உள்ள அட்கோட்டில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

    ஸ்ரீ படேல் சேவா சமாஜால் நிர்வகிக்கப்படும் மாதுஸ்ரீ கேடிபி  பல்நோக்கு மருத்துவமனை, உயர்தர மருத்துவ உபகரணங்களை கிடைக்கச் செய்து, பிராந்திய மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை வழங்கி வருகிறது.

    மேலும், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் 'சஹகர் சே சம்ரித்தி' குறித்த பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்களின் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அங்கு அவர் இஃப்கோ, கலோலில் கட்டப்பட்ட சுமார் ₹ 175 கோடி மதிப்புள்ள நானோ யூரியா (திரவ) ஆலையையும் திறந்து வைக்கிறார்.

    நானோ யூரியாவைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர் விளைச்சல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அல்ட்ரா மாடர்ன் நானோ உர ஆலை நிறுவப்பட்டுள்ளது. ஆலை ஒரு நாளைக்கு 500 மில்லி 1.5 லட்சம் பாட்டில்களை உற்பத்தி செய்யும்.

    இதையும் படியுங்கள்.. கணித பாடத்தில் மாணவிகளை விட மாணவர்களே பெஸ்ட்- மத்திய அரசு ஆய்வில் தகவல்
    நாட்டிற்கு குடும்ப அரசியலால் அல்ல, மதவாத அரசியலால் தான் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பதிலளித்துள்ளார்.
    பெங்களூரு:

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சுலபமானது அல்ல பிரதமர் மோடி, குடும்ப அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது என்று கூறியுள்ளார். இது அவரது புதிய உபதேசம். நாட்டின் தற்போதைய நிலை குறித்து அவர் பேசி இருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் பிரசாரத்தில் பேசுவது போல் பேசியிருக்கிறார். காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்ட பிறகு மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு மாநில கட்சிகளே சவாலாக திகழ்கின்றன.

    இந்த கட்சிகளை ஒழித்துக்கட்ட பா.ஜனதா என்ன செய்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயப்பிரகாஷ் நாராயண் பல்வேறு கட்சிகளை ஒன்று திரட்டி ஜனதா பரிவார் பெயரில் போராடினார். அந்த பரிவாரில் பா.ஜனதாவும் ஒரு கட்சியாக இருந்தது. ஜனதா பரிவாரில் ஜனதா தளம் (எஸ்), ஜே.டி.யு., ஆர்.ஜே.டி., பி.ஜே.டி., சமாஜ்வாதி கட்சிகளும் ஒரு அங்கமாக இருந்தன. இந்த கட்சிகளின் வேர் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதனால் இந்த கட்சிகளை அழிப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.

    குடும்ப அரசியலுக்கு எதிராக பேசும் மோடி, அவரது கட்சியில் இருக்கும் குடும்ப வாரிசுகள், ஊழல் குறித்து ஏன் பேசுவது இல்லை. நாட்டிற்கு ஆபத்து இருப்பது குடும்ப அரசியலால் அல்ல, பா.ஜனதாவின் மதவாத அரசியலால் தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உணர்வு பூர்வமாக மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது என்பது தான் ஜனநாயகத்திறகு உண்மையான எதிரி.

    கர்நாடகத்தில் 2 முறை பா.ஜனதா அரசு எப்படி வந்தது?. நேர்மையான வழியில் பா.ஜனதா ஆட்சியை பிடித்ததா?. எம்.எல்.ஏ.க்களை சந்தையில் மாடுகளை பேரம் பேசி வாங்குவது போல் வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தது. இந்த ஊழல் அரசுக்கு பிரதமர் மோடி அனுமதி அளித்தது பொய்யா?. ஆபரேஷன் தாமரையை தேசியமயம் ஆக்கிய இந்த மோசமான அரசியலை கண்டு மவுனம் காத்தது மோடி இல்லையா?.

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவியை விற்பனைக்கு வைத்தது யார்?. அந்த பதவிக்கு ரூ.2,500 கோடி கேட்டனர் என்று கூறியது பா.ஜனதா எம்.எல்.ஏ.. அந்த எம்.எல்.ஏ. மீது பா.ஜனதா நடவடிக்கை எடுத்ததா?. குடும்ப அரசியலை முன்வைத்து மாநில கட்சிகளை அழிக்க நினைக்கும் பா.ஜனதாவின் முயற்சி வெற்றி பெறாது. இந்தியா என்றால் பா.ஜனதா மட்டுமல்ல. 140 கோடி பேரை உள்ளடக்கியது தான் இந்தியா. இதை மோடி புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
    தமிழகத்தில் தனக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை பார்த்து கட்சி நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
    பிரதமர் மோடி நேற்று சென்னை வந்து ரூ.31,500 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் சென்னை வருகை பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகை குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

    இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:-

    பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பேசியது கட்சி கூட்டத்தில் பேசியது போல் இருந்தது. நேரு உள்விளையாட்டரங்க நிகழ்ச்சியில் தமிழை உயர்த்திப் பிடித்திருக்கிறார் பிதரமர் மோடி.

    தமிழகத்தில் தனக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை பார்த்து கட்சி நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருகிற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி என்ற இலக்கை நோக்கி நகரும் பா.ஜனதா அதற்கு கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிறைவேற்றப்பட்ட 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிதாக 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.

    நேரு விளையாட்டு அரங்கில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு முடிந்த பிறகு பிரதமர் மோடி காரில் சென்னை விமான நிலையம் சென்றார். விமான நிலையத்தில் மோடியை சந்திக்க 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    அவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கி வழி அனுப்பினார்.

    அதன்பிறகு அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் அறையில் அ.தி.மு.க. தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகிய 5 பேரும் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா இடம்பெற்று இருப்பதால் அரசியல் ரீதியாகவே இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் கூட்டணியின் பலவீனம் என்பதை இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி சுட்டிக்காட்டி இருக்கிறார்.

    2024-ம் ஆண்டு வரப்போகும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இப்போதே பணியாற்ற வேண்டும். இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பது நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி ‘உங்களுக்குள் இருக்கும் மனக்குறைகளை மனம் விட்டு பேசி தீருங்கள். இருவரும் இணைந்து செயல்படுங்கள். அதுதான் அ.தி.மு.க. எதிர்காலத்துக்கு நல்லது’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

    தலைமை மீது நம்பிக்கை வராவிட்டால் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள். மக்களும் நம்பிக்கை இழந்து விடுவார்கள். அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள். கட்சியை பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்த ஆலோசனையின் போது சசிகலா பிரச்சினையும் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அந்த 10 நிமிடமும் அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்வதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. பிறகு பிரதமர் மோடியிடம் அ.தி.மு.க. தலைவர்கள் விடைபெற்று சென்றார்கள்.

    ஏற்கனவே அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இடையே பனிப்போர் நடக்கிறது. கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷமும் வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் பிரதமர் மோடி சமரச முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக விழாவுக்கு வந்த போது வரவேற்க சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... எப்படி இருக்கீங்க என்று உரிமையுடன் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திலும் உரிமையுடன் அ.தி.மு.க. தலைவர்களுடன் நட்பு பாராட்டியதை அ.தி.மு.க. தலைவர்கள் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் குறிப்பிட்டனர்.

    வருகிற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி என்ற இலக்கை நோக்கி நகரும் பா.ஜனதா அதற்கு கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான அடித்தளமே நேற்றைய சந்திப்பு என்று கூறப்படுகிறது.

    ×