search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வு"

    • அச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.
    • மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல இலந்தை குளம், மூவிருந்தாளி, அச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.

    இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொது மக்களுக்கு நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ராஜா எம்.எல்.ஏ. அரசின் மூலம் வழங்கப் படும் உதவிகள் அனைத்தும் விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய படும் என தெரிவித்தார். அதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள் வெற்றி விஜயன், பெரியதுரை, மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், அச்சம்பட்டி ஊராட்சி தலைவர் அல்லி துரை சண்முகதாய், மூவிருந்தாளி ஊராட்சி தலைவர் வெள்ள பாண்டியன், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் வீமராஜ், மாவட்ட பொறி யாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன், மூவிருந்தாளி கிளை செயலாளர் ஜோசப், மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • கமுதி அருகே மருதங்கநல்லூரில் நடந்த வாக்காளர் திருத்த சிறப்பு முகாமை தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் ஆய்வு செய்தார்.
    • வாக்காளர் சரிபார்ப்பு பணியை விரைந்து முடித்திட ஆலோசனை வழங்கினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மருதங்க நல்லூர் கிராமத்தில், வாக் காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் குறித்த சிறப்பு முகாம் நேற்று நடை பெற்றது. இந்த முகாமினை முதுகுளத்தூர் தொகுதி தி.மு.க. பொறுப்பாளரும், கட்சியின் உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினருமான குழந்தைவேலு நேரில் பார் வையிட்டார்.

    மேலும் வாக்காளர் சரி பார்ப்பு பணியை விரைந்து முடித்திட ஆலோசனை வழங்கினார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு தேவன், நகரச் செயலாளர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் காவடி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோலூர்மட்டம் முதல் அத்தியூர்மட்டம் வரையிலான ரோட்டில் பிரதானசாலை துண்டிப்பு
    • 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் பெய்த கனமழை காரணமாக சோலூர்மட்டம் முதல் அத்தியூர்மட்டம் வரையிலான ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பிரதானசாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கரிக்கையூர், வக்கணமரம், மெட்டுக்கள், குடகூர், சாமகொடர் உள்பட 10 கிராமங்களுக்கு செல்லும் பஸ் சேவை தடைபட்டு உள்ளது. இதனால் அந்த கிராமங்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்ககாக வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கண்ட பகுதிகளில் சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை கோத்தகிரி ஒன்றிய பெருந்தலைவர் இ.எம்.ராம்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நீலகிரி மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்பஅணி துணை அமைப்பாளர் விக்னேஷ், கீழ்கோத்திரி இளைஞர் அணி சிவனேசன் உடன் இருந்தனர்.

    • தாயார்தோப்பு கிராமம் மற்றும் அரசு புறம் போக்கு நிலங்களில் பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க குறைந்தது 2 முதல் 3 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

    தென்காசி:

    வீரகேரளம்புதூரில் தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந் நிலையில் வீரகேரளம்புதூர் அருகே உள்ள தாயார்தோப்பு கிராமம் மற்றும் மாணவர் விடுதி அருகில் உள்ள அரசு புறம் போக்கு நிலங்களில் பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க குறைந்தது 2 முதல் 3 ஏக்கர் நிலம் தேவைப்படும். தாயார்தோப்பு மற்றும் அரசு மாணவர் விடுதி அருகில் உள்ள இடங்கள் குறைவான அளவில் உள்ளது. எனவே இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பேசி இடங்களை பெற்று தாலுகா தலைமை மருத்துவமனை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரி பேச்சிமுத்து, வக்கீல் சுப்பையா, துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் இசக்கிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி, கிராம உதவியாளர் ஜேம்ஸ்ராஜ், வெற்றிவேலன், பேச்சிமுத்து உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

    • புதுக்கோட்டையில் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்
    • விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி ஊராட்சி, சிதம்பரவிடுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ்  கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது பணிகளை விரைவாகவும், நேர்த்தியாகவும் முடிக்க அவர் உத்தரவிட்டார்.  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், இந்திராகாந்தி, ஊராட்சிமன்றத் தலைவர் மெய்யநாதன் மற்றும் அரசுஅலுவலர்கள்  இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.

    குழந்தைகளுக்கு சத்துணவு நல்ல முறையில் வழங்குகிறார்களா என்று சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.


    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளது. வால்பாறை அருகே 11 வது வார்டு உட்பட்ட பச்சமலை எஸ்டேட் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2ஆசிரியர்களும், 23 பள்ளி குழந்தைகளும் படித்து வருகின்றனர்.

    இதில் வட மாநில மாணவர்களும் படித்து வருகின்றனர். 11-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் அப்பகுதிக்கு சென்று பழமையான பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி குழந்தைகளின் சத்துணவு மையத்தை ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு சத்துணவு நல்ல முறையில் வழங்குகிறார்களா என்று சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

    • காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காதி பொருட்களின் விற்பனை, வடிக்கையாளர்களின் வருகை, காதி பொருட்களின் தரம், இருப்பு உள்ளிட்ட வைகளை குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் நாமக்கல் கதர் உப கிளையில் ஆய்வு மேற்கொண்டு கதர் ஆடைகளின் தரம், மதிப்பு உள்ளிட்டவைகளை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலைய காதி கிராப்ட் விற்பனை நிலையம் பூமாலை வணிக வளாகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள கதர் கிராம தொழில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சுரேஷ்குமார் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

    காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காதி பொருட்களின் விற்பனை, வடிக்கையாளர்களின் வருகை, காதி பொருட்களின் தரம், இருப்பு உள்ளிட்ட வைகளை குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து மோகனூர் சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மோகனூர் எழில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாய உற்பத்தி பொருட்கள் நேரடி கொள்முதல் மையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டு தயாரிப்புகள் குறித்து கேட்டறிந்து நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சோப்பு உற்பத்தி அலகு கட்டடத்தை பார்வையிட்டு பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு பிற துறைகளுக்கு பயன்பாட்டிற்கு வழங்கலாம் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் நாமக்கல் கதர் உப கிளையில் ஆய்வு மேற்கொண்டு கதர் ஆடைகளின் தரம், மதிப்பு உள்ளிட்டவைகளை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழித்துறை அரசு ஆஸ்பத்திரியையும் பார்வையிட்டார்
    • பிரசவ பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்கேன் மையங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் பொறுப்பு அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவி னர் நாகர்கோவில், மார்த் தாண்டம் ஸ்கேன் மையங் கள், குழித்துறை அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங் களில் ஆய்வு செய்தனர். இதில் ஸ்கேன் மையங்களுக்கான லைசென்சு நகல் ஸ்கேன் மைய நுழைவிடத் தில் பார்வையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் முதல் தளத்தில் ஸ்கேன் அறையின் அருகேயே நோயாளிகளுக்கான கழிவறை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டது. 'படிவம் எப்' முறையாக பராமரிக்கப்பட வேண்டும் ஸ்கேன் மையத் தில் இடவசதி குறைவாக இருப்பதால் தக்க நடவ டிக்கை எடுத்து அதனை சரி செய்ய வேண்டும். மேலும் அனைத்து ஆவணங்களும் சரியாக பராமரிக்க வேண் டும் என்று அதன் பணியா ளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது.

    குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொது கழிவுநீர் வெளியேற்ற பொதுப்பணித் துறை மற்றும் குழித்துறை நகராட்சிக்கு தக்க அறிவுரை கூறுவதாக கலெக்டர் உறுதி அளித்தார். மேலும் அரசு மருத்துவமனையில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றின் எண்ணிக் கையை உயர்த்த வலியுறுத்தி னார்.

    பின்னர் அங்கு அனைத்து மருத்துவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆஸ்பத்திரியின் செயல்பாடு களை முன்னேற்றவும், அனைத்து ஸ்கேன்களையும் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளவும் கலெக்டர் அறிவுறுத்தினார். பிரசவ பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

    • ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்டப்பட்ட பெரிய வள்ளிக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.09 லட்சம் மதிப்பில் 116-வது காலனியில் பேவர்பிளாக் அமைக்கும் பணிகளையும், ரூ.6.18 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவிகளுக்கான கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி களையும், பெரிய வள்ளி குளம் கிராமத்தில் ரூ.8.47 லட்சம் மதிப்பில் ராமசாமி புரம் ஊரணியில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியி னையும், ரூ.6.09 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட் டார்.

    பாலவநத்தம் கிரா மத்தில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பில் சமுதாய கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பணியினையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடுகட்டும் பணியினையும், மலைப் பட்டி கிராமத்தில், 2020-23 பாரளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் ஊரணிக்கு வடக்கு திசையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி யினையும், ரூ.12.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.
    • பொதுப் பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண் காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர் மழையின் காரணமாக தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப் படுத்தும் பணிகளை மேற் கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டி டங்களை பார்வையிட்டது டன், மருத்துவ பயன் பாட்டிற்கு உள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடு போன்றவற்றை பார்வை யிட்டத்துடன், பொதுப்பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண் காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள் மலர்வண்ணன், சிவகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
    • புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா விஸ்வநாதபேரி கிராமம் பாகம் 1-ஐ சேர்ந்த வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இக்கண்மாய் மூலம் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வெளியே செல்லக்கூடிய கலிங்கல் மடை அருகே 5 அடி ஆழத்தில் மண் திருடப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர், வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், ராஜபாளையம் மேல்வைப்பாறு நீர் நிலை கோட்டம் உதவி பொறியாளர், காவல் துறையினர் ஆகியோருக்கு, வழிவழி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பாக சங்கத் தலைவர் க.சிவசுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து புளியங்குடி டி.எஸ்.பி. வெங்க டேசன், பொதுப்பணித்துறை சார்பில் இளநிலை பொறியாளர் கண்ணன், வருவாய் துறை சார்பில் சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அது சம்பந்தமான அறிக்கையை தங்களுடைய மேலதிகாரி களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • புதுக்கோட்டையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்
    • எண்ணைய்‌ ஆலை, பண்டகசாலை, அச்சகம்‌ உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றது

    புதுக்கோட்டை, 

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மரு.ந.சுப்பையன் புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூட்டு றவு சங்கங்களில் ஆய்வு செய்தார்.திருமயம் வேளாண்மைஉற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருமயம் கூட்டுறவு வேளாண் மற்றும்ஊரக வளர்ச்சி வங்கி, புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திருமயம்கிளை ஆகிய இடங்களிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும்அச்சங்கத்தின் பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் செயல்படும் கடலைஎண்ணைய் ஆலை, புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைபண்டகசாலையின் சுய சேவை பிரிவு மற்றும் கிட்டங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவுஅச்சகம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு சங்கங்களின் செயல்பாடு கள்குறித்து அறிவுரைகள் வழங்கினார்.அதனை தொடர்ந்து வங்கிவாடிக்கையாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைமையிடத்தில் டாப்செட்கோ கடன், கைம்பெண்கள் கடன், மகளிர்தொழில்முனைவோர் கடன், வீடடு வசதி கடன், சுய உதவி குழுக் கடன் மற்றும் சிறுவணிககடனாக 61 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் அளவிற்கு கடனுதவிவழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டலஇணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், புதுக்கோட்டை மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் செயலாட்சியருமான தனலெட்சுமி,புதுக்கோட்டை சரகத் துணைப்பதிவாளர் அப்துல் சலீம், அறந்தாங்கிசரகத் துணைப்பதிவாளர் ஆறுமுகப்பெருமாள், துணைப்பதிவாளரும்முதன்மை வருவாய் அலுவலருமான மண்வண்ணன் மற்றும் மொத்த விற்பனைபண்டகசாலையின் கூட்டு றவு சார்பதிவாளரும் செயலாட்சியருமான வினிதாஆகியோர் கலந்துகொண்டனர்.

    ×