search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்கோத்தகிரி"

    • சோலூர்மட்டம் முதல் அத்தியூர்மட்டம் வரையிலான ரோட்டில் பிரதானசாலை துண்டிப்பு
    • 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் பெய்த கனமழை காரணமாக சோலூர்மட்டம் முதல் அத்தியூர்மட்டம் வரையிலான ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பிரதானசாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கரிக்கையூர், வக்கணமரம், மெட்டுக்கள், குடகூர், சாமகொடர் உள்பட 10 கிராமங்களுக்கு செல்லும் பஸ் சேவை தடைபட்டு உள்ளது. இதனால் அந்த கிராமங்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்ககாக வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கண்ட பகுதிகளில் சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை கோத்தகிரி ஒன்றிய பெருந்தலைவர் இ.எம்.ராம்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நீலகிரி மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்பஅணி துணை அமைப்பாளர் விக்னேஷ், கீழ்கோத்திரி இளைஞர் அணி சிவனேசன் உடன் இருந்தனர்.

    • மாடுகளை தினமும் அருகே உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
    • கன்றுக்குட்டியும், வளர்ப்பு நாயும் உயிரிழந்து கிடந்தது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடை கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஹரீஷ். இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    இதுதவிர தனது வீட்டில் மாடுகளும் வளர்த்து வருகிறார். மாடுகளை தினமும் அருகே உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

    நேற்றும் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, மாலையில், மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    பின்னர் கொட்டகையில் மாடுகளை கட்டி விட்டு வீட்டிற்குள் சென்றார்.இந்த நிலையில் சிறிது நேரத்தில் கொட்டகையில் இருந்து கன்றுக்குட்டி அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியான அவர் கொட்டகைக்கு வந்து பார்த்தார்.

    அப்போது அங்கு கன்றுக்குட்டி யும், வளர்ப்பு நாயும் உயிரிழந்து கிடந்தது. இதை பார்த்த அவர் சோகமானார். உடனடியாக சம்பவம் குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போ து வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டது, மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டியும், நாயும் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர்.பின்னர் உயிரிழந்த கன்றுக் குட்டி மற்றும் வளர்ப்பு நாய் உடல் மீட்கப்பட்டு அதே பகுதி யில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    இருவாச்சி பறவைகள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வந்தாலும், இதன் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.

    அரவேணு:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை சூழலில் அதிக அளவு பறவைகள் வாழ்ந்து வருகின்றன.

    மனிதா்கள் நடமாட்டம் இல்லாத , பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மட்டுமே வாழக்கூடிய இருவாச்சி பறவைகள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வந்தாலும், இதன் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.

    இந்நிலையில் கீழ் கோத்தகிரி, கரிக்கையூா் வனப் பகுதியில் அமைந்துள்ள இயற்கை காடுகளில் தற்போது இருவாச்சி பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. மனிதா்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும் பசுமை நிறைந்த கீழ் கோத்தகிரி வனப் பகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவாச்சி பறவைகள் கூடுகள் அமைத்துள்ளதாக இங்குள்ளவா்கள் தெரிவித்துள்ளனா்.

    இந்தப் பறவைகளின் வருகை இயற்கை ஆா்வ லா்களிடை யே மகிழ்ச்சியை ஏற்படு த்தியுள்ளது. பாா்ப்பதற்கு ஹெலிகாப்டா் போன்ற காட்சி அளிக்கும் இருவாச்சி பறவைகள் தற்போது கீழ்கோத்தகிரி வனப்பகுதியில் தென் படுவதால் இப்பகு திக்கு வரும் சுற்று லாப் பயணிகள் புகைப் படம் எடுக்க அதிக ஆா்வம் காட்டி வருகின் றனா்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சி பறவைகள் இருக்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன.

    இருவாச்சிப் பறவைகள் உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிா்ப்புத்தன்மை மிக்கவை. இப்பறவைகளின் எச்சங்களால்தான் காட்டில் மரங்கள் பெருகுகின்றன. இப்பறவைகள் இருக்கிற காடுகளை மழைக்காடுகள் என அழைக்கிறாா்கள். மழைக் காடுகள் இல்லையென்றால் இருவாச்சி பறவைகளும் இல்லை.

    மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதால், இருவாச்சிப் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மிகவும் உயரமான மரங்களில் வசிக்கும் இருவாச்சி பறவைகள், மரங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. இருவாச்சிப் பறவை இனம் அழிந்தால் மேற்குத் தொடா்ச்சி மலையில் இருக்கும் பல வகை அரிய மரங்கள் அழிந்து விடும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×