search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி ஒன்றிய  வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    பெரிய வள்ளி கிராமத்தில் ராமசாமிபுரம் ஊரணியில் தடுப்புச்சுவர் அமைக்கப் பட்டுள்ளதை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார்.

    ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

    • ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்டப்பட்ட பெரிய வள்ளிக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.09 லட்சம் மதிப்பில் 116-வது காலனியில் பேவர்பிளாக் அமைக்கும் பணிகளையும், ரூ.6.18 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவிகளுக்கான கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி களையும், பெரிய வள்ளி குளம் கிராமத்தில் ரூ.8.47 லட்சம் மதிப்பில் ராமசாமி புரம் ஊரணியில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியி னையும், ரூ.6.09 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட் டார்.

    பாலவநத்தம் கிரா மத்தில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பில் சமுதாய கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பணியினையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடுகட்டும் பணியினையும், மலைப் பட்டி கிராமத்தில், 2020-23 பாரளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் ஊரணிக்கு வடக்கு திசையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி யினையும், ரூ.12.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×