search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மையங்களில்"

    • குழித்துறை அரசு ஆஸ்பத்திரியையும் பார்வையிட்டார்
    • பிரசவ பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்கேன் மையங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் பொறுப்பு அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவி னர் நாகர்கோவில், மார்த் தாண்டம் ஸ்கேன் மையங் கள், குழித்துறை அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங் களில் ஆய்வு செய்தனர். இதில் ஸ்கேன் மையங்களுக்கான லைசென்சு நகல் ஸ்கேன் மைய நுழைவிடத் தில் பார்வையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் முதல் தளத்தில் ஸ்கேன் அறையின் அருகேயே நோயாளிகளுக்கான கழிவறை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டது. 'படிவம் எப்' முறையாக பராமரிக்கப்பட வேண்டும் ஸ்கேன் மையத் தில் இடவசதி குறைவாக இருப்பதால் தக்க நடவ டிக்கை எடுத்து அதனை சரி செய்ய வேண்டும். மேலும் அனைத்து ஆவணங்களும் சரியாக பராமரிக்க வேண் டும் என்று அதன் பணியா ளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது.

    குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொது கழிவுநீர் வெளியேற்ற பொதுப்பணித் துறை மற்றும் குழித்துறை நகராட்சிக்கு தக்க அறிவுரை கூறுவதாக கலெக்டர் உறுதி அளித்தார். மேலும் அரசு மருத்துவமனையில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றின் எண்ணிக் கையை உயர்த்த வலியுறுத்தி னார்.

    பின்னர் அங்கு அனைத்து மருத்துவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆஸ்பத்திரியின் செயல்பாடு களை முன்னேற்றவும், அனைத்து ஸ்கேன்களையும் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளவும் கலெக்டர் அறிவுறுத்தினார். பிரசவ பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

    • ஈரோடு மாவட்டத்தில் 2ஆயித்து 222 வாக்குசாவடி மையங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தினை முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியானது வாக்காளர் பட்டியலினை 100 சதவிகிதம் சரி செய்யவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

    இப்பணியினை விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி நாளை (4-ந் தேதி) ஈரோடு மாவட்டத்தில் 2ஆயித்து 222 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு முகாமில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு அவரவர் வாக்குசாவடியில் உள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் 6-பி படிவத்தினை பூர்த்தி செய்து தருவதன் மூலம் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து ஈரோடு மாவட்டத்தினை முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் நாளை 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை பரவுதலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    இதில் 12 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 18 வயது மேற்பட்ட வர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக அனைத்து அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்களில் செலுத்தப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமையொட்டி நாளை அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1597 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணையாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி என 1.50 லட்சம் பேருக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

    மேலும் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 3196 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 70 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது மிக வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பி லிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.

    ஈரோடு மாவட்ட பொது மக்கள் அனைவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், அவருக்கு உதவியாக இரண்டு ஓட்டு பதிவு அலுவலர், மற்றும் பிற பணியாளர்கள் என 6 பேர் இருந்தனர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு–4, நம்பியூர் யூனியன் கெட்டிசெவியூர் பஞ்சாயத்து வார்டு எண்–10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–5, பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்–4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்–11, கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–1, புளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்–3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண்–2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இது தவிர அம்மாபேட்டை யூனியன் சிங்கம்பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2ல் இருவர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்–3 ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் இருவர், கோபி யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து, வார்டு எண்–1ல் இருவர், மொடக்குறிச்சி யூனியன் 46புதூர் பஞ்சாயத்து வார்டு எண்–1ல் நால்வர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் மூவர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்–2ல் மூவர் என, 7 பதவிக்கு அ.தி.மு.க, தி.மு.க. சுயேட்சை என 20 பேர் போட்டியில் உள்ளனர்.

    இந்த 7 பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சிங்கம்பேட்டை ஊராட்சி யில் ஒரு வாக்குச்சாவடி மையம், பெரிய புலியூரில் ஒரு வாக்குச்சாவடி மையம், தொப்பம்பாளையத்தில் ஒரு வாக்கு சாவடி மையம், கோட்டு புள்ளாபாளையத்தில் ஒரு வாக்குச்சாவடி மையம், 46 புதூரில் இரண்டு வாக்குச்சாவடி மையம், அத்தாணி பேரூராட்சியில் ஒரு வாக்கு சாவடி மையம், அம்மாபேட்டை பேரூராட்சியில் ஒரு வாக்குச்சாவடி மையம் என 8 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், அவருக்கு உதவியாக இரண்டு ஓட்டு பதிவு அலுவலர், மற்றும் பிற பணியாளர்கள் என 6 பேர் இருந்தனர். காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கொரோனா தாக்கம் காரணமாக பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.

    பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்து வாக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தார்கள். அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

    இதேபோல் வாக்குப்பதிவு நுழைவு வாயிலில் சானிடைசர்கள் கையில் தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    வெயில் காரணமாக சாமியான பந்தலும் போடப்பட்டிருந்தது. குடிநீர் வசதி கழிப்பறை வசதியும் செய்யப்பட்டு இருந்தது. பூத் சிலிப் வழங்கப்பட்டது. முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 ஊராட்சிகளில் வாக்கு சீட்டு முறையில் பொதுமக்கள் வாக்களித்தனர்.

    அத்தாணி, அம்மா–பேட்டை பேரூராட்சிகளில் மின்னணு வாக்கு பதிவு பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன் பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும்.

    தேர்தலை ஒட்டி ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள 24 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கும் வசதியாக இந்த பகுதியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், அரசு அரசு சார்ந்த நிறுவ–னங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

    ×