search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள்"

    • கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்

    திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் விலையில்லா மிதிவண்டிகளை  மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.ஸ்டாலின்குமார், ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு ரூ.42 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார்.
    • கிராமப் பகுதியில் இருந்து நகர்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேரமுடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்புமற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிவழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.

    ராமநாதபுரம் சட்டமன்றஉறுப்பினர் காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி ரூ.42 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை 850 மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    அப்ேபாது அவர் பேசியதாவது:-

    தமிழகஅரசின் இத்திட்டம் மிகச்சிறப்பான ஒன்றாகும். இதன் மூலம் கிராமப் பகுதியில் இருந்து நகர்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேரமுடியும். முன்பெல்லாம் நடந்து பள்ளிக்குவந்துசேரும் பொழுதுகாலவிரையம் ஆவதுடன் மனச்சோர்வும் உண்டாகும். இதனால் மனதைஒருநிலைப்படுத்திகல்விகற்பதுஎன்பதுகடினமாக இருந்துவந்தது. இது மட்டு மின்றி இதுபோன்றநிலையில் பலர்படிப்பைதொடர கூட முடியாமல் இருந்து வந்த காலம் அப்பொழுது உண்டு. ஆனால் இப்பொழுது அரசின் எண்ணற்ற திட்டங்களால் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தால் போதும் உயர்கல்வி வரைபடித்துபயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெ றுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ராமநாதபுரம் நகர்மன்றதலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மாவட்டகல்வி அலுவலர் சுதாகர் மற்றும் பள்ளி தாளாளர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

     திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

    கண்டுகொண்டான் மாணிக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் வேலம்மாள் ராஜேந்திரன், நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவர் பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் 11-ம் வகுப்பு படிக்கும் 78 மாணவர்கள்,71 மாணவியர்கள் என மொத்தம் 149 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் நகர்மன்ற தலைவி வழங்கினார்
    • சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் திலகவதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இந்தநிகழ்ச்சியில் திருமங்கலம் தி.மு.க. நகரசெயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், சின்னச்சாமி, வீரக்குமார், ஜமீலாபெளசியா ஆகி யோர் கலந்து கொண்டனர். தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதேபோல் திருமங்கலம் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    • சுற்றுச்சூழல் காக்கப்படுவதோடு உடல்நலத்தையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும்.
    • பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    உடல் ஆரோக்கியத்தி ற்காகவும், சுற்றுச்சூழலை காக்கவும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் சென்றவர்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தலா ஒரு கிலோ தக்காளி விலையில்லாமல் வழங்கப்பட்டது.

    தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை யிலான போக்குவரத்து காவலர்கள் அந்த வழியாக சைக்கிளில் வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அத்தியாவசிய செலவை கட்டுப்படுத்தவும் இது போன்று அன்றாடம் சைக்கிளை தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தி அவர்களுக்கு தலா 1 கிலோ தக்காளி விலையில்லாமல் வழங்கினர்.மேலும் அவர் கூறுகையில், சைக்கிளை பயன்படுத்தாமல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதால் இன்று சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சைக்கிளை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் காக்கப்படு வதோடு உடல்நலத்தையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

    வரலாறு காணாத அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து வரும் வேளையில் இது போன்ற நூதன விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் பொதுமக்களிடம் விலையில்லாமல் தக்காளி வழங்கப்படுவது தஞ்சை மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது .

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி,

    மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. வழங்கினார்

    அரியலூர்:

    ஜெயங்கொண்டத்தில் 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அரியலூர் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர் தண்டலை, பூவாணி பட்டு, வெத்தியார் வெட்டு, கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை அரசு பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தலைமை தாங்கினார். விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு 809 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    • திருவேங்கைவாசல் ஊராட்சியில் சொந்த நிதியில் 6 மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சைக்கிள் வழங்கினார்
    • மேலும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இருசக்கர வாகனம் வழங்குவதாக தெரிவித்து மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி திருவேங்கைவாசல் ஊராட்சியை சேர்ந்த வளையன்வயல் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 6 பேருக்கு சைக்கிள்களை தனது சொந்த நிதியில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வழங்கினார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களுக்கு சென்றார். அப்போது, வளையன்வயல் பகுதியில் பள்ளி மாணவர்கள் சிலர் வடமலாப்பூர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நாங்கள் பள்ளியில் இருந்து 2 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கும், வீட்டுக்கும் செல்கிறோம்.

    பத்தாம் வகுப்பு என்பதால் நடந்து சென்று படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது, சைக்கிள் வாங்கி தருமாறு கோரிக்கை விடுத்தனர். உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட டாக்டர் சி.விஜயபாஸ்கர், பள்ளி சென்று படிக்க ஏதுவாக பத்தாம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்களூக்கு தனது சொந்த நிதியிலிருந்து சி.வி.பி. பவுண்டேசன் மூலமாக 6 சைக்கிள்களை வழங்கினார். மேலும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இருசக்கர வாகனம் வழங்குவதாக தெரிவித்து மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • ன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள சித்தன்குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன்.

    இவர் கடந்த 11-ந்தேதி மதியம் தனது மோட்டார் சைக்கிளை சாமிதோப்பு பகுதியில் ஒரு ஓட்டல் அருகே சாவியுடன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை கீழமணக்குடி சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்த போது அதில் வந்தவர்கள் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 26), மாடம்பிள்ளை தர்மத்தை சேர்ந்த மகேந்திரன் (20) என்பதும், இவர்கள் சாமி தோப்பில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதில் சிறையில் அடைக் கப்பட்ட கண்ணன் மீது தென் தாமரைகுளம், அஞ்சு கிராமம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
    • இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள சாணத்திகல்மேட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சிவகாமி (50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். சிவகாமி இரவு தனது வீட்டின் அருகே ரோட்டை கடந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் எதிர்பாராத விதமாக சிவகாமி மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் சிவகாமியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவகாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×