search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "head master"

    • விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

     திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

    கண்டுகொண்டான் மாணிக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் வேலம்மாள் ராஜேந்திரன், நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவர் பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் 11-ம் வகுப்பு படிக்கும் 78 மாணவர்கள்,71 மாணவியர்கள் என மொத்தம் 149 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மாணவிகளை பகடைக்காயாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.
    • ஆசிரியர்களில் ஒருவர், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒரு புகார் அளித்தார்.

    மதுரை :

    மதுரை கருப்பாயூரணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு வைத்திருந்த புகார் பெட்டியில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு கடிதம் கிடந்தது. அதில், பள்ளியில் உள்ள 2 ஆசிரியைகள் மற்றும் ஒரு ஆசிரியர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் போலீசுக்கும், மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கும் தகவல் கொடுத்தார்.

    இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு நடத்திய விசாரணை அடிப்படையில், முதற்கட்டமாக பள்ளியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகள் என 3 பேர் மீது கருப்பாயூரணி போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, போக்சோ வழக்கில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒரு புகார் அளித்தார். அதில் சக ஆசிரியர்கள் மீதான விரோதப்போக்கில் மாணவிகளை வைத்து, பொய் புகாரை தலைமை ஆசிரியர் அளித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். எனவே இதுபற்றி விசாரணை நடத்துமாறு, தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி புலன் விசாரணை நடந்தது.

    பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 2 மாணவிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் ஊமச்சிகுளம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    அப்போது அந்த மாணவிகள், தாங்களாக அந்த கடிதத்தை எழுதவில்லை என்றும், பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதால்தான் அவ்வாறு செய்தோம் எனவும், யாரும் எங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இது சம்பந்தமாக கோர்ட்டு நடத்திய விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கிடையே ஏற்பட்ட பகையில், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகளை பழிவாங்க மாணவிகளை பகடைக்காயாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பயன்படுத்தி பாலியல் புகார் அளிக்க வைத்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து, இதுகுறித்து இறுதி அறிக்கை, கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி, மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலும், வழக்கின் சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் கடந்த 31-ந் தேதி பொய் புகார் என தீர்ப்பளித்து, வழக்கு முடிக்கப்பட்டது.

    மேற்கண்ட தகவல்கள் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தனது சுயலாபத்திற்காக மாணவிகளை பொய் புகார் அளிக்க வைத்த தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

    • பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம்.

    உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த குழந்தையின் வகுப்பறையில் இருந்து அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது.

    உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்தாள். பின்னர் பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளை ஊழியர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு முன்னதாகவே வீடு திரும்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கோவையை சேர்ந்த ஸதி தேர்வாகியுள்ளார். #NationalTeachersAward
    கோவை:

    மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த தலைமை ஆசிரியை ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    அதன்படி இந்த விருதுக்கு கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஆர்.ஸதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-

    நான் மலுமிச்சம்பட்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக வந்தபோது 146 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்ததால் தற்போது 270 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் படித்து வருகின்றனர்.

    எங்கள் பகுதி பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக பள்ளியில் சிறந்த 6 மாணவ- மாணவிகளை தேர்வு செய்து ‘குட்டி கமாண்டோ’ என்ற அமைப்பை உருவாக்கினேன். கடந்த கல்வி ஆண்டு முதல் டேப்லெட் (கையடக்க கணினி) மூலம் மாணவ-மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தியதற்கு பரிசாக இந்த விருதுக்கு நான் தேர்வாகி உள்ளதாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சர்ச்சைக்குள்ளான தலைமை ஆசிரியரை நீக்க கோரி அரசு பள்ளிக்கு கிராம மக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகில் உள்ள ஆர்.கோம்பை நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் மோகன்தாஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதவி கல்வி அதிகாரி அருண்குமாரையும், அதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணையும் இணைத்து தவறாக சித்தரித்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக்கில் பதிவிட்டார்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அருண்குமார் புகார் அளித்திருந்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து பள்ளிக்கு வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை வலியுறுத்தி பரபரப்பு போஸ்டர்களை ஒட்டினர்.

    புரோக்கர் தொழிலுக்காக போலியாக சங்கம் வைத்து செயல்படுவது நேர்மையாக செயல்படும் கல்வி அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது, பெண் அலுவலர்களை கொச்சைப்படுத்துவது, சாதி மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டங்களை தவறாக பயன்படுத்துவது போன்ற குற்றங்களை செய்து வரும் மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

    இன்று பள்ளிக்கு வந்த கிராம மக்கள் தலைமை ஆசிரியரை உள்ளே நுழைய விடாமல் நுழைவு வாயில் கேட்டை பூட்டினர். இது குறித்து தகவல் அறிந்ததும் எரியோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் டி.எஸ்.பி.யிடம் இது குறித்து புகார் அளிக்குமாறும் அவர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உதவுவார் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    பள்ளிக்கூடத்தில் கடந்த 7 மாதமாக ஏழை மாணவியை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டு சேர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பீகாரில் சரன் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் பர்சகர் என்ற ஊரில் திபேஸ்வர் பால் வித்யா நிகேதன் எனும் பள்ளிக்கூடம் உள்ளது.

    அந்த பள்ளியில் சுமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    மாணவி சுமிதா அனைவரிடமும் மிக எளிதாக பழகும் இயல்பு கொண்டவள். உடன் படிக்கும் மாணவர்களிடமும் சகஜமாக பழகி வந்தாள். ஆனால் மாணவர்களில் சிலர் அதை தவறான கண்ணோட்டத்துடன் நினைத்தனர்.

    கடந்த டிசம்பர் மாதம் பள்ளி அரையாண்டு தேர்வு நடந்த சமயத்தில், அந்த மாணவி கழிவறைக்கு சென்ற போது 5 மாணவர்கள் பின் தொடர்ந்து சென்று அவளை மடக்கிப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்தனர். 5 மாணவர்களும் அந்த மாணவியை கூட்டு சேர்ந்து கற்பழித்தனர்.

    மாணவி சுமிதா பலாத்காரம் செய்யப்பட்டதை மாணவர்களில் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார். பிறகு 5 மாணவர்களும் அந்த செல்போன் பதிவு காட்சியை காண்பித்து மாணவியை மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். நாளடைவில் அந்த 5 மாணவர்களின் நண்பர்களுக்கும் இது பற்றி தெரிய வந்தது.

    அவர்களும் அந்த செல்போன் காட்சியை காட்டி மாணவியை மிரட்டி கற்பழித்தனர். 15 மாணவர்கள் சுமார் 1 மாதமாக இந்த கொடூரத்தை அடிக்கடி செய்து வந்தனர். ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவி சுமிதா, இந்த கொடூரத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது தெரியாமல் தவித்து வந்தார்.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், தனது மாணவர்களில் சிலரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை பார்த்தார். சந்தேகத்தின் பேரில் ஒரு மாணவனின் செல்போனை வாங்கி அவர் ஆய்வு செய்த போது, மாணவி சுமிதா பாலியல் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் தலைமை ஆசிரியர் உதயகுமார் சிங்கிடம் தெரிவித்தார். செல்போன் பதிவு காட்சிகளையும் காண்பித்தார். இதைத் தொடர்ந்து மாணவி சுமிதாவையும், சில மாணவர்களையும் அழைத்து விசாரித்தார்.

    மாணவர்கள் மீது அவர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று ஆசிரியர் எதிர்பார்த்தார். ஆனால் தலைமை ஆசிரியர் உதய்குமார் சிங்குக்கு மனநிலை வேறு மாதிரி இருந்தது. செல்போன் காட்சிகளைப் பார்த்த அவர் மனம் சபலப்பட்டது. அவரும் மாணவியை அடைய துடித்தார்.

    மாணவி சுமிதாவை தனியாக அழைத்து விசாரித்த அவரும் அந்த மாணவியை கற்பழித்தார். மாணவியிடம் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அழைத்து அவர் தனது காம இச்சையை தனித்துக் கொண்டார். கடந்த 7 மாதமாக இந்த கொடூரம் நடந்தது.

    இதற்கிடையே மாணவி சுமிதாவை 15 மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வி‌ஷயம் 2 ஆசிரியர்களுக்கும் தெரிய வந்தது. அவர்களும் அந்த மாணவியை காப்பாற்றவில்லை. மாறாக அவர்களும் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தனர்.

    15 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என 18 பேரிடமும் அந்த மாணவி சிக்கி 7 மாதமாக படாதபாடுபட்டார். பள்ளி வளாகத்திலேயே 7 மாதமாக இந்த பாலியல் பலாத்காரம் நடந்தது.

    இந்த நிலையில் மராட்டியத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மாணவி சுமிதாவின் தந்தை கடந்த வாரம் பீகார் வந்திருந்தார். அவர் தனது மகளிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பார்த்து விசாரித்தார். அப்போது தான் சுமிதா 7 மாதமாக மிரட்டி கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் இக்மா போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். ஆனால் போலீசார் முதலில் அந்த புகாரை ஏற்க மறுத்தனர். இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் மாணவி சுமிதாவும், அவர் தந்தையும் முறையிட்டனர்.

    இதையடுத்து இக்மா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் உதய்குமார் சிங், ஆசிரியர் பாலாஜி, இரண்டு மாணவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ஒரு ஆசிரியர் மற்றும் 13 மாணவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 14 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    பள்ளிக்கூடத்தில் கடந்த 7 மாதமாக ஏழை மாணவி மிரட்டி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பீகாரில் சரன் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்று விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.
    ×