search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Teachers Award"

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் வகையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகள், சான்றிதழ்களை வழங்கி வருகின்றன.

    நடப்பாண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது உயர்கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் இருந்து 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    பழைய முறையைப் பின்பற்றி 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாதி பாளையம் மற்றும் கொளப்பலூர் ஆகிய ஊராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.54 கோடி மதிப்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.

    இந்த கட்டிட பணியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நம்பியூர், எலத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசு பள்ளியிலும் படித்த மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு உதவவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவர்கள் அன்புள்ளம் கொண்டவர்களும் முன் வந்துள்ளனர்.

    அவர்களுடன் அரசும் இணைந்து தமிழகத்தில் உள்ள 57 ஆயிரம் அரசு பள்ளிகளில் தனியாரை மிஞ்சுகின்ற அளவிற்கு கடடமைப்பு வசதிகளுடன், உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சித்தோட்டிலிருந்து கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக 25 கன்டெய்னர் லாரிகள் மூலம் ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்பில் நிவாரண பொருள்கள் அனுப்பப்படுகிறது. நெல்லை மாவட்டத்திலிருந்து 15 கண்டெய்னர்கள் அனுப்ப திட்டமிட்டப்பட்டுள்ளது.


    மத்திய அரசின் நல்லாசிரியர் விருது இதுவரை 22 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 1 ஆசிரியரை தேர்வு செய்திருக்கிறார்கள்.

    மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டுள்ளேன். மீண்டும் பழைய முறையை பின்பற்ற வேண்டும். 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்துரவிச் சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம் சிறுவலூர் மனோகரன், பிரினியோ கணேஷ், கந்த வேல் முருகன், காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். #TNMinister #Sengottaiyan
    மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கோவையை சேர்ந்த ஸதி தேர்வாகியுள்ளார். #NationalTeachersAward
    கோவை:

    மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த தலைமை ஆசிரியை ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    அதன்படி இந்த விருதுக்கு கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஆர்.ஸதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-

    நான் மலுமிச்சம்பட்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக வந்தபோது 146 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்ததால் தற்போது 270 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் படித்து வருகின்றனர்.

    எங்கள் பகுதி பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக பள்ளியில் சிறந்த 6 மாணவ- மாணவிகளை தேர்வு செய்து ‘குட்டி கமாண்டோ’ என்ற அமைப்பை உருவாக்கினேன். கடந்த கல்வி ஆண்டு முதல் டேப்லெட் (கையடக்க கணினி) மூலம் மாணவ-மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தியதற்கு பரிசாக இந்த விருதுக்கு நான் தேர்வாகி உள்ளதாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×