search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடி"

    • மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை,

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே கரிச்சிபாளையத்தில் அட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளி ரவு கோவிலில் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் கள் ரூ.8 ஆயிரம் பணத்துடன் இருந்த உண்டியலை திருடி தப்பிச் சென்றனர்.

    பின்னர் கொள்ளையர்கள் இந்த கோவிலில் அருகே உள்ள வீரமாஸ்தி அம்மன் கோவிலில் ரூ.2 ஆயிரம் பணத்துடன் இருந்த உண்டியலையும் திருடினர். இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் செந்தில் ஆண்டவர் கோவிலில் உண்டியல் மற்றும் அரிவாள் ஆகியவற்றையும் திருடி சென்றனர்.

    மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளையர் உண்டியலை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூதாட்டி பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    பீளமேடு,

    கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் 50 வயது பெண்.

    இவர் திருமண தகவல் மையத்தில் மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்திருந்தார்.

    இதை பார்த்த வாலிபர் ஒருவர், மூதாட்டியை தொடர்பு கொண்டு, தனது பெயர் ஹரிஷ் என்றும், வரன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    மேலும் நான் இது தொடர்பாக உங்களை வீட்டில் வந்து சந்தித்து பேசுகிறேன் என கூறினார். அதன்படி சம்பவத்தன்று, அந்த வாலிபர் மூதாட்டியின் வீட்டிற்கு வந்தார்.

    அவர் மூதாட்டியின் உறவினர் ஒருவரின் பெயரை சொல்லி, அவரை எனக்கு நன்றாக தெரியும் என கூறினார். இதை மூதாட்டியும் நம்பி விட்டார்.

    பின்னர் அவரை உள்ளே அழைத்து சென்று டீ போட்டு கொடுத்தார். அவரும் வாங்கி குடித்தார். அப்போது மூதாட்டி, நான் மாடியில் துணிகளை காய போட்டுள்ளேன. அதனை எடுத்து வருவதாக கூறி விட்டு மேலே சென்றார்.

    சிறிது நேரம் கழித்து கீழே வந்தார். அப்போது, வீட்டிற்குள் இருந்த வாலிபரை காணவில்லை. இதையடுத்து மூதாட்டி வீட்டிற்குள் சென்றார்.

    அப்போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார். உடனே சென்று அதனை பார்த்தார்.

    அதில் வைத்திருந்த செயின், கம்மல் உள்பட 7.5 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மூதாட்டிக்கு, வீட்டிற்கு வந்த வாலிபர் தான் தன்னை ஏமாற்றி பேச்சு கொடுத்து விட்டு, நான் மாடிக்கு சென்றபோது, நகையை எடுத்து கொண்டு ஓடியது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • சேலம் செவ்வாய்ப் பேட்டை நரசிம்மன்செட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (38), செவ்வாய்ப்பேட்டையில் கற்பூரம் மொத்த வியாபா ரம் செய்து வருகிறார்.
    • அப்போது கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப் பேட்டை நரசிம்மன்செட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (38), செவ்வாய்ப்பேட்டையில் கற்பூரம் மொத்த வியாபா ரம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி மது அருந்து வதால் அவரது மனைவி 2 குழந்தைகளுடன் துறையூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநி லையில் சம்பவத்தன்று இரவு மது போதையில் சிவக்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த நகை களை யாரோ மர்ம நபர்கள் இரவில் வீடு புகுந்து கொள்ளையடித்ததை அறிந்த அவர் அன்னதா னப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

    • பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றனர்.
    • போலீசார் அவர்களை கைது செய்து, பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் விளந்திட சமுத்திரம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது.

    இங்கு பெட்ரோல் விற்பனை நிலையம் பூட்டியிருந்த நேரத்தில் அங்கு வந்த 2 பேர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றனர்.

    இது குறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    உடனடியாக சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அதில் 2 நபர்கள் பேட்டரிகளை திருடி செல்வது தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் பேட்டரிகளை திருடி சென்றவர்கள் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த முத்து மற்றும் விளந்திட சமுத்திரம் பகுதியை சேர்ந்த இலக்கியன் என்பது தெரிந்தது.

    உடனடியாக போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்து, திருடிச் சென்ற பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • ன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள சித்தன்குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன்.

    இவர் கடந்த 11-ந்தேதி மதியம் தனது மோட்டார் சைக்கிளை சாமிதோப்பு பகுதியில் ஒரு ஓட்டல் அருகே சாவியுடன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை கீழமணக்குடி சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்த போது அதில் வந்தவர்கள் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 26), மாடம்பிள்ளை தர்மத்தை சேர்ந்த மகேந்திரன் (20) என்பதும், இவர்கள் சாமி தோப்பில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதில் சிறையில் அடைக் கப்பட்ட கண்ணன் மீது தென் தாமரைகுளம், அஞ்சு கிராமம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×