பெரியநாயக்கன்பாளையம் அருகே 3 கோவில்களில் உண்டியலை திருடி சென்ற கொள்ளையர்கள்

மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே  3 கோவில்களில் உண்டியலை திருடி சென்ற கொள்ளையர்கள்
Published on

கோவை,

கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே கரிச்சிபாளையத்தில் அட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளி ரவு கோவிலில் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் கள் ரூ.8 ஆயிரம் பணத்துடன் இருந்த உண்டியலை திருடி தப்பிச் சென்றனர்.

பின்னர் கொள்ளையர்கள் இந்த கோவிலில் அருகே உள்ள வீரமாஸ்தி அம்மன் கோவிலில் ரூ.2 ஆயிரம் பணத்துடன் இருந்த உண்டியலையும் திருடினர். இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் செந்தில் ஆண்டவர் கோவிலில் உண்டியல் மற்றும் அரிவாள் ஆகியவற்றையும் திருடி சென்றனர்.

மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளையர் உண்டியலை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com