search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீளமேடு அருகே மூதாட்டியை ஏமாற்றி 7½ பவுன் நகையை திருடி சென்ற வாலிபர்
    X

    பீளமேடு அருகே மூதாட்டியை ஏமாற்றி 7½ பவுன் நகையை திருடி சென்ற வாலிபர்

    • மூதாட்டி பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    பீளமேடு,

    கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் 50 வயது பெண்.

    இவர் திருமண தகவல் மையத்தில் மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்திருந்தார்.

    இதை பார்த்த வாலிபர் ஒருவர், மூதாட்டியை தொடர்பு கொண்டு, தனது பெயர் ஹரிஷ் என்றும், வரன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    மேலும் நான் இது தொடர்பாக உங்களை வீட்டில் வந்து சந்தித்து பேசுகிறேன் என கூறினார். அதன்படி சம்பவத்தன்று, அந்த வாலிபர் மூதாட்டியின் வீட்டிற்கு வந்தார்.

    அவர் மூதாட்டியின் உறவினர் ஒருவரின் பெயரை சொல்லி, அவரை எனக்கு நன்றாக தெரியும் என கூறினார். இதை மூதாட்டியும் நம்பி விட்டார்.

    பின்னர் அவரை உள்ளே அழைத்து சென்று டீ போட்டு கொடுத்தார். அவரும் வாங்கி குடித்தார். அப்போது மூதாட்டி, நான் மாடியில் துணிகளை காய போட்டுள்ளேன. அதனை எடுத்து வருவதாக கூறி விட்டு மேலே சென்றார்.

    சிறிது நேரம் கழித்து கீழே வந்தார். அப்போது, வீட்டிற்குள் இருந்த வாலிபரை காணவில்லை. இதையடுத்து மூதாட்டி வீட்டிற்குள் சென்றார்.

    அப்போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார். உடனே சென்று அதனை பார்த்தார்.

    அதில் வைத்திருந்த செயின், கம்மல் உள்பட 7.5 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மூதாட்டிக்கு, வீட்டிற்கு வந்த வாலிபர் தான் தன்னை ஏமாற்றி பேச்சு கொடுத்து விட்டு, நான் மாடிக்கு சென்றபோது, நகையை எடுத்து கொண்டு ஓடியது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×